தீபாவுக்கு குவியும் கூட்டம்; குமையும் அமைச்சர்கள்
DINAMALAR
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலில் குதிப்பது
கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், அவரது இல்லம் தேடி, தினந்தோறும்
ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தி.மு.க., -
தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சித் தொண்டர்களும், தீபாவின் பின்னால் அணி
திரள தயாராகி விட்டனர். பல்வேறு இயக்கங்கள்: ஈரோடு, சேலம், அரியலூர்,
பெரம்பலூர், திருப்பூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களும் தீபா
பேரவை, அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா அ.தி.மு.க., என்று பல்வேறு
பெயர்களில் இயக்கங்களை தன்னிச்சையாக துவங்கி உள்ள அ.தி.மு.க., தொண்டர்கள்,
தீபாவை தலைமையேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.தொண்டர்கள் இப்படி எல்லா
எதிர்ப்புகளையும் மீறி, தீபா பின்னால் அணிவகுப்பது, தீபாவுக்கே ஆச்சரியமாக
உள்ளது.
அதனால், தீவிரமாக அரசியலில் ஈடுபடுவது குறித்து, அவர்
ஆலோசித்து வருகிறார்.இந்நிலையில், கரூரிலும்; சென்னையிலும்; ஈரோட்டிலும்
தீபா ஆதரவாளர்கள் கூட்டத்தைப் பார்த்து, ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும்
ஆடிப் போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, அமைச்சரவை வட்டாரங்கள்
கூறியதாவது: தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு செல்வாக்கை பெருக்க செய்ய
வேண்டும் என, கட்சியினருக்கு, மேலிட உத்தரவாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து,
கட்சிகளின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும், சசிகலாவின் செல்வாக்கை
பெருக்க நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. ஒவ்வொரு
மாவட்டத்திலும், சசிகலாவின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக நிறைய
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்
ஆங்காங்கே உள்ள மாவட்ட
அமைச்சர்கள்.தொண்டர்களை அழைத்தால், யாரும் வருவதில்லை. ஐநூறு ரூபாய் பணம்;
அழைத்துச் சென்று, திரும்பி வந்து விடுவதற்கு வாகன வசதி; பிரியாணி
பொட்டலம்; வாட்டர் பாட்டில் என, எல்லாவற்றையும் கொடுத்த பின்னரும்,
அமைச்சர்களால் பெரிய அளவில் கூட்டம் கூட்ட முடியவில்லையாம்.
தீபா ஆதரவாளர் கூட்டம்: சமீபத்தில் கரூரில், தீபா ஆதரவாளர்கள் கூட்டிய கூட்டத்திற்கு, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர், கைக் காசை செலவு செய்து, வந்தது, அரசியல் வட்டாரத்தை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. காலை நாலரை மணிக்கெல்லாம், தீபாவுக்காக போஸ்டர் ஒட்டி கேன்வாஷ் செய்யும் தன்னெழுச்சி தொண்டர்கள், அமைச்சர்களின் நிலைமையை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்கின்றனர்.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

Dailyhunt
No comments:
Post a Comment