வாழ்க்கைக்கு அடையாளம் கொடுத்த ஆசிரியரை மறக்காத மாணவர்கள்: ஓய்வுபெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாராட்டு விழா
பெற்றோரையும், உறவினர்களையும் தாண்டி மாணவர்களுக்கான சமூக உறவை ஏற்படுத்தித் தரும் உன்னத இடம் பள்ளிக்கூடம். இங்கிருந்துதான் சமூகத்தின் பல் வேறு அம்சங்கள் குறித்து படிக்க வும், படித்தவற்றைக் கொண்டு பக்குவமடையவும், கற்ற கல்வி யால் வாழ்க்கையை நன்கு அமைத் துக்கொள்ளவும் கற்றுக்கொள்கி றார்கள்.
மாணவப் பருவத்தில் பள்ளிக் கூடம் கசந்தாலும், படித்து நல்ல நிலைக்குச் செல்ல அச்சாணியாக இருந்தது பள்ளிக்கூடமும் அங்கு கல்வி போதித்த ஆசிரியர்களும் தான் என்பதை உணர்ந்து, அவர் களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அவர்களது அர்ப்பணிப்பை அங்கீ கரிக்க வேண்டும் என்று சமூகத் தில் நல்ல நிலைக்கு வந்த ஒவ் வொரு பழைய மாணவரின் மனசாட்சியிலும் அசரீரியாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
அந்த அசரீரியை உண்மையாக் கிய நிகழ்வாக இருந்தது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத் துள்ள ஆலங்கோட்டை திருவள்ளு வர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற தலைமையாசிரி யருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பாராட்டு விழா.
ஆசிரியர்- மாணவர் உறவைப் பறைசாற்றும் இந்த நெகிழ்ச்சியான விழாவின் நாயகர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோ.பாஸ்கரன். மன்னார்குடியை அடுத்துள்ள ஆலங்கோட்டையில் உள்ள திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1964-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டுவரை ஆசிரி யராகவும், தலைமை ஆசிரியராக வும் பணியாற்றியவர்.
இவரிடம் படித்த மாணவர்கள் பல்வேறு அரசுத் துறைகளி லும், வெளிநாடுகளிலும் பணியாற்று கின்றனர். கண்டிப்பு, நேர்மை, அரவணைப்பு ஆகிய மூன்றையும் தனது கொள்கையாகப் பாவித்து பணியாற்றிய பாஸ்கரன், அப்பள்ளி உயர்நிலை, மேல்நிலை என தரம் உயரக் காரணமானவர்களில் முக்கியப் பங்காற்றியவர்.
ஒவ்வொரு மாணவரைப் பற்றி யும் அவர்களின் குடும்பப் பின்ன ணியுடன் தெரிந்து வைத்திருப்பார் இவர். கல்வி, விளையாட்டில் நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இணை யாக இந்தப் பள்ளியை மேம்படுத்தி யவர். பள்ளியின் அருகிலேயே வசிக்கும் கோ.பாஸ்கரன், தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோது வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார் என்ற தகவல் தெரிந்தால்போதும், பட்டாம்பூச்சிகளாகப் பள்ளி வளாகத்தில் அங்குமிங்கும் சுற்றித் திரியும் மாணவ, மாணவிகள், அடுத்த நிமிடம் அமைதியாகச் சென்று வகுப்பறையில் ஆஜராகி விடுவார்கள்.
மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்கும் தக்க வழிகாட்டல்களைத் தந்து ஆசிரியராக மட்டுமல்லாமல், ஊரில் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் கோ.பாஸ்கரன் என்று அவரது பெருமைகளைப் பட்டியலிடுகின்றனர், இவரிடம் படித்த பழைய மாணவர்கள்.
இவரிடம் படித்து ஆசிரியரான பலர் தற்போது தலைமை ஆசிரி யர்களாகப் பணியாற்றுகின்றனர். பாராட்டு விழாவில் கலந்துகொண்ட இந்த தலைமை ஆசிரியர்கள், நிகழ்ச்சியில் பேசும்போது, “பாஸ் கரன் சார், தலைமை ஆசிரியர் களுக்கெல்லாம் தலைமை ஆசிரி யர்” என்று பாராட்டியது பொருத்த மாக இருந்தது.
கோ.பாஸ்கரன்
இதுகுறித்து, பாராட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒரு வரும் மெக்கானிக்கல் இன்ஜினீய ரிங் முடித்து, சிங்கப்பூரில் பணி யாற்றிவிட்டு தற்போது விவசாயம் செய்துவரும் பாலமுருகன் கூறும் போது, “கடந்த 1997-ம் ஆண்டு பணி ஓய்வுபெற்றபோது, நாங்கள் பாராட்டு விழா நடத்துகிறோம் என்று கேட்டபோது, வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தொடர்ந்து, இவர் மறுத்து வந்த நிலையில் பள்ளியில் பணி ஓய்வுபெறும் மற்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடத்த இயலாமல் போய்விட்டது.
இந்தநிலையில், அவரிடம் படித்து நல்ல நிலையில் உள்ள பலரும் ஒன்றுசேர்ந்து சென்று, பாஸ்கரன் சாரைச் சந்தித்து அனுமதி கேட்டோம். எங்களின் விருப்பத்தையும், அதன் தீவிரத்தை யும் உணர்ந்து ஒப்புக்கொண்ட அவர், விழாவில் தனக்கு ஒரு சால்வை மட்டும் போட்டால் போதும், பரிசுப்பொருட்கள் எதுவும் தரக்கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இருப்பினும், அவரிடம் படித்த பழைய மாணவர்கள் நிதியை வாரி வழங்கினர். அந்த நிதியை பாஸ்கரன் சாரின் பெயரால் அறக்கட்டளை தொடங்கி, இப் பள்ளியில் படிக்கும் மாணவர் களைக் கல்வியில் மேம்படுத்த, பரிசுகளை வழங்கி ஊக்கப் படுத்தலாம் என திட்டமிட்டுள்ளோம். எங்கள் தலைமை ஆசிரியரைப் பாராட்டியதுடன், 1997-ம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வுபெற்ற இப்பள்ளி ஆசிரியர்கள் 18 பேரையும் பாராட்டியுள்ள மன நிறைவு இந்த விழாவால் ஏற்பட்டுள்ளது” என்றார்.
மாணவர்களின் நலனுக்காகப் பாடுபட்ட தலைமை ஆசிரியருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திர ளாகக் கலந்துகொண்டு, அவரைப் பாராட்டினர்
No comments:
Post a Comment