Tuesday, January 31, 2017

ரூ.10 நாணயம் படுத்தும் பாடு: கலெக்டரிடம் வாலிபர் புகார்
சேலம்,:வங்கியில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக கூறி, கடைக்காரர் ஒருவர், அவற்றை மாலையாக அணிந்து வந்து, சேலம் கலெக்டரிடம் புகார் அளித்தார்.

சில நாட்களாக, 10 ரூபாய் நாணயங்களை, வியாபாரிகள் முதல் வங்கிகள் வரை, வாங்க மறுப்பதால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.சேலத்தைச் சேர்ந்த சேகர், 32, என்பவர், 10 ரூபாய் நாணயங்களை, பிளாஸ்டிக் பைகளில் மாலை போல் தயாரித்து, உடல் முழுவதும் அணிந்தபடி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.சேகர் கூறியதாவது:
கறிக்கடை வைத்துள்ளேன். வியாபாரம் மூலம், 2,000 ரூபாய் வரை, 10 ரூபாய் நாணயங்கள் சேர்ந்தன. அவற்றை, வணிக நிறுவனங்களோ, தனி நபர்களோ வாங்க மறுத்தனர்.
மல்லுார் கனரா வங்கியில், என் வங்கி கணக்கில் டிபாசிட் செய்ய சென்றேன். ஆனால், வங்கியில் வாங்க மறுத்தனர். இது தொடர்பாக, கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் சம்பத் கூறுகையில், ''ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி, 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டு
உள்ளது. அவற்றை, வங்கி மற்றும் நிறுவனங்கள் வாங்க மறுக்கக்கூடாது என்பதும், அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.எச்சரிக்கைசேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பாண்டியன் கூறியதாவது:வங்கிகள், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்ததால், வேறு வழியின்றி, நாங்களும் வாங்கவில்லை. தற்போது, அந்த நாணயங்களை, பெற்று கொள்வதாக, வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே, அரசு பஸ்களில், இனி, 10 ரூபாய் நாணயங்கள் ஏற்று கொள்ளப்படும். பயண சீட்டுக்கான முழு தொகையை கூட, 10 ரூபாய் நாணயங்களாக, பயணிகள் வழங்கலாம்.இது தொடர்பாக, 32 கிளை மேலாளர்களுக்கும் தெரியப்படுத்தி, அறிவிப்பு பலகை மூலம், 8,000 கண்டக்டர்களுக்கு தகவல் கொடுக்க,
உத்தரவிடப்பட்டுள்ளது.அதையும் மீறி, 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால், புகார் செய்யலாம். கண்டக்டர்கள் மீது, கடும் நடவடிக்கை பாயும்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024