ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மெல்போர்னையே திரும்பி பார்க்க வைத்த ஆஸி. தமிழர்கள்
சிட்னி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவில்
வசிக்கும் தமிழர்கள் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரில் இன்று மாபெரும்
அமைதி கூடல் நடத்தியுள்ளனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படவில்லை. இது குறித்த வழக்கிலும் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் தமிழர்கள் வியாழக்கிழமை அமைதி கூடல் நடத்தினர்.
மேலும் மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்கள் விக்டோரியா ஹவுஸ் முன்பு இன்ற மாலை 6 மணிக்கு திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதி கூடல் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகளை யாரும் துன்புறுத்துவது இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு இந்த அளவில் தமிழர்கள் கூடியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இதே போன்று சிட்னி நகரில் வசிக்கும் தமிழர்கள் ஓபரா ஹவுஸ் முன்பு திரண்டு அமைதி கூடல் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்தில் போராடும் சக தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இந்த போராட்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
source: oneindia.com

Dailyhunt
No comments:
Post a Comment