கோவை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், போராட்டத்தின் போது கிடைத்த புதிய நட்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நேற்று முடிவுக்கு வந்த நிலையில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், இணையதளங்களில் வெளியாகும் அனைத்து தகவல்களும் உண்மையானவை அல்ல. அவற்றின் நம்பத்தன்மையை இளைஞர்கள் ஆராய வேண்டும். சமூக தளங்களில் வெளியாகும் தகவல்கள் அனைத்தையுமே இளைஞர்கள் நம்ப வேண்டாம். அவற்றை பரப்பவும் வேண்டாம்.
மேலும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஏராளமானோர் புதிதாக நட்பாகியிருப்பார்கள். அதுபோன்ற நட்பு வட்டத்தில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சிலர், இளைஞர்களை தொடர்பு கொண்டு தொலைபேசி எண்களைக் கொடுத்து பேசச் சொல்வார்கள். அதுபோன்ற புதிய நட்புகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். பெற்றோர்களும், பிள்ளைகளின் நட்பு வட்டத்தை அறிந்து கவனமாக இருங்கள் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment