Wednesday, January 25, 2017

முக்கிய பிரச்சினைகளை மறக்கடித்த ஜல்லிக்கட்டு போராட்டம்: அடுத்து என்ன செய்யப்போகிறது இளைஞர் பட்டாளம்?

ஜல்லிக்கட்டுக்காக ஒரு வாரமாக மாணவர்களும் இளைஞர்களும் நடத்தி வந்த தன்னெழுச்சிப் போராட்டம், தமிழக அரங்கில் தகித்துக் கொண்டிருந்த பல முக்கியப் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி மழுங்கடித்துவிட்டது.

எந்தவிதமான சுயபலனும் எதிர்பாராமல் மாணவர்களும் இளைஞர்களும் கைகோர்த்து நடத்திய மெரினா அறவழிப் புரட்சி, வெற்றி அடைந்திருக் கிறது. அகிம்சையை மிஞ்சிய ஆயுதம் எதுவும் இல்லை என்பதை இந்தப் போராட்டத் தின் மூலம் மீண்டும் ஒருமுறை உலகுக்கே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் நம் இளைஞர்கள்.
இது ஒருபுறமிருக்க, ஜல்லிக் கட்டுக்காக நடந்த போராட்டங் களால் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருந்த வேறு பல முக்கியப் பிரச்சினைகள் பின் னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதை யும் உணர முடிகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், ‘‘டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டும் அதிர்ச்சியிலும் உயிரிழந்துள்ள னர். இதற்கு தமிழக அரசு என்ன பரிகாரம் தேடப் போகிறது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம், அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக கிளம்பிய அதிருப்தி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிர வேசம் என தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியது. ஆனால், ஜல்லிக் கட்டு போராட்டத்தின் தாக்க மானது மற்ற விஷயங்கள் அனைத்தையும் தமிழக மக் களிடம் இருந்து அந்நியப்படுத்தி விட்டது’’ என்றனர்.

ஒதுங்கிக் கொண்ட முகங்கள்

மெரினா கூடிய இளைஞர் கள், முதல்வர் பன்னீர்செல்வம் தங்களிடம் வந்து பேசவேண்டும் என்றனர். ஆனால், முதல்வரோ ஆளும் கட்சியினரோ மெரினா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவான பிரபல முகங்கள் சிலர், ‘கட்டுக்கோப்பான இந்த அறவழி போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே நாம் திரும்பிப் பார்க்க வைத் திருக்கிறோம். என்ன ஆனாலும் சரி, நாம் கேட்டது கிடைக்கும் வரை போராட்டத்தை விடக் கூடாது’ என போராட்டக் களத்து இளைஞர்களை உசுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது விவசாயிகள் மரணம் உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளை மறக்கடிப்பதற்காக இந்தப் போராட்டங்கள் வளர்க்கப்பட்ட தோ என்ற ஐயப்பாடு எழுகிறது. தேவையானபோது போராட்டத்தை வளரவிட்டு, தேவையில்லை என்றதும் போராட்டத்தை கலைக்கக் கிளம்பி விட்டனர். குடிசைக்கும் வாகனங்களுக்கும் தீ வைக் கத் துணிந்தவர்கள், போராட் டக்காரர்கள் மீது ‘சமூக விரோதிகள்’ முத்திரை குத்தி இருக்கிறார்கள். அவர்களு டைய நோக்கம் ஜல்லிக் கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதல்ல.

இனி எந்தப் பிரச்சினைக் காகவும் இளைஞர் படை இப்படி தன்னெழுச்சி யாக திரண்டுவிடக் கூடாது என்ற அதிகார வர்க்கத்தின் தொலைநோக்குத் திட்ட மும் இதற்குள்ளே ஒளிந்திருக் கிறது.
ஆளும் கட்சியை பொறுத்த வரை, மாணவர்கள் போராட்டத் தைக் காட்டி ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசை மடக்கியது, போராட்டத்தை வளர விட்டதன் மூலம் மற்ற பிரச்சினைகளை மறக்க வைத் தது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக் கிறது.
மெரினா களத்தில் ஜல்லிக் கட்டு மட்டுமல்லாது, விவசாயி கள் பிரச்சினை, நதீநீர் பங்கீட்டு விவகாரம், மீனவர் பிரச்சினை, இயற்கை விவசாயம் இத் தனையும் பற்றி ஆழ்ந்து பேசிய இளைஞர் பட்டாளம் அதையெல்லாம் சாதிக்க அடுத்து என்ன செய்யப் போகிறது என எதிர்பார்த்து காத்திருக்கிறது தமிழகம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024