போராட்டம் தொடரும்: இளைஞர்கள் முடிவு
சென்னை: 'முதல்வர் பன்னீர் செல்வத்தின் அறிக்கையை ஏற்காத இளைஞர்கள்
ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் தொடரும்' என உறுதியாக
தெரிவித்துள்ளனர். முதல்வர் அறிக்கை ஏற்க மறுப்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக
தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "நாளை காலை டில்லியில் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு
நடத்திட அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன்.
எனவே, அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும்" என கூறியுள்ளார்.இந்த
அறிக்கையை மெரினா கடற்கரையில் கூடியுள்ள இளைஞர்கள் மத்தியில் மயிலாப்பூர்
துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் வாசித்தார்.
முதல்வரின் அறிக்கையை இளைஞர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
போராட்டம் தொடரும் முதல்வர் அறிக்கை வெளிட்டாலும், அவர் பிரதமரை சந்தித்து
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக
தெரிவித்துள்ளனர். மேலும், அறிக்கையால் சமாதானம் அடையாத இளைஞர்கள்
'சுப்ரீம் கோர்ட் மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு
வர வேண்டும். வாடிவாசலிருந்து காளை வெளியேறும் வரை போராட்டத்தை தொடருவோம்.
இளைஞர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள். நாங்கள் பின்வாங்க மாட்டோம்." என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இளைஞர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள். நாங்கள் பின்வாங்க மாட்டோம்." என்றும் தெரிவித்துள்ளார்கள்.
Dailyhunt
No comments:
Post a Comment