மருத்துவ கவுன்சில் தலைவரை பதவி நீக்கம் செய்த தீர்மானம் ரத்து
மருத்துவ கவுன்சில் தலைவரை பதவி நீக்கம் செய்த தீர்மானம் ரத்து
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவரை பதவி நீக்கம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் செந்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது தேதியிடப்படாத ராஜினாமா கடிதத்தின் மூலம், துணைத் தலைவராக இருந்து வரும் ஜெயலாலை, தலைவர் பொறுப்பை கவனிக்கச் செய்யும் வகையில் மருத்துவ கவுன்சில் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேதியிடப்படாத தனது கடிதத்தின் மூலம் தன்னிச்சையாக செயற்குழு இந்த தீர்மானத்தை நிறேவேற்றியுள்ளதாகவும், அதனால், இதனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி, டாக்டர் செந்திலின் பதவியை பறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.
No comments:
Post a Comment