Friday, January 13, 2017

ரூ.8 கோடி பதுக்கியதாக தொடந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சேகர் ரெட்டி உள்பட 5 பேர் மனு: சிபிஐ.க்கு நோட்டீஸ்

ரூ. 8 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கியதாக பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொழிலதிபர் சேகர் ரெட்டி தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதமாக ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்த்தாக வருமான வரித்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதில் தொடர்புடைய சேகர் ரெட்டி, பிரேம்குமார், சினிவாசலு, ரத்தினம், ராமசந்திரன் ஆகியோர் மீது டிசம்பர் 19-ஆம் தேதியும், டிசம்பர் 30- ஆம் தேதியும் என இரண்டு தனித்தனி வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

ஏற்கெனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதே போன்ற புகாரில் புதிய வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதால், ரூ.8 கோடி வழக்கில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக்கோரி ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன், மனு குறித்து சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 23- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024