Friday, January 13, 2017

சிலம்பு விரைவு ரயில் சேவை: செங்கோட்டை வரை நீட்டிப்பு

சென்னை எழும்பூர் -மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு விரைவு ரயில் சேவை ஜனவரி 14 -ஆம் தேதி முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ரயில் எண் 16181: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்படும் சிலம்பு விரைவு ரயில், ஜனவரி 14 -ஆம் தேதி முதல் மானாமதுரைக்கு காலை 5.30 மணிக்கு சென்றடையும்.

மானாமதுரையில் இருந்து 5.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பம்புக்கோயில் கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு காலை 10.20 மணிக்கு சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் (ரயில் எண் 16182) அதாவது செங்கோட்டையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024