Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் யார்? உச்ச நீதிமன்றம் விளக்கம்

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் தொடர்பான விவரத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பை பொங்கல் பண்டிக்கை கொண்டாடப்படவுள்ள சனிக்கிழமைக்கு (ஜனவரி 14) முன்பாக அளிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நிராகரித்தது. இந்த அமர்வில் நீதிபதி ஆர். பானுமதி இடம் பெற்றிருந்ததார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கு தமிழகத்தில் நடைபெற்ற போது அப்போட்டிக்கு தடை விதித்த நீதிபதி ஆர்.பானுமதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்விலும் இருப்பதால், ஜல்லிக்கட்டு தீர்ப்பு சாதகமாக கிடைக்க வாய்பிப்பில்லை என்பது போல சில ஊடகங்களில் ஒரு பிரிவு ஆர்வலர்கள் வியாழக்கிழமை பேட்டியளித்தனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை காலையில் வழக்குகளை விசாரிக்கும் முன்பு, ஜல்லிக்கட்டு தீர்ப்பு விவகாரத்தில் நீதிபதி ஆர். பானுமதியின் பெயரை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகளுக்காக தனது அதிருப்தியை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ள நீதிபதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றச் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் சர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பங்கேற்க வகை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி ஆண்டு 7-ஆம் தேதி வெளியிட்டது. இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா பிராணிகள் நல அமைப்பு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு (ரிட் மனு 242016) தொடுத்தன.

இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வே தீர்ப்பளிக்கும். இந்த அமர்வில் நீதிபதி ஆர். பானுமதி இடம் பெறவில்லை என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டா கோரிக்கை: இதனிடையே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வகையில் மத்திய அரசு ஏதேனும் அவசரச் சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது எனக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, வழக்கின் மனுதாரரான பிராணிகள் நல அமைப்பான பீட்டா கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தின் நகலை தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கும் பீட்டா அமைப்பு அனுப்பியுள்ளது.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024