Monday, February 13, 2017

அ.தி.மு.க.,வுக்கு குட்டி சிங்கம் வந்துள்ளதாம்! * தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார் சசிகலா

'ஜெயலலிதாவும், நானும், சென்னை சிறையையும் பார்த்துள்ளோம்; பெங்களூரு சிறையையும் பார்த்துள்ளோம். அதிலிருந்து மீண்டு வந்து, ஆட்சியையும் பிடித்துள்ளோம். பெண் தானே என்று பயமுறுத்தி பார்க்கலாம் என நினைத்தால், ஜெயலலிதாவை போலவே, என்னிடமும் முடியாது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா ஆவேசமாக பேசினார்.

கல்பாக்கம் அருகே உள்ள கூவத்துார் சொகுசு விடுதியில், எம்.எல்.ஏ.,க்களிடம் அவர் பேசியதாவது:

இந்த இயக்கத்தை தலைவருக்கு பின், ஒரு பெண், தாயாகக் கட்டிக் காத்து வந்தார். அதன்பின், நீங்கள் எல்லாரும் சேர்ந்து, என்னை இந்த இயக்கத்தை நடத்த, அன்பான அழைப்பு விடுத்தீர்கள்.
அதை ஏற்று, நானும் இந்த இயக்கத்தை நடத்த முன்வந்தேன். எந்த அளவுக்கு, நம் எதிரிகள் வலை பின்னுகின்றனர்; கட்சி வளர்ந்து விடுமோ என்ற பயம், நான் பொதுச்செயலரான நாளில் இருந்து துவங்கி விட்டது.

அதற்கு காரணம், என்னை பற்றி நிறைய விசாரித்துள்ளனர். நான் எப்படி; அப்படி, இப்படி சொன்னால் கேட்பாரா என விசாரித்துள்ளனர். அப்போது எல்லாரும் கூறியுள்ளனர். 'இவர், மூன்று ஆண்டுகளாக, கட்சி கஷ்டமான நிலையில் இருந்தபோது, தன் முடிவில் இருந்து, ஒரு, 'இன்ச்' கூட பிறழாமல், ஜெ.,க்கு தோள் கொடுத்து, தளபதியாக இருந்துள்ளார். அதனால், முன்னின்று நடத்தக் கூடிய தகுதி அவருக்கு உள்ளது. அவரை ஜாக்கிரதையாக தான், 'டீல்' செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர்.

அதன் வெளிப்பாட்டை, தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பன்னீர்செல்வம் என, ஒருவர் உள்ளார். அனேகமாக, நீங்கள் மறந்திருப்பீர்கள். தற்போது, நம் கட்சியில் இல்லை.

அவரையும், என்னையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவர் மிகவும் அமைதியாக, என்ன சொன்னாலும் தலையாட்டி, சொல்வதை கேட்டு போய் விடுவார் என நினைக்கின்றனர். என்னை பார்த்தால், நான் சிங்கத்தோடு இருந்தவள். குட்டி சிங்கம் புதிதாக வந்துள்ளது என, நினைக்கின்றனர்.

'அ.தி.மு.க.,விற்கு புது குட்டி சிங்கம் வந்துள்ளது. இதை, நாம் எப்படி சமாளிப்பது? எனவே, இப்பவே மீன் பிடிக்கிற மாதிரி, வலையை வீசுவோம்; எப்படியாவது மாட்டிவிடும்' என நினைக்கின்றனர். இந்த சிங்கம், எத்தனை வலை வீசினாலும், அதை எதிர்கொண்டு வெளியே வரும்.இந்த சிங்கத்தோடு கூட இருக்கும் எல்லாரும் சிங்கம் தான். அது, அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு சிங்கத்தை பார்த்து, பின்னால் வருவதும் சிங்கக் குட்டிகளாகத் தான் இருக்கும்.

ஒரு சிங்கம் இல்லை என்றால், மற்றொரு சிங்கம் பிறக்கும். ஜெ., அனைத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என்று நினைத்து, சில எட்டப்பர்கள் உருவாகி உள்ளனர். அவர்களை வைத்து, இதை செய்து விடலாம் என நினைக்கின்றனர்.

ஆனால், இங்கு இருப்பவர்கள் தான் அரசாங்கம்; அதை அமைக்கக் கூடியவர்கள் தான், இங்கே இருக்கின்றனர். தலைவரும், ஜெ.,வும் துணையாக உள்ளனர். நீங்கள், ஒரே ஒரு மந்திரத்தை மட்டும், மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக இருந்த நம்மை, இந்த அளவிற்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா. அதை மறந்து விடாதீர்கள்.

எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்பதை காட்ட, வீடியோ எடுக்க சொன்னேன். எந்த நேரத்திலும், தடை போட்டு நிறுத்தி விட முடியாது. இந்த, 129 எம்.எல்.ஏ.,க்களும் தங்கம். இதை யாரும் தடுப்பணை போட்டு தடுக்க முடியாது. அ.தி.மு.க.,வையும், அதனுடைய ஆட்சியையும், அழிக்க நினைக்கின்றனர். நிச்சயம் தோற்று போவர். எல்லாரும் சிங்கங்களாக மாறி விட்டீர்கள்.

நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது. நம்மிடம் வலை போட முடியவில்லை என்றால், குடும்பத்தில் வலை போட பார்ப்பர். ஜாக்கிரதையாக இருங்கள். ஜெ., ஆட்சி, தமிழக மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி.

அர்ப்பணிப்பு உணர்வோடு, நம்முடைய திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் அன்பை பெற்று, லோக்சபா தேர்தலிலும், அதன்பிறகு வரும் சட்டசபை தேர்தலிலும், மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு, நம்முடைய உழைப்பு இருக்க வேண்டும். நானும் உழைப்பேன்; உங்களுடைய உழைப்பும் தேவை. நீங்கள் அனைவரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ.,வாக உள்ளீர்கள்.

புதியவர்களும், பழையவர்களும் உள்ளீர்கள். உங்கள் தொகுதியில், தற்போது நடக்கும் நிகழ்வு களை, ஆட்சி நம்மிடம் வந்ததும், இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன என்பதை எடுத்துக்கூறி, தொகுதி மக்களிடம் பழகி, லோக்சபா தேர்தலில், நாம், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

நாம் யார் என்பதை காட்டுவதற்கு, கோபம் பெரிதல்ல; செயல் தான் வேண்டும். அதில் தீவிரமாக இருந்து, வெற்றியை ஏற்படுத்தி, ஜெ., சமாதியில் போய், பாதத்தில் வைக்க வேண்டும்.நான் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பின், ஜெ., நினைவிடத்திற்கு போனபோது, அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. காலை எடுத்து வைக்க முயற்சித்தபோது, ஒரு சக்தி, என்னை ஈர்த்து கொண்டிருந்தது.

இந்த கட்சியை, தொண்டர்கள் அனைவரும், என்னை நம்பி ஒப்படைத்துள்ளனர். உங்கள் மீது ஆணையிட்டு கூறுகிறேன். இந்த இயக்கத்தையும், இந்த ஆட்சியையும், நிச்சயம் என் உயிர் உள்ளவரை காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என, உறுதி எடுத்துவிட்டு தான் வந்தேன்.

இந்த இயக்கத்தையும், ஆட்சியையும், எந்த கொம்பனாலும், அசைத்து பார்க்க முடியாது. நிச்சயமாக, அதில் உறுதியாக இருக்கிறேன். கட்சிக்கு, ஒரு பிரச்னை என்று வந்தால், என் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன். ஒரு கஷ்டமான நேரத்தில், நாம் பார்க்கிறோம். வசதி, வாய்ப்பு உள்ளது. ஒரு அமைச்சராக இருந்து, கட்சியை இரண்டாக பிரிப்பதற்கு, இப்போது பன்னீர்செல்வம், நம் கையாலே நம் கண்ணை குத்துகிறார். இந்த சமயத்தில், நீங்கள் நடுநிலையான குடும்பத்தில் இருந்து வந்து, என்னுடன் இருக்கிறீர்கள்; நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன்.

இந்நிகழ்ச்சியை அ.தி.மு.க., பதிவேட்டில், நாம் எல்லாரும் சேர்ந்து பதிய வைக்க வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை, எனக்கு உண்டு. நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக, என்னுடன் இருந்தால், தமிழக மக்களுக்கும், நம் கட்சிக்கும், நம்முடைய பணியை செய்து, மேன்மேலும், அ.தி.மு.க.,வை இங்கிருந்து, டில்லி வரை சொல்கிறேன்; யாரும் எதுவும் செய்ய முடியாது.

நம் ஒற்றுமை தான் தேவை. என்னுடன் கூட இருந்தால் போதும், நான் எல்லாவற்றையும் சாதிப்பேன்; எவ்வளவு பேர் வந்தாலும் சாதிப்பேன். அந்த தைரியம் என்னிடம் உள்ளது. அது விலை போகாத தைரியம். யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் எடுத்த முடிவில் இருந்து, பின்வாங்க மாட்டேன். கட்சியையும், ஆட்சியையும் நிலைநாட்ட, எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, அதை தெளிவாக எடுப்பேன்; கலங்க மாட்டேன். ஜெ.,வுக்கு துணையாக இருந்துள்ளேன். இருவரும், சென்னை சிறையை பார்த்துள்ளோம்; பெங்களூரு சிறையையும் பார்த்துள்ளோம். அதிலிருந்து மீண்டு வந்து, ஆட்சியை பிடித்துள்ளோம்.

பெண் தானே என்று பயமுறுத்தி பார்க்கலாம் என நினைத்தால், ஜெ.,விடம் எப்படி முடியாதோ, அதுபோல் என்னிடமும் முடியாது. எனக்கு ஒன்றே ஒன்று தான். நான் உறுதிமொழி எடுக்கப் போகிறேன். நமது அரசை அமைத்து, ஜெ., சமாதியில், கேபினட் அமைச்சர்களோடு, புகைப்படம் எடுத்து, கோட்டைக்கு போக வேண்டும் என்பது தான் நமது சபதம்.

நீங்கள் அத்தனை பேரும், என்னோடு இருந்தால், ஒரு கோடி பேர் இருப்பதாக நினைத்துக் கொள்வேன். நமது ஒன்றரை கோடி உறுப்பினர்களையும் சேர்த்து தான் கூறுகிறேன். அவர்கள், ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பர்.

அவர்கள், கட்சிக்கு பிரச்னை வரும் என நினைப்பர். தலைவர் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இயக்கத்தை, ஜெ., வழிநடத்தி மாபெரும் கட்சியாக உருவாக்கி, எம்.எல்.ஏ.,க்களை கொடுத்து சென்றுள்ளார். நாம் ஆட்சி அமைத்து, ஜெ., சமாதியில் உறுதிமொழி எடுத்து, கோட்டைக்கு போகிறோம். சட்டசபை உள்ளே, ஜெ., படத்தை திறக்கிறோம். முக்கியமான விஷயம், நீங்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் அல்ல. ஜெ., வசதியை பார்க்க மாட்டார்.

ஒரு தொண்டர் கூட, நம் கட்சியில் எம்.எல்.ஏ.,வாக முடியும். ஒவ்வொரு தொண்டனும், எம்.எல்.ஏ.,வாக முடியும் என நினைக்கின்றனர். மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஜெ., படம், சட்டசபையில் வைக்க வேண்டும். அதை வைக்க விடாமல் செய்ய, நம் கட்சியில் இருந்து ஆள் போய் உள்ளது. இது, ஜெ.,வுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து, ஜெ.,வின் உண்மையான விசுவாசி என்பதை நிரூபிக்க, ஜெ., படத்தை திறக்க வேண்டும். அதை, நான் பார்த்தால் தான், வாழ்க்கையில், மிகப்பெரிய பாக்கியமாக நினைப்பேன். காலா காலத்திற்கும், கட்சியை அழிக்க முடியாது என, ஜெ., கடைசியாக கூறினார்.

ஒரு பெண்ணை தலைமையாகக் கொண்ட இந்த இயக்கம், அடுத்ததும் நானும் பெண்ணாக வந்து விட்டேன். அந்த படத்தை திறக்கிறது தான் வேலை. அதற்கு எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, படத்தை திறக்க வேண்டும். இந்த வாய்ப்பை, நாம் நழுவ விட்டுவிடக் கூடாது. தி.மு.க.,வினரை பற்றி தெரியாமல் இருக்கலாம். அந்த கட்சி இல்லை என்றால், யார் படத்தை திறப்பர் என நினைக்கின்றனர். இதை, அந்த கட்சியில் இருந்து, ஒரு ஆள் கூறினார். நாங்கள், ஜெ., படத்தை திறப்போம்; அதை பார்க்கத்தான் போகிறீர்கள். ஒரு சபதம் எடுத்துள்ளேன்; அதை தான் கூறுகிறேன்.

எம்.ஜி.ஆர்., படம் இருந்தது. அதன்பின், கட்சியின் அடுத்த தலைவர் ஜெ., படத்தை திறக்க, எந்த இடையூறும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, உங்களுக்கு உள்ளது. ஜெ.,வை மனதில் நினைத்துள்ளோம். அது உண்மை எனக் கூறுவது, சட்டசபை வளாகம்.

இந்த கட்சி பொதுச்செயலர் பொறுப்பை கொடுத்துள்ளீர்கள். அந்த பொறுப்பில், துளியும் மாறாமல், இந்த கட்சியின் தலைவர் படத்தை, சட்டசபையில் வைக்க, அரசை பொதுச்செயலர் என்ற முறையில் நடத்திக் காட்டுவேன். அதுவே என் ஆசை; அதை பகிர்ந்து கொள்ளவே வந்தேன்.நாம் ஒரே குடும்பமாக இருந்து, ஜெ., படத்தை சட்டசபையில் திறந்து வைப்போம்.
இவ்வாறு சசிகலா பேசினார்.

பேச்சின் நடுவே, ஆள்காட்டி விரலை உயர்த்தியும், கண்ணை உருட்டியும் பாவனை செய்தது, எம்.எல்.ஏ.,க்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.


சசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது?
சென்னை:''சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம்,'' என, மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.



தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அவரை காபந்து முதல்வராக பதவியில் நீடிக்கும்படி, கவர்னர், வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார். அதன் பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா,

முதல்வர் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், நிர்பந்தம் காரணமாவே பதவியை ராஜினாமா செய்ததாக, முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்ததால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வராக பதவியேற்க, யாரை அழைப்பது என்ற விஷயத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் காலந் தாழ்த்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி விபரம்:

இந்த வாரத்தில் தீர்ப்புவெளியாகாத பட்சத்தில், சசிகலாவை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்பது சரியானதாக இருக்கும்.

சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம். சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல்,

கவர்னர் காலந்தாழ்த்துவது சரியே. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால்இதுகுறித்து முடிவு எடுக்க, அவருக்கு நேரம் தேவைப்பட்டி ருக்கும். அவர், சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை;

எனவே, காலதாமதம் சட்ட விரோதமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
அரசு இ - சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்?

அரசு, 'இ - சேவை' மையங்களில், இணையதளம் மூலம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவையை, உணவு துறை துவக்க உள்ளது. தமிழகத்தில், ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் உணவு பொருட்கள் வாங்குவது உட்பட, அரசின் பல சலுகைகளைப் பெற, ரேஷன் கார்டு அவசியம். ரேஷன் கார்டு பெற வேண்டும் எனில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால், குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை. இதற்கு தீர்வாக, புதிய நடைமுறை வர உள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் சேவைக்கான பணி முடிந்துள்ளது. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது, முகவரி மாற்றம்; பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை இணையதளத்தில் செய்யலாம். தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், எல்காட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம், 'இ - சேவை' மையங்கள் உள்ளன. அவற்றின் மூலமும், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் துவங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


சசி தந்த பட்டியல்; கவர்னர் சந்தேகம்!

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சர் பாண்டியராஜன், ஆதரவு அளித்துள்ளதால், சசிகலா தந்த பட்டியல் குறித்து, கவர்னருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.




முதல்வர் பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்து, 'எனக்கு, 64 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், சசிகலா தரப்பினர் அடைத்து வைத்துள்ளனர். எனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, வாய்ப்பு தாருங்கள்' என, கோரிக்கை விடுத்தார். கவர்னர் எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளார்.

இந்நிலையில், சசிகலா கவர்னரை சந்தித்த போது, அவருக்கு ஆதரவாக, அமைச்சர் பாண்டியராஜனும் சென்றிருந்தார். ஆனால்,

நேற்று முன்தினம், திடீரென முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தார். இதனால், சசிகலா வழங்கிய, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பட்டி யலை நம்பி, அவரை ஆட்சி அழைக்க முடியுமா என்றசந்தேகம், கவர்னருக்கு எழுந்துள்ளது.

பாண்டியராஜனை போல், ஏராளமானோர் பன்னீர் செல்வம் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதால், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், கவர்னர் தனித்தனியே சந்தித்து பேச வாய்ப்புண்டு என, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலாவுக்கு சிக்கல்

தமிழக சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தற்போதைய நிலவரப் படி, முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில், ஏழு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மயிலாப்பூர், எம்.எல்.ஏ., நடராஜ், மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த, நாகப்பட்டினம் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆகியோர், முடிவை அறிவிக்காமல் உள்ளனர்.

மீதமுள்ள, 126 எம்.எல்.ஏ.,க்களில், எத்தனை பேர், சசிகலாவுக்கு முழு மனதுடன், ஆதரவு தெரிவித் துள்ளனர் என, தெரியவில்லை. பெரும்பாலான,
எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வத்திற்கு, ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவர்களால், தனியார் விடுதியில் இருந்து, தப்பிக்க முடியாத நிலை உள்ளது.

அவர்களில், குறைந்தது, 12 எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வத்திற்கு, ஆதரவாக திரும்பி னாலே, சசிகலாவால் ஆட்சி அமைக்க, உரிமை கோர முடியாது. எனவே, அனைவரையும் தக்க வைத்துக்கொள்ள, சசி தரப்பு, அனைத்து வித முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
- நமது நிருபர் -

தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது.


தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது. 

DINAMALAR




கூவத்துார் விடுதிக்கு நேரில் வந்து, ஒவ்வொரு வரையும் தனித்தனியாக சந்தித்த சசிகலா, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியதாக, அவர்கள் புலம்புகின்றனர். 'மொபைல் போனில் பேசக் கூடாது; 'டிவி' பார்க்க கூடாது' என, மன்னார்குடி உறவுகள், ஆளாளுக்கு உத்தரவு கள் போடுவதாலும், எம்.எல்.ஏ.,க்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து, மனிதச் சங்கிலி போல, உயரமான, தடிமனான மனிதர்களை நிறுத்தி, இருட்டு இடத்தில் அடைத்து வைத்தி ருப்பதால், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.காஞ்சி மாவட்டம், கல்பாக்கம் அருகில் உள்ள, சொகுசு விடுதியில் தங்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்களை, இரண்டு நாட்களாக, சசிகலா சந்தித்து பேசி வருகிறார். நேற்று முன்தினம், மூன்று மணி நேரம் அங்கிருந்த சசிகலா, ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசியுள்ளார்.

அப்போது, ஒவ்வொருவரிடமும், அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி கூறியுள்ளார். மேலும், எம்.எல்.ஏ.,க்களிடம், '15 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்' என்றும், உறுதி

அளித்ததாக தெரிகிறது.இப்படி அவர், ஒவ் வொருவரிடமும் கூறிய விஷயம்,அவர் சென்ற பின், கூடிப் பேசியபோது, எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிய வந்துள்ளது; அதனால், அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'அனைவருக்கும், எப்படி அமைச்சர் பதவி தர முடியும்? நம்மை ஏமாற்ற முயல்கிறார்; ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, பணமும் தரவில்லை. தங்கம் வேற தர்றேன்னு யாரோ போன் பண்ணிச் சொல்கின்றனர்.நம்பவா முடிகிறது?' என, எம்.எல்.ஏ.,க்கள் புலம்பியுள்ளனர்.

இதனால், அதிருப்தியில் இருக்கும், எம்.எல்.ஏ.,க் களை, சசிகலா உறவினர்கள், ஆளாளுக்கு போடும் உத்தரவுகளும் எரிச்சல் அடைய செய் துள்ளது. 'அங்கே போகக் கூடாது; வெளி யில் யாரிடமும் பேசக்கூடாது' என, அவர்கள் காட்டும் கெடுபிடிகளும், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவல், சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை சமாதானப்படுத்த, நேற்று இரண்டாவது நாளாக, சசிகலா, கூவத்துார் சென் றார். அதிருப்தியில் இருந்தவர்களிடம், மேலும் சில வாக்குறுதிகளை அளித்துள்ளார். பின், அங்கே பட்டுவாடா நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், அமைச்சர் பதவி என, எல்லாருக்கும் பொய் வாக்குறுதி அளித்த விஷயம்,
எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், புகைச்சலை கிளப்பி உள்ளது. அதனால், அங்கிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர். ஆனால், அங்கிருந்து செல்ல முடியாத அளவுக்கு, நுழைவு வாயில் பூட்டப்பட்டு, மனிதச் சங்கிலியாக, குண்டர்கள் நிறுத்தப்பட்டுஉள்ளனர். விடுதி வெளியில்

கும்மிருட்டாக உள்ளதால், வெளியில் தலை காட்டவும் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து, அதிருப்தியாளர்கள் கூறியதாவது:


மற்ற இடத்தை விட, இந்த ரிசார்ட் அமைவிடம் வித்தியாசமானது. கடலில் அலைகள் அதிகரிக்கும்போது, கழிமுகப் பகுதிக்கு நீர் வந்து செல்லும். இத்தகைய கழிமுக பகுதியில், மூன்று பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டு, ஒரேயொரு வழி மட்டும் கொண்டதாக, இது அமைந்துள்ளது.நுழைவாயில் சாலையை தவிர்த்து, சுற்றுப்புற பகுதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல், தீவு போன்ற பகுதி இது. எனவே, இங்கு தங்க வைத்தால், தப்பிச் செல்ல முடியாது என்பதை திட்டமிட்டே செய்துள்ள னர். போதாத குறைக்கு, மனிதச் சங்கிலி போல, உயரமான, தடிமனான ஆட்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், சிறையில் அடைபட்டது போன்றே, எம்.எல்.ஏ.,க்கள் கருதுகின்றனர். சசிகலா தரப்பு மீது அதிருப்தி அடைந்தாலும், அங்கிருந்து தப்பிக்க முடியாத நிலை உள்ளது. கிட்டத்தட்ட அந்தமான் சிறைக் கைதிகள் போல தான், இவர்கள் அங்கே இருக்கின்றனர்.காவல் துறை உதவினால் மட்டுமே, எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் விருப்பப்படி வெளியில் வர முடியும் என்ற நிலை காணப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தங்களின் ஆபத்தான தருணங்களை மறக்க, சிலர், 'உற்சாகம்' ஏறிய நிலையில், தம்மை மறந்து, 'குத்தாட்டம்' போடுகின்றனர்; 'உற்சாகம்' குறைந்ததும், தங்கள் நிலையை எண்ணி, கவலையில் மூழ்குகின்றனர்.

- நமது நிருபர் -
வெளிநாடு செல்ல கனிமொழிக்கு அனுமதி

புதுடில்லி: துணை ஜனாதிபதியுடனான வெளிநாட்டு பயணத்தில் பங்கேற்க, '2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழிக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மோசடி குறித்த வழக்கில், தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 'துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, வரும், 19 முதல் 24 வரை, ருவாண்டா, உகாண்டா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பயணக் குழுவில் இடம்பெற்றுள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், கனிமொழி மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த சிறப்பு கோர்ட் நீதிபதி, ஓ.பி.சைனி, பல்வேறு நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தார்.
சகோதரியின் வாரிசாக சகோதரன் ஆக முடியாது'


புதுடில்லி: திருமணமான பெண், அவரது கணவர் வீட்டின் மூலம் சம்பாதித்த சொத்துகளுக்கு, அந்த பெண்ணின் சகோதரன் வாரிசாக உரிமை கோர முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு: ஹிந்து வாரிசு சட்டத்தின் படி, யார் யார், ஒருவரது வாரிசு என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. திருமணமான பெண்ணுக்கு, அவரது சகோதரன் வாரிசாக முடியாது. அதிலும், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் சம்பாதித்த சொத்து, அந்த பெண்ணின் பெயருக்கு மாற்றப்பட்டாலும், அதில் அந்த பெண்ணின் சகோதரன் எந்த உரிமையும் கோர முடியாது.மகன், மகள் இல்லாத நிலையில், திருமணமான பெண்ணின் சொத்துகளுக்கு, அவரது கணவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே உரிமை கோர முடியும்.
கூவத்தூரில் சசி ஆட்கள் அட்டகாசம் : பத்திரிகையாளர்கள் சாலை மறியல்

கூவத்துார்: கூவத்துார் சொகுசு விடுதிக்கு சசிகலா சென்ற போது, பத்திரிகையாளர்களை, அவரது குண்டர்கள் தடுத்து, ரகளை செய்ததால், மறியலில் ஈடுபட்டனர்.சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துார் சொகுசு விடுதியில், தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரண்டாவது நாளாக, நேற்று மாலை, 4.50 மணிக்கு, சசிகலா அங்கு சென்றார். பத்திரிகையாளர்கள் அங்கு சென்ற போது, அவர்களை குண்டர்கள் தடுத்து நிறுத்தினர்; மிரட்டினர். அவர்களுடன், பத்திரிகையாளர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வேடிக்கை பார்த்தனர். பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக, உள்ளூர் மக்கள் திரண்டதும், குண்டர்கள் தப்பினர். அப்போது, ஒருவர், பத்திரிகையாளரின் மொபைல் போனை பறித்து சென்றார். இதை கண்டித்து, பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த, அ.தி.மு.க., பிரமுகர்கள், மொபைல் போனை திரும்ப ஒப்படைத்தனர்; பின், மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து, தமிழக, டி.ஜி.பி., அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு கூடுதல், ஐ.ஜி., திருநாவுக்கரசிடம், பத்திரிகையாளர்கள் புகார் கூறினர். அப்போது, 'குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
பன்னீரைத் தேடி எம்.பி.,க்கள் செல்வது ஏன்? மத்திய அரசில் அமைச்சர் பதவி பெற திட்டம்

வெறும் எம்.பி.,க்களாக உங்கள் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனரே, அதை வைத்து இப்போதைய நிலையில் என்ன செய்ய முடியும்? தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால், எம்.எல்.ஏ.,க்கள்தானே தேவை என்று பன்னீர்செல்வத்தின் பக்கம் உள்ள, அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், எம்.எல்.ஏ.,க்களை அடைத்த் வைத்துள்ளனர். அவர்களை சுதந்திரமாக வெளியே விட்டால், அவர்கள் அனைவரும், பன்னீர்செல்வத்தைத் தேடி வந்துவிடுவர். சட்டசபையில், ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை ஓட்டெடுப்பில், தனது ஆதரவை நிரூபிப்பார். அதனால், அதற்காக காத்திருக்கிறோம்.
இதற்கிடையில், எம்.பி.,க்கள் ஆதரவை திரட்டி வருகிறோம். எப்படியும் 25க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பன்னீர்செல்வம் பக்கம் வந்து விடுவர். அதை வைத்து, விரைவில், மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவளிப்போம். அப்படி செய்வதன் மூலம், பிரதமர் மோடி, பா.ஜ., அரசில், பன்னீர்செல்வம் எம்.பி.,க்களையும் சேர்த்துக் கொள்வார். அமைச்சரவையில், இரண்டு கேபினட் ரேங்கில் அமைச்சர்கள், ஒரு இணையமைச்சர் பொறுப்பும் வழங்க, தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், தமிழகத்துக்கு கூடுதல் நன்மை கிடைக்கும். அதனாலேயே, சசிகலா பக்கம் இருந்த எம்.பி.,க்கள் அனைவரும், பன்னீர்செல்வத்தை தேடி வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்பு எல்லைக்கு அப்பால் எம்.எல்.ஏ.,க்கள்! - சமூக வலைதளங்களை நாடும் வாக்காளர்கள்

கோவை : எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொள்ள முடியாத விரக்தியில் உள்ள தொகுதி மக்கள், 'வாட்ஸ்அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், தங்கள் எச்சரிக்கை எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், ஒன்பது தொகுதிகள் அ.தி.மு.க., கைவசம் உள்ளது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

'சுவிட்ச்ஆப்'

மற்ற தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் எங்கு உள்ளனர் என மக்கள் தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ.,க்களின் மொபைல்போன்கள் எண்கள், 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சமூக வலைதளத்தில் கருத்து

தொகுதி மக்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்தினரும், வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். எம்.எல்.ஏ.,க்களை தேடி வரும் மக்கள், அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், விரக்தி அடைந்துள்ளனர். இதனால், தற்போது 'பேஸ்புக்', 'வாட்ஸ்அப்' மூலம் எம்.எல்.ஏ.,க்களுக்கு தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

சூடு சொரணை இருந்தால் ராஜினாமா செய்யுங்கள்

அதில்,'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக தான் உங்களுக்கு வாக்களித்தோம். தற்போது நீங்கள், அம்மாவை கொலை செய்த கும்பலுக்கு துணையாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அதனால், எம்.எல்.ஏ., வாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள். நாங்கள் அளித்த ஓட்டுக்களை திரும்ப பெறுகிறோம். உடனே, சூடு சொரணை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிடுங்கள்' என, தெரிவித்துள்ளனர்.

சூலுார், கிணத்துக்கடவு தொகுதி மக்கள், 'நீங்க யாருன்னு தெரியாமலே நாங்க ஓட்டு போட்டு ஜெயிச்சதுக்கு, ஜெயலலிதாதான் காரணம். நீங்க கொலைகார கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டீங்கனு நம்புறோம். அப்படி செஞ்சீங்கன்னா நாங்க அடுத்த தேர்தலில் உங்கள சும்மா விடமாட்டோம்' என, தங்கள் எம்.எல்.ஏ.,க்களை எச்சரித்துள்ளனர்.
எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்: சசிகலா

சென்னை: ‛யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்' என சசிகலா எம்.எல்.ஏ.,க்களிடம் பேசினார்.

கூவத்துாரில் இன்று (பிப்.,12) எம்.எல்.ஏ.,க்களிடையே சசிகலா பேசியதாவது:

குட்டி சிங்கம்!

ஓ. பன்னீர் செல்வத்தையும் என்னையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவர் அமைதியானவர் போல் தோற்றம் அளிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், நான் சிங்கத்துடனேயே இருந்தவள். இந்த குட்டி சிங்கத்தை பார்த்து சிலருக்கு பயம் உருவாகி உள்ளது. என்னுடன் இருக்கும் நீங்களும் சிங்கங்கள் தான்.

அ.தி.மு.க., ஆட்சியை எப்படியாது கலைத்து விடலாம் என சில எட்டப்பர்கள் உருவாகி உள்ளனர். ஆட்சியை கைப்பற்ற எதிரிகள் சதி வலை பின்னுகிறார்கள். அந்த வலையில் சிக்கவிடக் கூடாது.

எந்த கொம்பனாலும் முடியாது

ஆட்சி நம் கைக்கு வந்த பின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும் உங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை எடுத்து கூறுங்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். டில்லி வரை சென்று வெற்றி பெறுவோம். இந்த இயக்கத்தை ஆட்சியையும் உயிர் உள்ள வரை காப்பாற்றி கொள்வேன் என உறுதி எடுத்து தான் பொறுப்பேற்றுள்ளேன். இயக்கத்தையும் ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

பின்வாங்க மாட்டேன்

வசதி வாய்ப்புடன் ஒரு அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் கட்சியை இரண்டாக பிரிக்க பார்க்கிறார். நானும் விவசாயி குடும்பத்திலிருந்து வந்தவள். நீங்கள் எனக்கு துணையாக இருந்தால் எதையும் நான் சாதிப்பேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்.

ஜெயிலை பார்த்திருக்கிறோம்

எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ எடுப்பேன். ஜெயலலிதாவும் நானும் சென்னை ஜெயிலையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு ஜெயிலையும் பார்த்திருக்கிறோம். பின்னர், ஆட்சியில் சாதித்தும் இருக்கிறோம்.

சட்டசபை ஜெ., படம்

ஆட்சி அமைத்து ஜெயலலிதா சமாதிக்கு போவோம். அங்கு கேபினட் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுப்போம். ஜெயலலிதாவின் ஆசி பெற்று கோட்டைக்கு செல்வோம். ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைப்போம். அதற்கு தி.மு.க., வினர் தடை போட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.
சசியை அழைக்காதீர்: கவர்னருக்கு மக்கள் மனு




சென்னை: 'சசிகலாவுக்கு, நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை' என, கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, பொதுமக்கள் மனு அனுப்பி வருகின்றனர்.

ஆதரவு:

அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமனம் செய்யப்பட்ட சசிகலாவை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முயற்சி:

எனினும் கடும் எதிர்ப்பை மீறி, எம்.எல்.ஏ.,க்கள் உதவியோடு, முதல்வராக சசிகலா முயற்சித்து வருகிறார். தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி, கவர்னரை வற்புறுத்தி வருகிறார். அவர் வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, பொது மக்கள் திரண்டுள்ளனர். 'சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது' என, தங்கள் தொகுதி, எம்.எல்.ஏ.,க் களை, வலியுறுத்தி வருகின்றனர்.

'பேக்ஸ்':

அடுத்த கட்டமாக, 'ஜனநாயகம் கடத்தப்பட்டுள்ளது; நாங்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே, அவரை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது' என, கையெழுத்திட்ட மனுவை, கவர்னர் அலுவலகத்திற்கு, பொதுமக்கள், 'பேக்ஸ்' அனுப்பி வருகின்றனர். அதன் நகலை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, '044 - 2230 1300 என்ற எண்ணுக்கு பேக்ஸ் அனுப்புங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று மட்டும், கவர்னர் மாளிகைக்கு, ஆயிரக்கணக்கானோர் பேக்ஸ் அனுப்பி உள்ளனர்.

Saturday, February 11, 2017

சசி வழக்கில் தீர்ப்பு எப்போது?

புதுடில்லி: அதிமுக., பொதுசெயலர் சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு, அடுத்த வாரத்தின் புதன் அல்லது வியாழ கிழமைகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு:

அதிமுகவின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டும் சசி முதல்வராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., அணியில் சேருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்..,க்கள் பலர் வருவார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., அணியினர் கூறுகின்றனர்.
ஓபிஎஸ் கரம் வலுத்து வருவதால் சசி அணியினர் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளிவருவதால் அவரது பதவியேற்புக்கு கவர்னர் அழைப்பு விடுக்ககாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தீர்ப்பு வரும் நாள் நோக்கி கட்சியினரும், அரசு நிர்வாகமும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தீர்ப்பை அறிவிக்கும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் லிஸ்ட்டில், இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் வரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆம்... எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்குத்தான்!” - தமிழிசை செளந்தர்ராஜன் ஒப்புதல்

தமிழிசை
ஆதரவு, எதிர்ப்பு என்று நிமிடத்துக்கு நிமிடம் மாறிவரும் அரசியல் சூழல்களால் தமிழகமே பரபரத்துக் கிடக்கிறது. ''டெல்லி மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழக அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது'' என்கிறார் தமிழக பி.ஜே.பி தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜன். தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து அவரோடு பேசினோம்...

''தமிழக அரசியல் சூழல் உச்சபட்ச குழப்பத்தில் இருக்கிறது. காபந்து முதல்வர் பொறுப்பில் இருக்கிறார். முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஒருவர் இருக்கிறார். அரசியல் சூழ்நிலை, உணர்வுப்பூர்வமான சூழ்நிலை என இரண்டு நிலைகள் உள்ளன. இதில் அரசியல் சூழ்நிலை என்பது கடந்த இரண்டு மாதங்களாக நிலையான ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இந்த ஆட்சியில் பெரிய குறைகள் என்று எதையும் சொல்லவும் முடியாது. அதுமட்டுமல்ல, மெரினா போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்னை, வர்தா புயல் என்று இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட சவாலான சூழ்நிலைகளையும்கூட திறம்பட கையாண்ட ஆட்சி நிர்வாகம் என்றே சொல்லவேண்டும். எல்லோரும் எளிதில் சந்தித்து தங்கள் குறைகளைச் சொல்லக்கூடிய இடத்தில் ஓ.பி.எஸ். இருந்தார். ஏற்கெனவே தமிழக அரசியல் பட்டுப்போயிருந்த அரசியல் நாகரிகத்தை மறுபடியும் துளிர்விடச் செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தும் தலைவராகவும் இருந்தார்.

இந்த இரண்டு மாதங்களுக்குள் தமிழக முதல் அமைச்சரை மாற்றவேண்டிய அவசியம் என்ன வந்தது? 'எனக்கு அரசியல் ஆசை துளியும் கிடையாது. முதல்வருக்குத் துணையாக மட்டுமே இருந்துவருகிறேன்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த ஒருவர் இப்போது இந்த இரண்டு மாதங்களுக்குள் தானே முதல்வராக வந்துவிட வேண்டும் என்று அவசரம் காட்டுவது ஏன்? அதன் உள்நோக்கம் என்ன? இப்போது இவர்கள் காட்டும் அவசரத்தைப் பார்த்தால், இதை நோக்கித்தான் இவர்களது வாழ்நாள் திட்டம் இருந்ததா என்ற கேள்வி அதிகமாக எழுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பொருத்தவரை, ஒருவரை இல்லத்தில் பணியாற்றுவதற்கும் இன்னொருவரை களத்தில் பணியாற்றுவதற்கும் தயார் செய்து வைத்திருந்தார். இதில், இல்லத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் இப்போது களத்தில் பணியாற்றப்போகிறேன் என்று வரும்போதுதான் பிரச்னையே வருகிறது.''

''தங்கள் கட்சியில் இருந்து யாரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களது உட்கட்சி பிரச்னைதானே?''

''அப்படியில்லை... ஒரு கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பது வேண்டுமானால், அவர்களது உட்கட்சிப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், முதல்வர் என்று வரும்போது வெறுமனே உட்கட்சிப் பிரச்னை என்று சொல்லி புறந்தள்ளிவிட முடியாது. அது ஆறு கோடி தமிழர்களின் பிரச்னை; தமிழக மக்கள் நலனுக்காக அரசியல் செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பிரச்னையாகத்தான் பார்க்கவேண்டும்.

நெடுநாட்களாக தமிழக அரசு முழுமையாக இயங்கமுடியாத சூழல்தான் நிலவிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, கோர்ட் - கேஸ் என்று போய்க்கொண்டிருந்தது; அடுத்ததாக ஜெயலலிதா உடல்நலமின்றி இருந்தார்; அதற்குப்பின் இன்றைய சூழ்நிலை... இப்படியே போய்க்கொண்டிருந்தால், இந்த நிலையற்றத் தன்மை தமிழக மக்கள் நலனுக்கு நல்லதல்ல.
சட்டசபை தேர்தல் முடிந்து ஒருவருடம் கூட முடியவில்லை. அதற்குள் சுயநல அரசியலால் ஏன் இப்படியொரு குழப்பம் விளைவிக்கப்பட்டது? ஏன் இந்த அவசரம்? அதற்கு என்ன அவசியம்? முதல்வர் பதவி என்பது நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்குத்தானே தவிர... ஆட்சி - அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு தனது பலத்தைக் காண்பிப்பதற்கு அல்ல...!''

''ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை சசிகலா கவர்னரிடம் கொடுத்தபின்னரும், ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னர் தரப்பில் இவ்வளவு காலதாமதம் ஏன்?''

''மிரட்டப்பட்டோம், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறது' என்றெல்லாம் ஓ.பி.எஸ் கூறிவருகிறார். அவரோடு அந்தக் கட்சியின் அவைத்தலைவர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் இதே கருத்தைக் கூறி ஒன்றைணைகிறார்கள். ஒரு முதல்வரே மிரட்டப்பட்டுள்ளார் என்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட்டனரா? என்ற கேள்வி வருகிறது.... இல்லையா? நாட்டு மக்களின் எண்ணம் ஒருபக்கமாக இருக்கும்போது, எண்ணிக்கை இருக்கிறது என்பதற்காக கவர்னர் எப்படி அவசரமாக முடிவெடுக்க முடியும்? முடிவெடுத்த பின்னர் கவர்னரால் பின்வாங்க முடியாது. எனவே, உண்மையான சூழலை ஆராயந்து, அறிந்துதான் முடிவெடுக்க முடியும். அதற்கு காலதாமதம் ஆகத்தான் செய்யும்.''





''ஓ.பி.எஸ் - சசிகலா இருவரில், பி.ஜே.பி ஆதரவு யாருக்கு?''

''இவருக்கு சப்போர்ட், அவருக்கு சப்போர்ட் என்று சொல்வதற்கு நாங்கள் ஒன்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்குத்தான் எங்கள் ஆதரவு. அப்படி மக்களின் நலன் சார்ந்த ஆதரவு என்றால் என்ன...? 'ஒரு நிலையான ஆட்சி வேண்டும்' என்பது மட்டும்தான். அப்படி ஒரு நிலையான ஆட்சியை இவர்கள் இருவரில் யார் கொடுக்கமுடியும்? இவர்களில் ஒருவர், ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சுட்டிக்காட்டப்பட்டவர். தான் பிரச்னைக்குள்ளாக இருக்கும்போது, தன்னைப்போலவே திறம்பட செயலாற்றுபவர் இவர்தான் என்று அடையாளம் கண்டே இவரை முதல்வராக முன்னிறுத்தியிருந்தார். ஜெயலலிதா இறந்த பின்னரும்கூட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்கூட. அடுத்ததாக, நீண்ட நெடுநாட்களாக அரசியலில் தொடர்ந்து இருந்துவருபவர். தற்போதைய சூழலில் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளவர். ஆனால், அந்த இன்னொருவரை ஜெயலலிதா எந்த இடத்திலும் சுட்டிக்காட்டவே இல்லை.

ஜெயலலிதாவின் கொள்கைப்படியே செயல்படுகிறோம் என்று சொல்லும்போது, அந்தம்மாவின் விருப்பத்தைத்தானே இவர்கள் செயல்படுத்த வேண்டும்? மாறாக செயல்படுவது எப்படி ஜெயலலிதாவின் பணியை எடுத்துச்செல்வதாக இருக்கும்? இதில் ஏன் குழப்பம் விளைவிக்கிறார்கள்? என்ற எண்ணம் எல்லோருக்கும் எழுவதுபோல் எங்களுக்கும் எழுந்தது... அவ்வளவுதான். மற்றபடி இவங்களுக்கு ஆதரவு, அவங்களுக்கு ஆதரவு என்பதெல்லாம் இல்லை.''

''ஓ.பன்னீர்செல்வமே தமிழக முதல்வராக நீடிக்கவேண்டும் என்று பி.ஜே.பி ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?''

''ஓ.பி.எஸ்-க்குத்தான் எங்கள் ஆதரவு என்று சொல்வதைவிட, குழப்பம் இல்லாத, நிலையான ஆட்சியாக நன்றாகத்தானே பணியாற்றிக் கொண்டிருந்த அந்த முதல்வருக்கு ஏன் ஆதரவு கொடுக்கக்கூடாது என்பதுதான் என் கேள்வி.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அரசு என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைத்தான் ஆதரிக்கும். அந்தவகையில்தான் நாங்களும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துக்கொண்டிருந்தோம். இதில், 'ஆதரிப்பது' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன...? ஒரு முதல் அமைச்சர் என்ற முறையில் அவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையையும் ஆதரவையும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டு... பிரதமரது வழிகாட்டுதல் செயலாக்கம் பெற்று இன்றைக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஊழலற்ற, நிலையான ஒரு ஆட்சி தமிழகத்துக்கு வேண்டும் என்றுதான் நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, மறுபடியும் ஊழல் கறை படிந்தவர்கள் வருவது நல்லதா? குடும்ப ஆட்சி ஒழியட்டும் என்றுதான் மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள். மறுபடியும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களே ஆட்சிக்கு வரலாமா? நேற்று கவர்னரை சந்திக்கச் சென்றபோதுகூட சசிகலாவோட அவரது குடும்ப உறுப்பினரும் சென்றிருக்கிறார். இதையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.!''


-த.கதிரவன்

ஆளுநருக்கு, சசிகலா முக்கிய கடிதம்!



தமிழகத்தின் நலன் கருதி விரைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்ததாகவும், ராஜினாமாவை திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநரை, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்தார். அப்போது, எம்எல்ஏக்களின் பெரும்பான்மை கடிதத்தை கொடுத்தார். ஆனால், இன்று வரை சசிகலாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனிடையே, பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், "முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் அளித்து ஏழு நாட்களாகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேச விரும்புகிறேன். தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசன சட்டப்படி ஜனநாயகத்தை காக்க ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் மாஃபா பாண்டியன்! அதிமுக தலைமையில் பரபரப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சசிகலா அணியில் உள்ளார். இவர் தொடர்ந்து சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

Will surely listen to the collective voice of my voters & decide in a way to uphold the dignity of Amma's memory & unity of AIADMK !
இந்நிலையில் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு நல்ல முடிவு எடுப்பேன். அம்மாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலும், நல்ல முடிவு எடுப்பேன்' எனக்கூறியுள்ளார்.
Mafo Pandiyarajan Tweet

சசிகலாவை முடக்க பன்னீர்செல்வத்தின் வியூகம் இதுதானா?! #OpsVsSasikala

 எஸ்.கிருபாகரன்

சசிகலா ; பன்னீர்செல்வம்

பத்து ஆண்டுகளுக்குப்பின் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்திருக்கிறது. ஜெயலலிதா இறந்த 60 நாட்களுக்குள் அவரது தோழி என நேற்றுவரை சொல்லப்பட்ட சசிகலா, பொதுச் செயலாளர் பதவியேற்ற கையோடு முதல்வர் பதவிக்கான காய்நகர்த்தல்களை செய்துவருகிறார். நேற்றுவரை அம்பியாக இருந்த பன்னீர்செல்வம் ஒரே நாள் இரவில் அந்நியனாக மாறி அதகளம் செய்துவருகிறார். சசிகலாவுக்கு எதிராக போர்க்கோலம் கொண்டுவிட்ட அவர், காபந்து சர்க்காராக இருக்கும் நிலையிலும் சசிகலாவுக்கு கிலி கொடுக்கிறார்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, அவரது நினைவு இல்லமாக அரசு பராமரிக்கும் என அறிவிப்பு செய்திருக்கிறார் இப்போது காமராஜரின் இறப்புக்குப்பின் நுங்கம்பாக்கம் திருமலை வீதியில் அவர் வாழ்ந்த வீட்டை வீட்டுக்குரியவரிடமிருந்து விலைக்கு வாங்கி அரசு நினைவு இல்லமாக்கி பராமரித்துவருகிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தனது ஆசான் அண்ணாத்துரையின் காஞ்சிபுரம் இல்லத்தை அரசு செலவில் வாங்கி நினைவு இல்லமாக்கினார். சம்பிரதாயமாக இல்லாமல் அன்றைய கவர்னர், மற்றும் வெளிமாநில அமைச்சர்கள் பலரை வரவழைத்து சிறப்பாக அதன் திறப்பு விழாவை நடத்தினார்.

ஆனால் தனக்கு நினைவு இல்லம் அமைக்க அரசுக்கு செலவு வைக்க விரும்பாத எம்.ஜி.ஆர், தனது சொந்த அலுவலகத்தை அதற்காக ஒதுக்கி உயில் எழுதிவைத்தார். அதன்படி தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள அலுவலக கட்டிடம் அவரது காலத்திற்குப்பின் அவரது நினைவு இல்லமானது. அதன் பராமரிப்பு செலவைக்கூட அரசுக்கு உருவாக்கவிரும்பாமல் தனக்கு சொந்தமான ஆலந்துார் மார்க்கெட்டிலிருந்து வரும் வருமானத்தை இதன் பராமரிப்புக்கு உயில் எழுதிவைத்தார் அவர்.

இப்படி அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர் வரிசையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தையும், அரசு அவரது நினைவு இல்லமாக பராமரிக்கும் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதா புகழ்பெற்ற நடிகையாக இருந்தபோது தன் தாயாருடன் இணைந்து வாங்கிய இடம். சென்னையின் மத்தியில் தனக்கு ஒரு இடம் வேண்டும் என்ற ஆசையில் ஜெயலலிதா வாங்கிய அந்த இடம், அவரது வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்கு சாட்சியான இடம். ஜெயலலிதாவுக்கும் அவரது தாயார் சந்தியாவுக்கு சரிபங்கு கொண்ட இந்த வீட்டின் பூமி பூஜை அன்றைய சினிமா பிரபலங்கள் புடை சூழ நடத்தப்பட்டது. சோகம் என்னவென்றால் வீட்டை மகளுக்காக பார்த்துப் பார்த்து கட்டிய சந்தியா, அதன் கிரகப்பிரவேசத்தின்போது உயிருடன் இல்லை. அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார்.

தாயார் இறந்த சோகத்துடன் வீட்டிற்கு குடிபுகுந்த ஜெயலலிதாவின் மரணமும் அங்கிருந்தபோதுதான் நடந்தது. அதைத்தான் இப்போது நினைவு இல்லமாக்கப்படும் என ஓ.பி.எஸ் அறிவித்திருக்கிறார். ஆனால் மற்ற தலைவர்களைப்போன்று இந்த அறிவிப்பு ஜெயலலிதாவை கவுரவிக்கும் முயற்சி அல்ல; சசிகலாவிற்கு எதிரான பன்னீர்செல்வத்தின் ஆடுபுலி ஆட்டத்தின் முதற்பகுதி என்கிறார்கள். அதிமுகவை கைப்பற்றியிருக்கிற சசிகலா, ஜெயலலிதாவின் நடை உடை பாவனைகளை அப்படியே பின்பற்றிவருகிறார். அந்த வரிசையில் போயஸ் கார்டன் இல்லம் தொண்டர்களுடன் ஒரு உணர்ச்சி பூர்வமான பந்தத்தை ஏற்படுத்தும் என்பதற்காக தொடர்ந்து அங்கேயே குடியிருந்துவருகிறார். எங்குபோய் 1000 ஏக்கரில் நிலம் வாங்கி அரண்மனை கட்டினாலும் தனது அரசியல் செல்வாக்குக்கு போயஸ் கார்டன் வீடே ராசியானது என நினைக்கிறார் சசிகலா.

நெட்டிசன்களில் தொடங்கி நேற்று முளைத்த கட்சிகள் வரை அவர் அங்கு வசிப்பதை கேள்விக்குள்ளாக்கினாலும் ஜென் நிலையில் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் நேற்றுவரை அதே இல்லத்தில்தான் மொத்த மீடியாவையும் அழைத்து பேட்டியளித்துக்கொண்டிருக்க அதுதான் காரணம். ஆச்சர்யம் என்னவென்றால் அதுபற்றி கேள்வி எழுப்பவேண்டிய முழு உரிமையுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை என்பதுதான்.



இந்த நிலையில்தான் ஜெயலலிதா இறப்புக்குப்பின் நேற்றுவரை அந்த வீட்டில் பக்கோடா சாப்பிட்டுவிட்டு பணிவாகக் காட்டிக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் முரண்பட்டதும் இன்று வீட்டை நினைவு இல்லமாக்குவோம் என்கிறார். கோட்டையே குடிமூழ்கப்போகும் இந்த நேரத்திலும் ஆளுநரை சந்தித்து அவர் வைத்த கோரிக்கைப்பட்டியலில் ஆறாவதாக இந்த நினைவு இல்ல விவகாரத்தை செருகி, சசிகலாவுக்கு திகில் கொடுத்திருக்கிறார்.

ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணியின் அதிகார அடையாளமாகவும் தொண்டர்களுடன் உணரவுப்பூர்வமான உறவு கொண்டஅந்த வீட்டை சசிகலாவிடமிருந்து எட்டிப்பறிப்பதன்மூலம் சசிகலாவின் அரசியல் சிறகுகளை வெட்டநினைக்கிறார் ஓ.பி.எஸ் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சசிகலாவை எதிர்ப்பது என முடிவெடுத்துவிட்டபின் அவரை போயஸ் இல்லத்திலேயெ தொடரச்செய்வது சசிகலாவின் மீது ஜெயலலிதாவின் பிம்பத்தை தொண்டர்கள் பொருத்திப்பார்க்கச் செய்துவிடும். மேலும் இது சசிகலாவுக்கு ஒரு பாசிடிவ் எனர்ஜியை தரும். இது தங்களின் எதிர்ப்பு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டயாக இருக்கும் என்பதால் உடனடியாக சசிகலாவை அங்கிருந்து அப்புறப்படுத்துவது நல்லது என நினைக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. இதற்காக தீபாவின் மூலம் காய்நகர்த்தினால் அது தனிப்பட்ட சொத்துப்பிரச்னையாக மாறி பல வருடங்கள் வழக்கு நடக்கும். தங்கள் எண்ணம் ஈடேறாது என்பதால் அதிரடியாக இப்படி அறிவிப்பை வெளியிட்டார் என்கிறார்கள். அதேசமயம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவதன்மூலம் ஜெயலலிதா உயில் ஏதாவது எழுதியிருந்தால் அது வெளிவரும் என்பதும் ஓ.பி.எஸ் தரப்பின் எண்ணம் என்கிறார்கள்.



ஓ.பி.எஸ் தனது ஆசையை வெளிப்படுத்திவிட்டாலும் அதன் சட்டப்படியான சாத்தியம் எந்த வகையில் உள்ளது என்பது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் அவர்களிடம் கேட்டோம்.

“பொதுவாக அரசு ஒரு தலைவரை கவுரவிக்க அவர்கள் வாழ்ந்த வீட்டையோ அல்லது அவர்கள் தொடர்பான ஒரு இடத்தையோ நினைவு இல்லமாக்கும். அப்படி அரசு முடிவெடுத்தால் சம்பந்தப்பட்ட சொத்தை நில சுவாதீனம் என்ற பெயரில் அந்த இடத்திற்கு ஒரு மதிப்பை நிர்ணயித்து உரியவர்களிடம் அரசு இழப்பீடு கொடுத்து பெற்றுக்கொள்ளும். இதுதான் நடைமுறை. அரசின் இந்த முடிவிற்கு சம்பந்தப்பட்ட இடத்தை வாரிசு அடிப்படையிலோ அல்லது உயிலின்படியோ பெற்றவர் கேள்வி எழுப்பமுடியாது. உயில் அல்லது மற்ற ஆதாரம் அரசின் இழப்பீடு பெறமட்டுமே அவர்களுக்கு உதவும். அப்படி அரசு எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் அங்கிருந்தவர் வெளியேறவேண்டும். இது ஒரு அரசியல் மூவ் என்றாலும் வாரிசு இல்லாத சொத்து என்பதால் நினைவு இல்லமாக்குவதையே மக்களும் விரும்புகிறார்கள்.

உண்மையில் ராஜினாமா செய்வதற்கு முன்பு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது அன்றே அரசாணையாக மாறி நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால் காலம் தாழ்த்திய இந்த நடவடிக்கையினால் இப்போது கவர்னர் கையில்தான் இதன் முடிவு இருக்கிறது. காரணம் காபந்து அரசின் முதல்வர் என்ற முறையில் அவரால் வழக்கமான அலுவலகப்பணி தவிர வேறு எதையும் செய்யமுடியாது” என்றார்.

“ ஒருவேளை கவர்னர் ஒப்புதலில் ஓ.பி.எஸ்ஸின் இருக்கும் அறிவிப்பு, அரசாணையானால் சசிகலா தரப்புக்கு பெரும் அரசியல் பின்னடைவாகிவிடும். கவர்னர் உத்தரவின்பேரில் உடனடியாக சசிகலாவை வெளியேறக்கூறி அரசு நோட்டீஸ் அனுப்பும். இதை சசிகலாவால் எதிர்க்கவும் முடியாத தர்மசங்கடம் ஏற்படும். மீறி அரசுடைமை ஆக்குவதை அவர் எதிர்த்தால் சொத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழும். அப்படி தனக்கு உயில் எழுதியிருப்பதாக அவர் சொன்னால் அப்போது பல உண்மைகள் வெளிவரலாம் என்பதோடு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதிமுக தொண்டர்களிடையே அவர்மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். இப்படி நினைவு இல்ல அறிவிப்பு மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழச்செய்வதே ஓ.பி.எஸ் திட்டம். எப்படியிருந்தாலும் மக்கள் விருப்பப்படி போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக்குவதே இப்போதைக்கு நல்ல முடிவாக இருக்கும்” என்றார் எம்.ஜி.ஆர் கால நிர்வாகி ஒருவர்.

ஓ.பி.எஸ்ஸை 'யு.பி.எஸ்' என்று கலாய்த்தார்கள் நெட்டிசன்கள். 'யு.பி.எஸ்' கூட 'ஷாக்' அடிக்கச் செய்யும் வலிமை உண்டு என காட்ட ஆரம்பித்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!

Sasikala misconstrued my praise for OPS: Duraimurugan

DMK leader says he would prefer Panneerselvam as Chief Minister

Veteran DMK leader Duraimurugan, who has seen many a battle in his long political career, is no stranger to controversies. But even he would not have expected that his jovial remark praising Chief Minister O. Panneerselvam on the concluding day of the last Assembly session on February would form the crux of the political charge-sheet that the AIADMK would file against Mr. Panneerselvam accusing him of being in cahoots with the DMK and trying to break the party. In an interview with B. Kolappan, Mr. Duraimurugan clarifies that there was no hidden agenda when he said he wanted Mr. Panneerselvam to continue as the Chief Minister for the next four years and how Ms. Sasikala has misconstrued his remarks. Excerpts:
AIADMK leader V.K. Sasikala has cited your speech in the Assembly offering support to O. Panneerselvam to allege that he has revolted at the behest of the DMK. What is your reaction?
While addressing the House, Mr. Panneerselvam said the DMK was opposing his government in spite of the good schemes implemented by it. He complained that we refused to understand his efforts. I responded to him saying that the DMK wished the continuation of his government. I also said we would not disrupt his government and the DMK would not pose any threat to his Chief Ministership.
Whatever I said is in the Assembly records. At that time, we did not know that Mr. Panneerselvam would resign his Chief Minister post and Ms. Sasikala would be elected as the Legislature Party leader of the AIADMK in the place of Mr. Panneerselvam. We have not said anything against Ms. Sasikala since she was not in the picture at all. Who is going to be the Chief Minister is the inner party issue of the AIADMK and we are not bothered about it. But Ms. Sasikala has misconstrued my comments as a threat to the AIADMK and sought to occupy the seat of the Chief Minister.
But it appears as if the DMK has taken a clear stand in favour of Mr. Panneerselvam…
When you compare Mr. Panneerselvam with Ms. Sasikala, he makes a better Chief Minister. Forget my position (as a DMK leader). As a citizen of Tamil Nadu, I would take pride in voting for Mr. Panneerselvam. He has functioned as the Chief Minister of the State thrice; and as Finance Minister, he had presented five budgets and was going to present the sixth one. He has rich experience even in the opposition and handled many important portfolios and gained enormous knowledge about administration. Above all, he is a politician, whereas Ms, Sasikala is not.
As the Deputy Leader of the Opposition in the Assembly, what do you expect from the Tamil Nadu Governor at this juncture?
The Governor should take steps to conduct a floor test in the Assembly to ascertain who has the support of the majority of MLAs. It is immaterial who is going to win the support of majority of the MLAs. Media reports say that many MLAs are being held hostage (by the Sasikala camp). The administration in Tamil Nadu has been totally paralysed. Unless the Governor intervenes and restores normalcy, the crisis will deepen.
There is an allegation that the BJP government at the Centre was behind the political developments in Tamil Nadu…
I have no knowledge about it.

TN Governor likely to await SC ruling in Sasikala case..THE HINDU

Not being an MLA is seen as a ‘restrictive’ factor to her swearing-in

Rival factions of the AIADMK, led by interim general secretary V.K. Sasikala and Chief Minister O. Panneerselvam, may have to wait longer for Governor Ch. Vidyasagar Rao to decide on their claims of majority support in the Assembly. The Governor, in his assessment of the situation, has indicated that he is inclined to wait till the Supreme Court delivers its verdict on the appeals in the disproportionate assets cases against Ms. Sasikala.
Noting that Ms. Sasikala is not a member of the Assembly, the Governor has apparently been advised to consider this as a “restrictive” factor in swearing her in as CM.
Technically, there is no bar on a non-legislator to be sworn in as Minister. Article 164 (4) of the Constitution merely states: “A Minister who for any period of six consecutive months is not a member of the Legislature of the State shall at the expiration of that period cease to be a Minister.”
Not an enabling clause: SC
However, the Supreme Court had in a judgment — B.R. Kapoor Vs State of Tamil Nadu and Others, September 2001 — held: “Article 164 (4) is not a source of power or an enabling provision for appointment of a non-legislator as a Minister even for a short duration. It is actually in the nature of disqualification or restriction for a non-member, who has been appointed as a Chief Minister or a Minister as the case may be, to continue in office, without getting elected within a period of six months.”
Sources said in the backdrop of the Supreme Court indicating that it would deliver the judgement in the assets case against Ms. Sasikala soon, the Governor was wondering whether she would be able to contest an election as legislator within six months (should she be convicted).

Sasikala vs Panneerselvam: We are enjoying, it is an opportunity to bond, say AIADMK legislators staying in resort

TOI 

CHENNAI: Eleven of the around 120 AIADMK legislators, who have been staying in a resort near Mahabalipuram since Wednesday night, said on Friday that they were enjoying as they got an opportunity to bond well. They were waiting for the invitation of acting Tamil Nadu Governor Ch Vidyasagar Rao to party general secretary V K Sasikala to form the government.

They reasoned that all the MLAs wanted to stay close to Chennai so that they could reach the state capital immediately as and when the Governor invites their leader to form the government.

The eleven legislators -- Kattumannarkoil MLA N Murugumaran, Krishnarayapuram MLA M Geetha, Gudiyattam MLA C Jayanthi Padmanabhan, Jayankondam MLA J K N Ramajeyalingam, Kunnam MLA R T Ramachandran, Sholingur MLA N G Parthiban, Perambalur MLA R Thamizhselvan, Cumbum MLA S T K Jakkaiyan, Tirupur South MLA S Gunasekaran, Tirupur North MLA K N Vijayakumar and Palladam MLA A Natarajan -- met mediapersons almost 2km away from Golden Bay Beach Resort, where they were staying, and claimed that they had not been kidnapped.

The MLAs, who came in batches, said they had voluntarily come forward to stay in a single place to extend their solidarity to Sasikala, who has staked claim to form the government in Tamil Nadu.

The MLAs said they were waiting for a direction from the party high command on the next course of action. "We are waiting for the Governor to invite Chinnamma to form the government. Once Governor makes the invitation we will prove our support either by appearing in person or by submitting declaration of support to Chinnamma," Ramachandran.





Golden Bay Beach Resort where AIADMK MLAs are staying (TOI pic by L R Shankar)

Tirupur South MLA S Gunasekaran denied that they were confined at the resort. He also rubbished claims that a legislator was injured when he fell into the swimming pool. "We are enjoying here. It is an opportunity for us to bond well," he said.

Murugumaran said, "After Chinnamma (Sasikala) took over as the general secretary, the party MLAs unanimously elected Chinnamma as the AIADMK legislature party leader on February 5 to pave way for her to become the chief minister. We felt the party's general secretary must be the chief minister," he said.

The MLAs said they had switched off their mobile phones as they had been receiving calls continuously from unknown people. Geetha said, "Initially callers were polite but as time passed by they started abusing. We have no other option than to switch off our mobile phones,"

The MLAs said people whom they did not know had filed habeas corpus petitions in the Madras high court stating they were missing. "It is plot hatched out by rival camp," said Jayanthi.

They also denied reports that a section of MLAs in the hotel had dissented and refused to have lunch. "(Caretaker chief minister) O Panneerselvam has colluded with the DMK and betrayed the party. We have resolved to stay united to realise the dreams of Puratchi Thalaivi (former chief minister J Jayalalithaa)," said Thamizhselvan.

Jayanthi said Chinnamma, who was with their beloved Amma for 30 years, would give good governance.

Meeting point

More than a dozen journalists have been waiting impatiently for the second consecutive day at a non-descript place, 2km away from a luxurious beach resort. Several SUVs carrying AIADMK party flags with fancy registration numbers were zipping in and out of the resort for the past two days.

Journalists, who were prevented from reaching the resort on Friday, were clueless about the condition of the MLAs staying in the resort.

Partymen owing allegiance to Sasikala ensured that the only road that leads to the resort have been blocked. "We are the members of the party and our MLAs have strictly instructed us not to let anybody to disturb them. We earlier made arrangements for a section of MLAs to meet the media and brief them about their status in the resort," said one of the men, who blocked journalists.

Around 11am on Friday, eight MLAs led by Kattumannarkoil MLA came out of the resort and addressed the media to clear the doubts that all the MLAs were kidnapped in an effort to prevent them from joining the Panneerselvam camp.

Sources said the party men permitted pro-Sasikala MLAs to address the media while the legislators, who were not happy with Sasikala's leadership, remained at the resort.

Sources said a temporary mobile jammer has been installed on the resort premises to prevent MLAs to establish contact with the outside world.

A section of villagers staying near the resort said they had seen a few men in white shirts and dhoties having animated discussions while hurrying in and out of the rooms. They also said the three luxury buses that transported them have been parked inside.

Villagers protest

A police officer of DGP rank was prevented by villagers from entering the resort on Friday night. The local residents blocked his jeep and when reporters approached him he declined to comment and left hurriedly.

S Kaliamoorthy, who runs a poultry farm, said normal life of the more than 100 families living in and around the resort was thrown out of gear after MLAs came to the resort. "Since Wednesday we have been witnessing speeding cars and jeeps going into coming out of the resort. The resort is full of vehicles. We were told that AIADMK MLAs are staying in the hotel. There is no police protection. The streetlights and lights around the resort have been put off for the past two days," said Kalimoorthy.

A woman said the local people had been worst affected due to unauthorized security cordon by the resort management and partymen.

Citing procedures, universities don't use anti-plagiarism software

TOI

CHENNAI: In a state where there has been an exponential jump in the number of PhD applicants, most universities have not made it compulsory to run theses through an anti-plagiarism software.

This, many academicians in the state say, is one of the main reasons for the poor quality of research churned out. "The focus is more on quantity than quality. PhD has become just a pre-requisite for being eligible for the post of assistant professor," a senior IAS official said. Anna University, enquiries have revealed, is the only one to insist on a certificate saying plagiarism in the research thesis is less than 20%.

A University of Madras official said the varsity library had advanced anti-plagiarism software, but it was not compulsory as a policy decision had not been taken."The use of the software has to be approved by the Board of Research Studies (BoRS) and resolved in the syndicate. That has not yet been done," he said.

A Madurai Kamaraj University said the use of the software procured a year ago was yet to be approved by the research committee and the syndicate.

This is true of all universities, including Bharatiar, Periyar and Manonmaniam Sundaranar (MSU), said As sociation of University Teachers general secretary N Pasupathy. "There is also debate on the tolerance levels. Some feel 20% is too less, especially for data-based research in science and technology," he said.

MSU professor of sociology S Samuel Asirraj said many professors had copy-pasted material on their research thesis. "Why would they fight for the software to be implemented?" he said.

With increased access to higher education, people without the urge to do serious research were pursuing PhDs and many of them resorted to plagiarism, Samuel added."When I was at Jawaharlal Nehru University, there used to be heated debates over the topics. Research would be a journey which is why the quality was also higher then," he said.

It is a vicious circle of incompetence and corruption as vice-chancellors, who also head committees to select professors, don't insist on original research as money power tilts the scales, Samuel said.

The senior IAS official said more number of students resorting to plagiarised work could also be because even those who worked hard were not able to express themselves in the written word."This is also a fallout of the learn-by-rote teaching philosophy in schools," he said.

Academicians concerned about the quality of research shouldn't wait for policy decisions and implement the software at the department level, he said.

Pasupathy said that most non-teaching staff were not equipped to handle the software and must be provided training in operating it. "Government should also ensure that back-end infrastructure is built," he said.
முகப்பேர் பகுதிவாசிகள் ரசாயன காற்றால்...பீதி! கண்டு கொள்ளாத மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்

மழைநீர் வடிகாலில் விடப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீரால், முகப்பேர்வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ரசாயனம் கலந்த கழிவுநீரை விடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தயங்கி வருவது, அப்பகுதியினருக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்துார் தொழிற்பேட்டையில் இருந்து, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை, 4 கி.மீ., துாரத்திற்கு, மழைநீர் வடிகால் அமைந்துள்ளது. இந்த வடிகால் முகப்பேர், 3 மற்றும் 6வது பிளாக் வழியாக செல்கிறது. அங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

கழிவுநீர்திறந்த நிலையில், உள்ள மழைநீர் வடிகாலில், பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. குறிப்பாக, அம்பத்துார் தொழிற்பேட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீர், மழைநீர் வடிகாலில் விடப்படுகிறது. 

இந்த ரசாயனம் கலந்த கழிவு நீரிலிருந்து வெளியேறும் ரசாயன வாயு, காற்று மண்டலத்தில் கலக்கிறது. இதனால், 3 மற்றும் 6வது பிளாக்கில் அமைந்துள்ள வீடுகளில் உள்ள, குளிர்சாதன பெட்டி, 'டிவி' போன்ற மின்னணு பொருட்கள் அனைத்தும், அடிக்கடி பழுதடைகின்றன.அதேபோல், வெள்ளி, வெண்கலம், எவர்சில்வர் பாத்திரங்கள், சில நாட்களில் கருமை நிறத்தில் மாறி விடுகின்றன. மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சுத்திணறல், அலர்ஜி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, நமது நாளிதழில், 2015 ஜனவரியில் செய்தி வெளியானது.
ரூ.40 கோடிஅதையடுத்து, குடிநீர் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதியை ஆய்வு செய்தனர். திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலில், சிமென்ட் குழாய் அமைக்க, மழைநீர் வடிகால் துறை சார்பில், 40 கோடி ரூபாய் செலவில், மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை.

மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மழைநீர் வடிகாலில், ரசாயனம் கலந்த கழிவுநீரை விட்ட, 15 தொழிற்சாலைகளுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அதன்பின், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.பலமுறை கோரிக்கை விடுத்தும், கழிவுநீர் பிரச்னை தீராததை அடுத்து, அப்பகுதிவாசிகள் சாலை மறியல் உள்ளிட்ட, பல போராட்டங்களில் ஈடுபட்டனர். 

மேலும், அரசு விழாவிற்கு வந்த, பால்வளத் துறை அமைச்சர், ரமணாவை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அரசு அதிகாரிகள், ஏனோ நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது, வாடகை வீடுகளில் இருக்கும், பல குடும்பங்கள், வீட்டை காலி செய்து, வேறு இடங்களில் குடியேறி வருகின்றனர். இன்னும், அப்பகுதியில் ரசாயன காற்று பீதி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சந்தேகம்இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:வாடகைக்கு வசித்தோர், ரசாயன கழிவுநீர் பிரச்னையால், வீட்டை காலி செய்து சென்று விட்டனர். சொந்த வீடு கட்டியுள்ள எங்களை போன்றோர், வேறு இடத்திற்கு செல்ல இயலாமல், இங்கேயே இருக்கிறோம். கழிவுநீரில் இருந்து வரும் ரசாயன காற்றால், நாங்கள் பல்வேறு நோய்களுக்கு உட்படுகிறோம். 

இவ்விவகாரத்தில், குடிநீர் வாரியம், மாநகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாறி மாறி, கையை காட்டி தப்பித்து கொள்கின்றனர். ரசாயனம் கலந்த கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது, நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தயங்கி வருவது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில், 'அப்போது இருந்த அதிகாரிகள், இட மாற்றம் பெற்று சென்று விட்டனர். இந்த பிரச்னைக்கு, அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என, ஆய்வு செய்கிறோம். மேலும், அந்த பகுதியை உடனடியாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ஆய்வு செய்ய வேண்டும்அப்பகுதி வெளிமண்டலத்தில், துருப்பிடிக்க கூடிய, வாயுக்கள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் தான், வெங்கலம் மற்றும் வெள்ளி பொருட்கள், கருமை நிறத்தில் மாறி விடுகின்றன. இதன் தாக்கம், அப்பகுதிவாசிகளின் நுரையீரலையும் பாதிக்க வாய்ப்புள்ளது. ரசாயனம் கலந்த தண்ணீரை, முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.வேதியியல் துறை பேராசிரியர்


- நமது நிருபர் -
கிராமத்தினர் முற்றுகை: கூவத்தூரிலிருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.,க்கள்

சென்னை: கூவத்துாரில் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் விடுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத் கூவத்துாரில் உள்ள கோல்டன் பே என்னும் சொகுசு விடுதி ஒன்றில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ளனர். இந்த தகவல் ஊடகங்கள் மூலமாக பரவியது.

கிராமத்தினர் முற்றுகை

இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுதியை முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ.,க்களை விடுதியிலிருந்து வெளியேற கூறி கோஷமிட்டனர். இதனால், எம்.எல்.ஏ.,க்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.


சசி பிடியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பட்டினியா?
அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிடுக்கிப்பிடி

DINAMALAR
சென்னை:எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், உணவு, தண்ணீர் சாப்பிட மறுப்பதாக கூறப்படுவது குறித்து, காஞ்சிபுரம் எஸ்.பி., பதிலளிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





'எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தான், அவர்கள் உள்ளனர் என, அரசு வழக்கறிஞர் கூறியது சரி
யல்ல' என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தகவல் சரியல்ல

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியை சேர்ந்த, வாக்காளர் இளவரசன் தாக்கல் செய்த மனு:குன்னம் தொகுதி, எம்.எல்.ஏ.,வான, ஆர்.டி. ராமச்சந்திரனை காணவில்லை; பிப்., 8ல், சென்னையில் நடந்த, அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார்.அவர் உட்பட, 130 எம்.எல்.ஏ.,க்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, சொகுசு பங்களாக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை, ஸ்ரீவைகுண்டம் தொகுதி, எம்.எல்.ஏ., சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்கள் கடத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துார் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.,வான ராமச்சந்திரன் உட்பட,   130 எம்.எல்.ஏ.,க்களையும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த, கூவத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதாவை ஆஜர்படுத்த கோரியும், மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை உடனே விசாரிக் கும் படி, நேற்று முன்தினம், உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கே.பாலு முறையிட்டார். அப்போது, அரசு வழக்கறிஞர், ''எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் உள்ளனர்; சட்ட விரோதமாக யாரும் பிடித்து வைக்கப்படவில்லை,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் சி.டி.செல்வம், மதிவாணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு, வழக்கறிஞர் கே.பாலு, ''இரண்டு வாரங்கள் என்பது நீண்ட நாட்களாகி விடும். எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்கியிருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். ஆனால், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில், எம்.எல்.ஏ.,க் களை தங்க வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன,'' என்றார்.

அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், ''அரசு வழக்கறிஞர், நேற்று கூறிய தகவல் சரியல்ல; எம்.எல்.ஏ.,க்கள்விடுதியில் யாரும் இல்லை; அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்து எனக்கு தகவல் இல்லை. அதற்கு அவகாசம் வேண்டும்,'' என்றார்.

உடனே வழக்கறிஞர் கே.பாலு, ''பிடித்து வைக்கப் பட்டுள்ள, 20 எம்.எல்.ஏ.,க்கள், உணவு சாப்பிட, தண்ணீர் குடிக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது. எனவே, காஞ்சிபுரம் எஸ்.பி., நேரில் சென்று    விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும்,'' என்றார்.

தள்ளிவைப்பு

இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:'எம்.எல்.ஏ.,க்கள் சுதந்திரமாக உள்ள னர்; அவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்கி இருக்கின்றனர் என, நேற்று முன் தினம் அரசு வழக்கறிஞர் கூறியது சரியல்ல' என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்; அதை பதிவு செய்கிறோம். சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதால், 20 எம்.எல்.ஏ.,க்கள் உணவு, தண்ணீர் சாப்பிட மறுப்பதாக, வழக்கறிஞர் கே.பாலு கூறியுள் ளார். அது, உண்மை என்றால் மிகவும் கடுமை யான விஷயம். இருந்தாலும், வழக்கறிஞர் கூறியதை வைத்து, நீதிமன்றம் செயல்பட முடியாது.

எனவே, இந்த வழக்கின் தன்மையை பொறுத்து, அரசு தரப்பு பதிலளிக்க வாய்ப்பு அளிப்பது, உகந்ததாக இருக்கும் என கருதுகிறோம். விசாரணை, பிப்., 13க்கு தள்ளி வைக்கப் படுகி றது. இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தர விட்டுள்ளது.

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar  TIMES NEWS NETWORK 12.01.2025 Bhopal : Two more crocodiles were rescued on Satu...