Wednesday, October 11, 2017


வியாபாரமாகிறதா செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை? - ‘கையில காசு... வயித்துல குழந்தை’


Published : 10 Oct 2017 06:24 IST

டி.எல்.சஞ்சீவிகுமார்

செற்கைக் கருவூட்டல் சிகிச்சையில் நாட்டில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது தமிழகம். மற்ற மாநிலங்களை விட குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மையங்கள் பெருகி வருவதால் தொழில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் இல்லாததால் இந்தத் துறையில் பயிற்சி இல்லாத மருத்துவர்களும் தரமற்ற சிகிச்சை முறைகளும் ஏமாற்று பேர்வழிகளும் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில் சென்னையில் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மையத்தை நடத்தி வந்த பெண் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். இவர் மீதான கொலை முயற்சிக்கு தொழில் போட்டியே காரணம் என்று கூறிய காவல் துறையினர், இதே துறையில் சிகிச்சை மையம் நடத்தி வரும் மருத்துவரை கைது செய்துள்ளனர். செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மையங்களை நடத்துவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்த மையங்களுக்கான விதிமுறைகளை வகுத்திருந்தாலும் அங்கீகாரமற்ற மையங்கள் அதிகரித்திருப்பதே மேற்கண்ட தொழில் போட்டிக்கும் தரமற்ற சிகிச்சைக்கும் காரணம் என்கிறார்கள் இந்தத் துறையில் இருக்கும் மருத்துவர்கள்.
 

சிக்கல்களை மறைக்கும் மையங்கள்

இதுகுறித்து இதே துறையில் இருக்கும் பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்கள் சிலர் கூறும்போது, “செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இன்று பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Artificical reproductive technology (ART), In - Vitro fertilisation (IVF), Intra - Uterine injection (IUI) என்று இதில் சிகிச்சை முறைகள் இருக்கின்றன. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினரிடம் ஆணின் விந்தணு மற்றும் பெண்ணின் கருமுட்டைகளை எடுத்து அதனை செயற்கைக் குழாயில் கருவூட்டல் செய்து அதனை பெண்ணில் கர்ப்பப் பைக்குள் செலுத்துவது அடிப்படையான சிகிச்சை முறை. இந்தத் துறையில் ஏற்பட்டிருக்கும் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக தற்போது செயற்கைக் குழாய் அல்லாமல் நேரடியாகவே பெண்ணின் கருப்பைக்குள் ஆணின் விந்தணுக்களை செலுத்தி கருவூட்டல் செய்யும் முன்னேறிய IVF சிகிச்சை முறையே இன்று பரவலாக அளிக்கப்படுகிறது.
இதிலும் எதிர்மறை சுழற்சி மூலம் மாதவிடாயின் முதல் நாளிலிருந்து தொடங்கும் சைக்கிள் ஆன்டோகோனிஸ்டி என்ற சுழற்சிமுறை சிகிச்சையும் இருக்கிறது. மாதவிடாய் தொடங்கிய 22-ம் நாளிலிருந்து தொடங்கும் ஆன்டோகோனிஸ்டி சைக்கிள் எனப்படும் சிகிச்சையும் இருக்கிறது. இந்த வகையான சிகிச்சைகள் 5 வார காலத்துக்கு அளிக்கப்படுகிறது.
கருவை கருப்பைக்குள் மாற்றியப் பின்பு கருவுற்றிருப்பதை உறுதி செய்ய இரு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அவ்வாறு உறுதி செய்வதுடன் இந்த சிகிச்சை மையங்களின் பணி நிறைவடைகிறது. அதன் பின்பு கருவுற்றிருக்கும் பெண் வழக்கமான மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதேசமயம் மேற்கண்ட சிகிச்சைகளின்போது குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கு ஓவுலேஷன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் (OHSS) எனப்படும் ஹார்மோன் சமமின்மைக் காரணமாக அளவுக்கு அதிகமாக கருமுட்டை உற்பத்தியும் ஏற்படும். தவிர, IVF சிகிச்சை மூலம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 சதவீதம் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. பெண்களின் கருத்தரிப்பு 35 வயதிலிருந்து பெருமளவு குறைவதால் கரு முட்டைகளின் தரம் குறைதல், அடர்த்தி குறைவது இயல்பானதே. அதேசமயம் ஆண்களின் வயது அதிகரிக்கும்போதும் விந்தணுக்களில் டி.என்.ஏ. சிதைவு, தரம் குறைவது, குறைபாடுள்ள உருவம், எண்ணிக்கை, அசைவு குறைந்துபோவது போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிக்கல்களை சொல்லலாம். இவை எல்லாம் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை முறையில் இருக்கும் பின்னடைவுகள்.

குழந்தை பிறக்காவிட்டால் பணம் வாபஸ்

ஆனால், இந்த பின்னடைவுகளை எல்லாம் மறைத்துவிட்டு, எங்களிடம் வந்தால் 100 சதவீதம் குழந்தைப்பேறு நிச்சயம் என்று அறிவிப்புகளை வெளியிட்டு பல சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன. இன்னும் பல சிகிச்சை மையங்களோ குழந்தைப் பேறு இல்லை எனில் பணம் வாபஸ் என்றெல்லாம் விளம்பரம் செய்து தொழில் போட்டியை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றன. இவை எல்லாம் மருத்துவ சிகிச்சை என்கிற தார்மீக சேவை முறையை கேள்விக்குறியாக்குகின்றன.
இந்த சிகிச்சை என்றில்லை, மருத்துவத்தின் எந்தச் சிகிச்சையிலும் 100 சதவீதம் குணப்படுத்திவிடுவோம் அல்லது தீர்வு கண்டுவிடுவோம் என்று சொல்வது மருத்துவ தர்மம் அல்ல. நிரூபணமான அறிவியல் உண்மையும் கிடையாது. அப்படி இருக்கும்போது செயற்கைக் கருவுட்டல் மற்றும் குழந்தைப்பேறு 100 சதவீதம் நிச்சயப்படுத்த முடியாது. ஆனால்,இன்று தமிழகம் முழுவது பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற மையங்கள் அதிகரித்துவிட்டதால் தொழிலின் தரம் குறைந்துவிட்டது. போலிகளும் அதிகரித்துவிட்டார்கள். தவிர, மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்து விற்பனையாளர்களுடன் மருத்துவர்கள் வணிக ரீதியான தொடர்பு வைத்திருப்பதிருப்பதுபோல இந்தத் துறை மருத்துவர்கள் இதே துறையிலிருக்கும் இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்துள்ளார்கள். ” என்கிறார்கள்.

சாதனையாளர் குழந்தை வேண்டுமா?

செயற்கைக் கருவூட்டலுக்காக சென்னையில் மட்டும் சுமார் 20 அங்கீகாரம் பெற்ற தரமான சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கீகாரம் இல்லாமல் சுமார் 50 மையங்கள் வரை செயல்படுவதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். மேற்கண்ட சிகிச்சைகளுக்கு ரூ.20,000 தொடங்கி ரூ.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். கருமுட்டை மற்றும் விந்தணு வங்கிகளில் கருமுட்டைகள் ரூ.30,000 முதல் 70,000 வரையிலும் விந்தணுக்கள் ரூ. 10,000 முதல் 70,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தரம் குறைந்த மற்றும் இறந்துபோன விந்தணுக்களை, கருமுட்டைகளை விற்பனை செய்வது போன்ற பிரச்சினைகள் இந்தத் துறையிலும் சகஜம்தான் என்றாலும் மருத்துவர் ஒருவர் சொல்லும் விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
“இந்தத் துறையில் விந்தணுக்களையும் கருமுட்டைகளையும் வாங்கித் தரவும் விற்றுத் தரவும் ஏராளமான இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். ‘குழந்தை இல்லை’ என்று சில மருத்துவர்களிடம் தம்பதியர் வந்த சில நிமிடங்களுக்காக தம்பதியரின் விபரங்கள் இடைத் தரகர்களுக்குச் சென்றுவிடும். தம்பதியரை அணுகும் அவர்கள், ஏதோ பொம்மையை விற்பனை செய்வது போல ‘உங்களுக்கு எதுபோன்ற குழந்தை வேண்டும்? வெள்ளையாக அல்லது சிகப்பாக குழந்தை பிறப்பதற்கு பிரத்தியேகமான விந்தணுக்கள், கருமுட்டைகள் இருக்கின்றன. சிறந்த விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களின் விந்தணுக்கள், கருமுட்டைகள்கூட எங்களிடம் கிடைக்கும். அவற்றை வைத்து குழந்தை பெற்றுகொண்டால் உங்களுக்கு அதே போன்ற சாதனையாளர் குழந்தை பிறக்கும்’ என்றெல்லாம் மூளைச் சலவை செய்கிறார்கள். இதை கேட்டு லட்சக்கணக்கான ரூபாயை இழந்த தம்பதியர்கள் எல்லாம்கூட இருக்கிறார்கள்” என்றார் அந்த மருத்துவர்.
நாட்டின் 10 சதவீதத்தினருக்கு குழந்தையின்மைச் சிக்கல் இருக்கிறது. மும்பையின் பன்னாட்டு மக்கள் தொகை ஆய்வியல் நிறுவனம் அளித்திருக்கும் அறிக்கையின்படி 16 சதவீதம் பெண்கள் குழந்தையின்மை சிக்கலில் இருக்கிறார்கள். குழந்தையின்மையால 17 சதவீதம் பெண்ளுக்கு மண வாழ்க்கையில் சிக்கல் எழுந்துள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட செயற்கைக் கருவூட்டல் மையங்கள் சுமார் 800 மட்டுமே இருக்கின்றன. ஆனால் 3,500 அங்கீகாரம் இல்லாத மையங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.
நடப்பாண்டில் இந்தத் தொழிலின் வளர்ச்சி விகிதம் 19 - 21 சதவீதமாகவும், ஒட்டுமொத்த கூட்டு வருடாந்திர வளர்ச்சி வீதம் ரூ. 2500 கோடியாகவும் இருக்கிறது. இதிலிருந்தே இந்த தொழிலின் விஸ்வரூபத்தை புரிந்துகொள்ளலாம்.
குழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்... வாடகைத் தாய்!
இதே துறையின் மற்றொரு பரிணாமம் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வது. கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் வாடகைத் தாய் சட்ட மசோதா - 2016-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டாலும் பழைய நடைமுறைகள் எதுவும் மாறவில்லை என்கிறார்கள் அந்தத் துறையில் இருப்பவர்கள். ஆண், பெண் மலட்டுத் தன்மை சிக்கல்களைத் தாண்டி பெண்கள் பலருக்கு கர்ப்பப் பை புற்றுநோய், கர்ப்பப் பைக் கட்டி, கர்ப்பக் காலத்தில் தொடர் ரத்தப்போக்கு, தொடர் கருக்கலைப்பு, கர்ப்பப்பை நீக்கம் ஆகிய காரணங்களால் குழந்தை பெற முடியாமல் போகிறது. இவர்களுக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது வாடகைத் தாய் முறை.
குழந்தைப் பேறு இல்லாத தம்பதியரின் விந்தணு, கருமுட்டை இரண்டையும் எடுத்து, சோதனைக் குழாய் மூலம் கருவாக்கம் செய்து, அதனை வாடகைத் தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தி, குழந்தையை வளர்த்து பெற்றுக்கொடுப்பது வாடகைத் தாயின் பணி. இதற்காக பல லட்சங்கள் வரை வாடகைத் தாய்க்கு அளிப்பதாக கூறப்படுகிறது. சில ஆயிரங்கள் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களும் உண்டு. கோடிகள் புரளும் இந்தச் சந்தையிலும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 30,000 குழந்தைகள் பிறப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். சர்வதேச அளவில் இந்தியா இதில் முதலிடத்தில் இருக்கிறது.
சுவிட்சர்லாந்து, கனடா, பின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, சவூதி அரேபியா உள்ளிட்ட 26 நாடுகளில் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 1993-ம் ஆண்டிலிருந்தே வாடகைத் தாய் முறை நடைமுறையில் இருந்தாலும் 2000-ம் ஆண்டுகளுக்கு பின்புதான் இந்த முறையில் ஏராளமான குழந்தைகளைப் பிறப்பித்தார்கள். வெளிநாடுகளில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறக்க ரூ. 80 லட்சம் வரை செலவாகும் நிலையில் இந்தியாவில் ரூ.8 லட்சம் வரை மட்டுமே இதற்காக செலவாகிறது.
இதனால், 2000-களின் தொடக்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து இந்திய வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டார்கள். இதில் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பெண்ணியவாதிகள் பலரும் இதற்கு எதிராக குரல் எழுப்பினார்கள்.
கடந்த 2002-ம் ஆண்டு ஜப்பானிய தம்பதியர் குஜராத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தைக்கு ஏற்பாடு செய்தனர். வாடகைத் தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே ஜப்பான் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால், குழந்தையை யார் வளர்ப்பது என்கிற பிரச்சினை உருவாகி விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இதன் பிறகுதான் முதன் முதலாக உச்ச நீதிமன்றம் வாடகைத் தாய் முறையில் சில வழிகாட்டுதல்களை உத்தரவிட்டது.
பின்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், ‘வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண், மூன்று முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும்; வாடகைத் தாய் ஏற்கெனவே இரு குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும்; குழந்தையில்லாத தம்பதியரிடம் பெறும் தொகை (குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம்) வாடகைத் தாய்க்கு அளிக்கப்பட வேண்டும்; வாடகைத் தாயின் கர்ப்பக் காலத்தில் மருத்துவ பராமரிப்பு செலவுக்காக மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்பட வேண்டும்’ என்பது உட்பட சில வழிகாட்டுதல்களை வகுத்தது.

மேற்கை ஈர்க்கும் இந்தியக் குழந்தைகள்

எந்த வகையிலும் குழந்தை பிறப்புக்கு வழியில்லாத தம்பதியர் மட்டுமே வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் வாடகைத் தாய் முறையின் அடிப்படை அம்சமே. ஆனால், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள காரணங்களாக மூத்த மருத்துவர் ஒருவர் சொல்லும் காரணங்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. “அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் தம்பதியர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் மீது ஈர்ப்பு அதிகம். ஆன்ம பலத்திலும் உடல் உறுதியிலும் இந்தியக் குழந்தைகள் அவர்கள் நாட்டுக் குழந்தைகளைவிட சிறப்பாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதனால், இந்திய வாடகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அதேசமயம் அவர்கள் நாட்டில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைவிட இங்கே 90 சதவீதம் செலவு குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
நமது நாட்டிலேயே மேல் தட்டுப் பெண்கள் பலருக்கு குழந்தைகள் மீது விருப்பம் இருந்தாலும் சுயமாகக் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் இல்லை. கர்ப்பக் கால பராமரிப்பு, பிரசவ வலி, மார்பகங்கள் தொய்வு, பிரசவத்துக்கு பின்னர் உடல்ரீதியாக ஏற்படும் தொய்வு, அழகு குறைந்துபோதல் என்று பல்வேறு காரணங்கள் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகின்றன. இதனால் குழந்தை பெறும் தகுதி இருந்தும் வசதியான பெண்கள் பலர் வாடகைத்தாயை நாடுகிறார்கள்.

குழந்தை பெற தடை விதிக்கும் நிறுவனங்கள்

இவை தவிர்த்து, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இங்கே இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இதுபோன்ற நிறுவனங்களில் இளம் பெண்கள் பணிக்கான நேர்முகத் தேர்வின்போதே, குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த நிபந்தனைகளை விதிக்கின்றன. குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அல்லது குறிப்பிட்ட திட்டப் பணிகள் நிறைவடையும் வரை குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொள்ளும் நிறுவனங்களும் இருக்கின்றன. குழந்தை பெற்றுக்கொண்டால் நிறுவனத்தின் பணிகள் பாதிப்பது, இரவுப் பணி பார்க்க இயலாதது ஆகியவை இதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் இது சட்ட விரோதமான செயல்தான்...” என்கிறார் அவர்.

என்ன சொல்கிறது வாடகைத் தாய் மசோதா?

கடந்த 2012-ம் ஆண்டிலிருந்தே வாடகைத் தாய் மசோதா குறித்து விவாதிக்கப்பட்டாலும் 2016-ம் ஆண்டில்தான் இந்த மசோதா முழு வடிவம் பெற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டு, பழைய நடைமுறைகள் முற்றிலுமாகவே மாற்றப்பட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டினர் இந்தியப் பெண்களை வாடகைத் தாயாகப் பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பூர்வமான இந்திய தம்பதியர் அதுவும் திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும். திருமணம் ஆன உறவு முறை பெண், அதுவும் ஒருமுறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும்.
ஏற்கெனவே குழந்தை இருப்பவர்கள், தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்துக்கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்பவர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. இது வியாபாரம் இல்லை; மருத்துவ சேவை என்பதால் வாடகைத் தாயாக இருப்பவர்களுக்கு தனிக் கட்டணம் எதுவும் கிடையாது. மாறாக மருத்துவ செலவுகள் மட்டுமே வழங்க வேண்டும். வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் இதர குழந்தைகளுக்கான அனைத்து சட்டப்பூர்வமான உரிமைகளும் உண்டு.
இந்தியாவில் இனி புதியதாக இதுதொடர்பான மருத்துவமனைகளுக்கு அனுமதி இல்லை. இந்த விஷயத்தில் விதிகளை மீறுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்’ என்கிறது புதிய சட்ட மசோதா.

பிரச்சினைக்குத் தீர்வு என்ன?

முதலில் தம்பதியர் உடனடியாக அல்லது குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் குழந்தை வேண்டும் என்கிற மனப்பாங்கை கைவிட வேண்டும். சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை என்றவுடனே அவர்களுக்கு குழந்தையே பிறக்காது என்று முடிவு செய்துகொள்ள வேண்டாம். மூத்த மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனையின்படி உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் உடலுறவு குறித்த ஆலோசனை பெற்று குழந்தையைப் பெற முயற்சிக்க வேண்டும். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளுக்கு பிறகு குழந்தையைப் பெற முடியாது என்று தெரிந்தால் மட்டுமே அங்கீகாரம் பெற்ற செயற்கைக் கருவூட்டல் மையங்களை நாடலாம்.
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடி பேச்சு

By DIN | Published on : 10th October 2017 10:47 AM




ஹைதராபாத்: ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பிலான சங்கம் வெற்றி பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டிஆர்எஸ் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் கலந்துகொண்டார்.

உயர் அதிகாரிகள் குறித்து தொழிலாளர்கள் பல்வேறு குறைகளை கூறினார்கள். நிறுவனத்தின் மெடிக்கல் போர்டில் ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டினர். நிறுவனத்தின் குடியிருப்பில் இடம் வேண்டும் என்றால் லஞ்சம் என பரவலாக ஊழல் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலங்கானா போகு கனி கர்மிகா சங்கத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மக்கள் தங்களுக்கான நலன்களை பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது துரதிருஷ்டவசமானது என்றவர் இது நாள் வரை தொழிலாளர்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

புதிய மாநிலம் என்பதால் பல்வேறு பிரச்னைகளை தினந்தோறும் சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் சிங்கரேணி தொழிலாளர் பிரச்னையில் கவனம் செலுத்தமுடியவில்லை என தொழிலாளர்களிடம் விளக்கம் அளித்தார். வட்டி இல்லாத இலவச வீட்டு கடன்கள் அனைத்து தகுதியுள்ள தொழிலாளர்கள் வழங்கப்படும் என்றார்.

லஞ்சம் கேட்கும் ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என்றும் லஞ்சத்தை ஊக்குவிக்க வேண்டாம் என குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆவேசமாக பேசினார் சந்திரசேகர் ராவ்.

சிங்கரேணி தொழிற்சங்க உறுப்பினர்களின் மாத கட்டணம் தற்போது 20 முதல் 1 வரை குறைக்கப்படும். தொழிலாளர்களின் குடியிருப்புகளில் ஏசி வசதி குறைக்கப்படும் என்றும், அரசு ஊழியர்களின் குழந்தைகள் ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் இடம் பெற்றால், கல்வி செலவினங்களை அரசு செலவிடும். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை சிங்கரேணி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிப்பதற்கும், ஊழியர்களின் பழைய குடியிருப்புகளை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், "விரைவில் சிங்கரேணி யாத்ராவை நடத்துகிறேன், அதில், நேரடியாக உங்கள் பிரச்னைகளைக் கண்டுபிடிப்பேன். சிங்கரேணி மருத்துவமனையில் எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள மருத்துவ சோதனைகளில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார்.

முதல்வர் சந்திரசேகர ராவின் பேச்சு, அதிகாரிகளிடையே மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசுகையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 10: உலக மனநல தினம்! மன அழுத்தத்தை அதிகரிக்கின்றதா பணியிடங்கள்?

Published on : 10th October 2017 03:27 PM



உலகம் முழுவதிலும் மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த 1992-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் அக்டோபர் 10-ம் தேதி மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மனநல தினத்துக்கான இந்த வருடக் கருப்பொருளாக உலக சுகாதார மையம் அறிவித்திருப்பதாவது ‘பணியிடத்தில் மனநலம் பேணுதல்’ என்பதாகும். உலக சுகாதார மையத்துடன் இனைந்து தேசிய மனநல கூட்டமைப்பு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பிரகடனம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதிலும் 150-கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இந்தத் தினம் ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டும் மனநல வாரமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒரு தற்கொலை நிகழ்கிறது, அதாவது ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதிலும் பெரும்பான்மையானோர் வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்பவர்கள் என்னும் அதிர்ச்சி தகவலை தருகிறது ஒரு ஆய்வு. உளவியல் ரீதியான மனநல விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்குவதன் மூலம் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்கலாம் என்றும் உளவியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 33% பேர் தாங்கள் வேலையில் ஏற்படும் பிரச்னை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் கூறியுள்ளார்கள். அவர்களில் 90% பேர் மன அழுத்தத்தாலும், 78% பேர் கவலையாலும், 60% பேர் மனச் சோர்வாலும், 52% பேர் தூக்கமின்மையாலும் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பெரும்பாலும் 8 முதல் 9 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, ஆனால் இதையும் தாண்டி பலர் அதிக நேரம் இரவு முழுவதும் அவர்கள் கண் விழித்து வேலை செய்வது மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.



தூக்கம் என்பது நாம் உடலுக்கு மட்டும் தருகின்ற ஓய்வு அல்ல, சதா சர்வ நேரமும் எண்ணற்ற விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனதிற்கும் தருகின்ற ஓய்வாகும். அந்த வகையில் உறக்கம் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்று. அந்த உறக்கத்தைத் தியாகம் செய்து பணி செய்வதால் கட்டாயம் மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு ஏற்பட்டு இறுதியில் எந்த வேலைக்காக அவ்வளவு கஷ்டப்பட்டோமோ அந்த வேலையிலேயே கவனம் செலுத்த முடியாமல் போகும். இன்னிலையில் ஏற்கனவே இருந்த மனச் சோர்வு பிறகு வேலையில் கவனம் செலுத்த முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் இவையனைத்தும் சேர்ந்து மனநலத்தை முற்றிலும் பாதிக்கும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இந்த வருடம் ‘பணியிடத்தில் மனநலம் பேணுதல்’ என்ற கருப்பொருளை தேர்வு செய்திருக்கிறது உலக சுகாதார மையம்.

இதில் இருந்து தங்கள் ஊழியர்களைக் காப்பாற்ற நிறுவனங்கள் வேலை நேரத்திற்கும் மேலாக ஒருவர் அதிக நேரம் பணி செய்வதை ஊக்குவிக்காமல், அதிக பணி சுமையை அலுவலர்களுக்குக் கொடுக்காமல், ஒருவேளை ஒருவர் மன சொர்வு அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை உளவியல் ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற செய்து அதிலிருந்து அவர்கள் விடுபட உதவ வேண்டும். பணி செய்பவர்களுக்கு ஏற்றப் பணி சூழலை ஏற்படுத்தித் தந்து, அவர்கள் மன ஆரோக்கியத்தைச் சீர் படுத்த யோகா, தியானம் அல்லது ஆன்மிக பயிற்சிகளை அவர்களுக்குத் தர வேண்டும். மேலும் எப்பொழுதும் வேலை பற்றிய எண்ணம் மட்டும் இல்லாமல் சமூக பணிகளிலும் அவர்களை ஈடுபடச் செய்து அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

இன்லண்ட் லெட்டரை மறக்க முடியுமா? வாசகர்களே தினமணிக்கு கடிதமெழுத ஒரு நல்வாய்ப்பு!

By கார்த்திகா வாசுதேவன் | Published on : 10th October 2017 06:12 PM |




போஸ்ட்மேன், நம் மக்களின் வாழ்க்கையில் டீச்சர், டாக்டர், டிரைவர், கண்டக்டர் போல போஸ்ட் மேன் என்ற வார்த்தையும் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இருந்தது. அதற்கு எளிமையான உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 80 களில் வந்த தமிழ் திரைப்படங்களில் சிலவற்றைப் பார்வையிடுங்கள். நிச்சயம் 10 ல் 4 படங்களிலாவது போஸ்ட்மேன் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும். அப்படி பொதுமக்களுக்கும், போஸ்ட் மேனுக்குமான உறவு, ஆத்மார்த்தமானதாக இருந்தது. அதனால் தான் போஸ்ட்மேன், மணியார்டர், தந்தி போன்ற வார்த்தைகள் பொது மக்களது அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தன.

கடிதங்களை அடுத்து தகவல் தொடர்பின் அடுத்த கட்ட வளர்ச்சியான டெலிபோன் என்ற வசதி கூட ஆரம்ப காலங்களில் தபால் நிலையங்களில் தான் ஏற்படுத்தப்பட்டது. ஊரில் யாருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தாலும், தபால் நிலையங்களுக்கு ஓடி வந்து தான் பேசி விட்டுப் போவார்கள். இப்படி போஸ்ட்மேன்களோடு, போஸ்ட் ஆஃபீஸ்களும் (தபால் நிலையங்களும்) நம் மக்களது வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தன.

80 களின் பிற்பகுதியில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட பிரம்மாண்ட வளர்ச்சியின் பின் சந்தைக்குள் புகுந்த கம்ப்யூட்டர், மற்றும் அலைபேசிகளின் அபிரிமிதமான பயன்பாட்டினால் உலகமே ஒரு குளோபல் கிராமமாகச் சுருங்கி விட்டது. ஆனாலும், இப்போதும் கூட இந்திய அஞ்சல் துறையின் சேவை இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்து விட்டதாகக் கருதமுடியாது. இப்போதும் அலுவலக ரீதியான முக்கியமான கடிதங்கள், தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர் கடிதங்கள், அரசு அலுவலகக் கடிதங்கள், வங்கிகளின் வாடிக்கையாளருடனான தொடர்புகள் மற்றும் அறிவிப்புகள் உள்ளிட்டவை போஸ்ட் கார்டு, கூரியர் தபால், பதிவுத் தபால், போன்றவை மூலமாகத் தான் கையாளப்படுகின்றன. இதை ஏன் இப்போது ஞாபகப்படுத்த வேண்டும் என்றால்;

இன்று ‘இந்திய தபால் தினம்’!

நேற்று அக்டோபர் 9 ஆம் தேதியன்று உலகெங்கிலும் சர்வதேச தபால் தினம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி இன்று அதாவது அக்டோபர் 10 ஆம் நாள், இந்தியாவில் தபால் தினம் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அக்டோபர் 9, 1874 இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. அந்தத் தினமே உலக தபால் தினமாகக் தற்போது கொண்டாடப்படுகிறது. மொத்தம் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த தினத்தை உலக தபால் தினமாகக் கொண்டாடி வருகின்றன. 1969 ஆம் ஆண்டு ஜப்பான், டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் கொண்டாடுவதென முடிவெடுத்து அதை உலகின் பல நாடுகள் இன்று வரை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.

உலகிலேயே அதிக தபால் நிலையங்களைக் கொண்ட நாடு இந்தியா தான், இந்திய அஞ்சல் துறை 1764ல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.

இந்தியாவில் தபால் துறையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி என்பது ஆங்கிலேயே காலனி ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. அதற்கு முன்பு வரை நமது இந்திய அரசர்கள் புறாக்கள் மற்றும் பருந்துகளின் காலில் கடிதச் சுருள்களை கட்டி விடுதல், ஒற்றர்கள் மூலமாக கடித ஓலைகளை அனுப்புதல் என்று தான் தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு தான் தபால் அனுப்பும் முறை, அரசு எந்திரத்துக்குள் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது முதன்முறையாக தங்களது வர்த்தகப் பயன்பாட்டுக்காக 1764- 66 க்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் அவர்கள் தபால் நிலையங்களை நிறுவினர். இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குமாக மாற்றி அமைத்தவர் அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இதன் மூலமாகப் புண்ணியம் கட்டிக் கொண்ட பெருமை அவரைத் தான் சேரும். ஏனெனில் அதற்கு முன்பு வரை அஞ்சலகங்கள் என்பவை கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக தகவல் பரிமாற்றங்களுக்கு மட்டுமானவையாகவே இருந்தன.

ஸ்பீட் போஸ்ட்...

எகிப்தில் வர்த்தகம் செய்து வந்த தாமஸ் வஹ்ரன் 1820 ஆம் ஆண்டு வாக்கில் அங்கே தமக்கேற்பட்ட வியாபாரத் தோல்வியை அடுத்து தமது அடுத்த புதிய முயற்சியாக இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்குமான தகவல் தொடர்பை அதி விரைவாக்கித் தரும் முயற்சியைத் தொடங்கினார். ஏனெனில், அந்நாட்களில் தபால்கள் கடல்மார்க்கமாக மட்டுமே பெறப்பட்டு, அனுப்பப் பட்டு வந்தன. இந்த முறையில் ஒரு கடிதம் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்து சேர மூன்று மாதங்களுக்கும் அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டது. எனவே தாமஸ், கடிதங்களை அனுப்பிப், பெற நிலவழி மார்க்கங்களைத் தேடி கண்டடைந்து செயல்படுத்தி கடிதங்களைப் பெறுவதற்கான கால தாமதத்தை 35 நாட்களாகக் குறைத்தார். ஆனாலும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் அவர் தமது புதிய தகவல் தொடர்புத் திட்டத்துக்கான அனுமதியைப் பெற மேலும் 10 ஆண்டுகள் அவகாசம் தேவைப்பட்டது.

அந்தக் காலத்தில் கடிதங்கள் தாமதமாக பெறப்பட்டதற்கான ஒரு உதாரண சம்பவம்...

2015 ஆம் ஆண்டில் 80 வயதுப் ஃப்ரெஞ்சுப் பெண்மணி ஒருவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் அவரது முப்பாட்டனாருக்கு வந்திருக்க வேண்டிய கடிதம். அனுப்பப் பட்ட ஆண்டு 1877. அவரது வீட்டிலிருந்து 6 மைல் தொலைவில் உள்ள ஒரு வாடிக்கையாளர் இவரது தாத்தாவின் ஸ்பின்னிங் மில்லில் இருந்து நூற்பதற்குப் பஞ்சு கேட்டு விண்ணப்பித்திருந்த அந்தக் கடிதம் கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாமதமாகி 2015 ஆம் ஆண்டில், சரியான முகவரி எழுதப்பட்டிருந்ததால் இவரை வந்தடைந்திருந்தது. இதைப் போல தாமதமாக வந்து சேர்ந்த கடிதங்களுக்கான உதாரணங்கள் அனேகமுண்டு இந்திய தபால்துறை வரலாற்றில்!

சரியான முகவரி இல்லாத கடிதங்களை என்ன செய்வார்கள்?

ஒழுங்காக முகவரி எழுதப்படாத அல்லது தவறான முகவரி குறிப்பிடப்பட்டு திருப்பி அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் டெட் லெட்டர் ஆஃபீஸுக்கு அனுப்பப்படுகின்றன (அதிகாரப்பூர்வமாக திருப்பி அனுப்பப்பட்ட கடிதங்களுக்கான அலுவலகம் (Returned Letter Office) கடிதங்கள் அனைத்தும் அங்கே சில காலம் காத்திருப்பில் வைக்கப்பட்டு யாரும் தேடுவார் இல்லையெனில் பின்பு அக்கடிதங்கள் அழிக்கப்பட்டுவிடும். பார்சல்கள் அல்லது புத்தக பண்டில்கள் எனில் அவை குறைந்தபட்சம் ஒரு வருட காலம் காத்திருப்பில் வைத்திருக்கப் படும். பின்னர் அவற்றைத் தேடி யாரும் அணுகவில்லை எனில் அவை அழிக்கப்பட்டு விடுமாம்.

சில சுவாரஸ்யங்கள்...

இந்தியாவில் முதன் முதலாக வெளியிடப்பட்ட தபால்தலையில் இடம்பெற்றது மாமன்னர் சந்திரகுப்த மெளரியர் முகம்.

சுதந்திர இந்தியா முதலில் வெளியிட்ட தபால் தலையில் இடம்பெற்றது நமது இந்திய தேசியக் கொடி.

சுதந்திர இந்தியா வெளியிட்ட தபால்தலை முத்திரையில் இடம்பெற்ற முதல் மனிதர் எனும் பெருமைக்குரியவர் தேசப்பிதா மகாத்மா காந்தி.

2011 ஆம் ஆண்டில் காஷ்மீரில் தால் ஏரியில் மிதக்கும் தபால் அலுவலகம் முதன்முதலாகக் கொண்டு வரப்பட்டது.

கடிதங்கள் பிற்காலத்தில் இலக்கிய வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தன. கடித இலக்கியம் என்றொரு பிரிவே சிறப்புறப் பேணப்பட்டது. பண்டித நேரு, தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு தான் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் மாணவப் பருவத்தில் எவரும் தவற விடக்கூடாத அளவுக்கான அருமையான புத்தகமானது.

தமிழிலும் கடித இலக்கிய வரிசையில்;

மறைமலையடிகள், கோகிலாம்பாள் கடிதங்கள்,

மு. வரதராசனாரின் ‘செந்தாமரை’ கடித இலக்கிய வரிசை,

வள்ளலார் கடித இலக்கிய வரிசை

காந்தி கடித இலக்கிய வரிசை

அறிஞர் அண்ணா ‘தம்பிக்கு’ என்ற பெயரில் எழுதிய கடித இலக்கிய வரிசைகள்,

கலைஞரின் ‘உடன்பிறப்பே’ கடிதங்கள்,

கி.ரா வின் கரிசக் காட்டுக் கடிதாசி வரிசைகள் என கடித இலக்கிய மரபின் செம்மையையும், சிறப்பையும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

கடிதம் எழுதுவதை ஒரு கலையாக எண்ணி சீர் மிக்க கடிதங்கள் பலவற்றை எழுதி அவற்றை கடித இலக்கியப் பதிவாக்கி பிற்கால சந்ததியினர் வாசித்து வாழ்வின் உன்னதங்களை அறிந்து கொள்ள வழிகோலி மறைந்த தமிழறிஞர்கள் பலர் நம்மிடையே உண்டு. ஆகவே கடிதங்கள் என்பவை வெறுமே தகவல் பரிமாற்றங்களுக்கு மட்டுமேயானவை என்று அவற்றின் மகத்தான சமூகப் பங்களிப்பை குறுக்கி விடத் தேவையில்லை.


அஞ்சலகக் குறியீட்டு எண் (பின்கோட்) எதைக் குறிக்கிறது?

இந்தியாவின் அஞ்சலகக் குறியீட்டு எண் 6 இலக்கங்கள் கொண்டது. அதில் முதல் இலக்கம் மாநிலத்தையும், இரண்டாவது இலக்கம் துணை பிராந்தியத்தையும், மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும், மீதமுள்ள மூன்று இலக்கங்கள் தபால் அலுவலகம் அமைந்துள்ள இடத்தையும் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.

உலகம் முழுக்க மக்களிடையே இப்போது ‘கைப்பட கடிதம் எழுதும்’ வழக்கம் கொஞ்சம், கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது. என்ன தான் மின்னஞ்சல், வாட்ஸ் அப், எஸ் எம் எஸ் என்று தகவல் பரிமாற்றங்கள் தடையற நிகழ்ந்தாலும் அவையெல்லாம் நமது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்டதான ஒரு கடிதத்தை வாசிக்கும் போது கிடைக்கும் இன்பத்திற்கு ஈடாகாது. எனவே கைப்படக் கடிதம் எழுதும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தினமணி.காம், இந்தக் கட்டுரை வாயிலாக உங்களுக்கு ஒரு அருமையான அனுபவத்தைத் தர முயற்சிக்கிறது.

இன்லண்ட் லெட்டரில் அல்லது போஸ்ட் கார்டில் அல்லது A 4 ஷீட் கடிதம் வாயிலாக காவியம் படைக்க எண்ணும் ஆசை இருப்பவர்கள்...

ஒரு வித்யாசமான அனுபவத்திற்காக, உங்களது நெருங்கிய நட்புகளுக்கோ, அல்லது அன்பானவர்களுக்கோ, அல்லது பெற்றோருக்கோ, உடன் பிறந்தவர்களுக்கோ யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களில் ஒருவருக்கு உங்களது மனதிலிருக்கும் உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளாக்கி, உங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதுங்கள். அதை ஒரு படி எடுத்து வைத்துக் கொண்டு ஒரிஜினலை அவர்களுக்கு அனுப்பி விட்டு, பிரதியை எங்களுக்கு அனுப்புங்கள். முகவரிக்கான இடத்தில் மின்னஞ்சல் வழக்கத்திலோ அல்லது வாட்ஸப் பழக்கத்திலோ முகவரிக்குப் பதிலாக அலைபேசி எண்ணையோ, மின்னஞ்சல் முகவரியையோ எழுதி விடாதீர்கள். ‘தினமணி’ முகவரிக்கு அனுப்புங்கள்.

கடிதங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசித் தேதி... 20.10.17

10 நாட்கள் அவகாசம் போதும் தானே!

எடுங்கள் உங்கள் எழுதுகோலை, நிரப்புங்கள் மையை... படையுங்கள் உங்கள் மகா காவியத்தை...

அனுப்ப வேண்டிய முகவரி...

தினமணி.காம்
எக்ஸ்பிரஸ் கார்டன்,
29 செகண்ட் மெயின் ரோடு, அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
சென்னை - 600058

சுவாரஸ்யமான, வித்யாசமான கடிதங்கள் தினமணி.காம், சிறப்புக் கட்டுரைப் பிரிவில் பிரசுரிக்கப்படும்.
ஒரு மில்லினர் வீட்டு ‘ஸோ சிம்பிள்’ திருமணம்... இரண்டு கம்ப்யூட்டர்கள் மட்டுமே திருமணச் செலவாம்!

By RKV | Published on : 10th October 2017 11:53 AM




இந்தியா என்றதும் வெளிநாட்டுக்காரர்களுக்கு உடனடியாக ஞாபகம் வருவது என்னவென்று நினைக்கிறீர்கள்? முதலில் சென்னையின் இட்லி, தோசை, சாம்பார் என்று நினைத்து விடாதீர்கள். அதெல்லாம் வட இந்தியர்களுக்கு மட்டும் தான் ஞாபகம் வரும். பொதுவாக இந்தியா என்றதும் உலகத்தின் பொதுப்பார்வை என்ன தெரியுமா? பிரியாணி, பாலிவுட், படாடோபமான நமது பகட்டுத் திருமணங்கள் இவ்வளவு தானாம். இந்த மூன்று விஷயங்களுக்குள் அடங்கிப் போகிறதாம் இந்தியர்களின் வாழ்க்கை. தென்னிந்தியர்களையும் இப்போது இந்த பிரியாணி வகைகள் ஒரேயடியாய் மயக்கித் தான் வைத்திருக்கின்றன என்பதற்கு நமது திருமணங்களில் தவறாது பரிமாறப்படும் பிரியாணிகளே சாட்சி! இன்றைய தேதிக்கு பிரியாணி இல்லாமல் ஒரு திருமணத்தை நிறைவாக நடத்தி முடித்து விடத்தான் முடியுமா என்ன? அதை, விடுங்கள்... அப்புறம் நமது திருமணங்கள்... அடடே ரகம். பணமதிப்பிழப்பு இக்கட்டு நேரங்களில் கூட கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகரான ஜனார்த்தன ரெட்டியால், தன் மகளது திருமணத்தை 500 கோடி ரூபாய் செலவிட்டு டாம்பீகமாய் நடத்தி முடிக்க முடிந்தது என்றால் இந்தியத் திருமணங்களில் ஆடம்பரம் எத்தகைய இடத்தை வகிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் திருமணங்கள், பல குடும்பங்களைக் கடனாளியாக்கி தவிக்க விட்டிருக்கின்றன என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும்.

இந்தியத் திருமணங்கள் என்றாலே, விதம், விதமான பட்டும், நகைகளும், ஊரை அசத்தும் கல்யாணச் சாப்பாட்டு மெனுக்களுமாக பகட்டு பலவிதங்களில் பல்லைக் காட்டும். இந்தியத் திருமணங்கள், இரு மனங்களை இணைக்கும் சங்கம விழாக்கள் மட்டுமல்ல, இரு குடும்பங்களின், சொத்து மதிப்பை பொருட்காட்சியாக்கி ககை விரிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் கூடப் பார்க்கப் படுகிறது. இரு குடும்பங்கள் என்று கூறி திருமண வீட்டாரை மட்டும் குறை சொல்வானேன். திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்வோரையும் சேர்த்தே கற்பனை செய்து பாருங்கள். அவர்களுக்கும் கூட திருமண விழாக்களில் கலந்து கொள்வது என்பது, தங்களிடமுள்ள நகைகளையும், விதம் விதமான விலையுயர்ந்த ஆடைகளையும் சமூகத்திற்குக் காட்டி தங்களது அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பே என்றால்... அது மிகையில்லை.

இந்தியத் திருமணங்களின் பொது இலக்கணம் இப்படியாக இருக்கும் போது, யாராவது, அதிலும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஒரு கோடீஸ்வரர், தமது மகனுக்கு எவ்விதப் பகட்டுகளுமின்றி மிக எளிமையாக பதிவுத் திருமணம் செய்து வைத்தால் அது நிச்சயம் அதிசயமான விஷயமாகத்தான் கருதப்படும்.



கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான பொறிஞ்சு வெலியத் என்பவரது மகன் சன்னி வெலியத்தின் திருமணம் தான் அத்தனை எளிய திருமணமாக நடந்து முடிந்திருக்கிறது. பொறிஞ்சு வெலியத், சுமார் 1200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி என அவரது புரோஃபைல் காட்டுகிறது.



தனது மகனது திருமணம் குறித்து பொறிஞ்சு வெலியத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

இன்று என் மகனது திருமணம் கேரளாவில், சார் பதிவாளர் அலுவலகத்தில் இனிதே நடந்து முடிந்தது. சார் பதிவாளர் வேண்டுகோளின் படி, அலுவலகத்துக்கு என இரண்டு கம்ப்யூட்டர்களை வாங்கி அன்பளிப்பாக அளித்தோம். திருமணத்திற்கான செலவென்றால் அது ஒன்று மட்டும் தான் :)

என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கோடீஸ்வரராக இருந்து கொண்டு, மகனுக்கு இத்தனை எளிமையாகத் திருமணம் நடத்தி வைத்ததில் ஏதாவது உள்நோக்கம் உண்டா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்; ‘ இதில் எந்த உள்நோக்கமும் இல்லை, என் திருமணமும் இப்படித்தான் நடந்தது. அது மட்டுமல்ல என் மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவர், திருமணம் முடிந்ததும் விரைவாக அமெரிக்கா திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருந்தார். உடனடியாகச் சென்று முடித்தாக வேண்டிய அலுவல் அங்கிருந்தது. எனவே மணமகள் வீட்டாரிடம் பதிவுத் திருமணத்திற்கு சம்மதமா? என்று கேட்டதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். அதனால் எளிமையாக திருமணத்தை முடித்துக் கொண்டோம். அதோடு திருமணம் என்றில்லை பொதுவாக எல்லா விஷயங்களிலுமே மக்கள் அவரவர் அறிவிற்கும், ஞானத்திற்கும் உட்பட்ட வகையில் முடிவெடுத்துச் செயலாற்றுகிறார்கள். அவ்வளவு தானே தவிர, இதில் பிரமாதமாகப் பேச ஒன்றுமில்லை’. என்ற ரீதியில் பதில் அளித்திருக்கிறார் பொறிஞ்சு வெலியத்.

பொரிஞ்சு வெலியத் ஈக்விட்டி இண்டலிஜென்ஸ் எனும் நிறுவனத்தின் ஸ்தாபகராகவும், செயல் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் வளர்ந்து வரும் சிறிய அளவிலான பங்கு வர்த்தக நிறுவனங்களில், மிக வேகமாக முன்னேற்றமடைந்து வரும் ஸ்தாபனங்களில் இவருடையதும் ஒன்று எனக் கருதப்படுகிறது.


தீபாவளி பண்டிகையில் வாழ்த்து அட்டைகள் வேண்டாம்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

By DIN | Published on : 11th October 2017 02:08 AM

தீபாவளி பண்டிகையின்போது வாழ்த்து அட்டைகளை அனுப்புவதற்குப் பதிலாக, இணைய வழியே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுமாறு தமது அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது காகிதப் பயன்பாட்டை குறைப்பதுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான சிறு முயற்சியாகவும் இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, வருகின்ற தீபாவளி பண்டிகையின்போது, காகித வாழ்த்து அட்டைகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இணைய வழியே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

இதன் மூலமாக, காகிதப் பயன்பாடு பெருமளவு குறைவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இதற்கு வசதியாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வலைதளத்திலேயே டிஜிட்டல் வாழ்த்து அட்டைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு: 20,000 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ்
By DIN | Published on : 11th October 2017 04:43 AM




தமிழகம் முழுவதும் சுற்றுப்புறங்களைப் பராமரிக்காமல் டெங்கு காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக இருந்த 20 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு (ஜனவரி முதல் செப்டம்பர் வரை ) 11,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்னர் என்று அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் க.குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை களப்பணிகள் நடைபெற்றன. களப் பணிகளை ஆய்வு செய்த பிறகு ஜெ.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: சுகாதாரத் துறையின் தீவிர சோதனை மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 20,000 பேர், டெங்கு கொசு புழுக்களை உற்பத்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. சென்னையில் மட்டும் சுமார் 2,000 கடைக்காரர்கள் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பழைய பொருள்களைச் சேமித்து வைத்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பொது சுகாதாரத் துறை மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸுக்கு இரண்டு நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நோட்டீஸை அலட்சியப்படுத்தினால்...: சுகாதாரத் துறையின் எச்சரிக்கை நோட்டீஸை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.மேலும், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் தண்டனை சட்டப்பிரிவில் இடம் உள்ளது.
பொது மக்களுக்கு வேண்டுகோள்: தமிழகத்தில் 2 கோடி வீடுகள், லட்சக்கணக்கான நிறுவனங்கள் இருப்பதால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க உதவ வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. டெங்குவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சிகிச்சை பெறுவோருக்கு ரூ.2,000: புதுக்கோட்டையில் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பணிகளைப் பார்வையிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ''டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.2,000 வழங்கப்படும்'' என்றார்.

நீதிமன்றம் உத்தரவு: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற (மதுரை) கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல் குத்தூஸ் ஆகியோர் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டில் உள்ளது


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மதுரையில் இருந்து சென்னை செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது : தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து அரசு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களுக்கு உரிய மருத்துவ சேவையை அளித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் காய்ச்சலுக்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. டெங்கு காய்ச்சல் குறித்து பலர் தவறான புள்ளி விவரங்களைப் பேசி வருகின்றனர். ஆனால் அரசு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள் குறித்து சரியான விவரங்களை அறிவித்து இருக்கிறது என்றார். 

24 மணி நேர உதவி மையம்
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குறித்த தகவல்கள் மற்றும் புகார்களைப் பெறுவதற்காக சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 

டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல்களை பொது மக்கள் பெறவும், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க 104 என்ற எண்ணையும், 94443 40496, 93614 82899 ஆகிய செல்லிடப்பேசி எண்களையும் 044 - 2435 0496 / 2433 4811 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், பொது சுகாதார சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தரமான சிகிச்சை: காய்ச்சல் நோயாளிகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைபடி சிகிச்சை அளிக்க, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திரவ உணவுகள் அவசியம்: காய்ச்சல் குறைந்த பின்பும் நீர்ச் சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்னைகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காய்ச்சல் நீங்கிய பின்பும் மூன்று நாள்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போதையில் பேராசிரியர் கலாட்டா



நாமக்கல்: குமாரபாளையம், அரசு கலைக் கல்லுாரியில், தமிழ் பேராசிரியர் போதையில் கலாட்டா செய்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், அரசு கலைக் கல்லுாரி உள்ளது. தமிழ் பேராசிரியராக கண்ணன், 42, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், மது போதையில் வகுப்பறை மற்றும் கல்லுாரி அலுவலகத்தில், தகாத வார்த்தைகளால் பேசியதாக, போலீசாருக்கு புகார் சென்றது. அவர்களும்எச்சரித்து சென்றனர்.
நேற்று மதியம், 12:00 மணியளவில், போதையில் கல்லுாரிக்கு வந்த கண்ணன், பெண் பேராசிரியர்கள், அலுவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கலாட்டா செய்துள்ளார். தகவலறிந்து, குமாரபாளையம் போலீசார் வந்ததும், கண்ணன் வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது.
கல்லுாரி முதல்வர் கீர்த்தி, ''தமிழ் பேராசிரியர் கண்ணன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தார். பல முறை குடி போதையில் கல்லுாரிக்கு வந்து, அலுவலர்களை தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். 
உயர்கல்வி துறை அதிகாரிகளிடம் புகார் தந்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்,'' என்றார்.
இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் : நவம்பரில் புதிய விதிகள்
பதிவு செய்த நாள்10அக்
2017
20:27

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய விதிகள், நவம்பரில் வெளியாக உள்ளன. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில், இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன. கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு, நுாலக, ஆய்வக வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, கல்லுாரிகளின் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். என்.பி.ஏ., எனப்படும், தேசிய தர அமைப்பின் அனுமதி பெற்ற கல்லுாரிகள் மட்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அங்கீகாரத்தை புதுப்பிக்கலாம். இந்நிலையில், வரும் கல்வியாண்டில், இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான விதிகள், நவ., இறுதியில் அல்லது டிச., முதல் வாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ.,யால் வெளியிடப்பட உள்ளன. 

அடுத்த ஆண்டுக்கான விதிகளில், பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஒவ்வொரு கல்லுாரியும், தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் ஏற்படுத்த வேண்டும்; தொழிலக பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும்; திறன்சார் பயிற்சிகளை, மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற விதிகள் இருக்கலாம். புதிய விதிகள் குறித்து, உயர்மட்டக் குழு இறுதி ஆய்வு செய்வதாக, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்து உள்ளார்.

- நமது நிருபர் -
'லாக்' ஆனது, 'டெபிட் கார்டு' ; பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்

பதிவு செய்த நாள்10அக்
2017
22:24




காஞ்சிபுரம்: 'டெபிட் கார்டு' செயல் இழந்ததால், செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த, வெளிநாட்டு இளைஞர், பிச்சை எடுத்தார்.ரஷ்யாவைச் சேர்ந்தவர், பெர்டினிகா, 25: இந்தியாவை சுற்றிப் பார்க்க, சில நாட்களுக்கு முன் வந்தவர், நேற்று முன்தினம், சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் வந்தார்.கையில் இருந்த பணம் செலவாகி விட்டது. தன், 'டெபிட் கார்டு' மூலம் பணம் எடுக்க, ஏ.டி.எம்., இயந்திரம் ஒன்றில், நேற்று காலை, முயற்சி செய்துள்ளார்.
'பாஸ்வேர்டை' தவறுதலாக அழுத்தியதால், ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை; 'லாக்' ஆகிவிட்டது. தொடர்ந்து பல, ஏ.டி.எம்., இயந்திரங்களில் முயற்சித்த அவர், ஏமாற்றம் அடைந்தார்.செலவுக்கு கையில் பணமில்லை; பசியுடன் நகரை சுற்றி வந்தார். காலை, 9:00 மணிக்கு, காஞ்சிபுரம் முருகன் கோவில் அருகே சென்றார்.கோவில் வாசலில், பலர் பிச்சை எடுத்து கொண்டிருந்ததை பார்த்தார். பக்தர்கள் பலர், பிச்சைக்காரர்களுக்கு பணம் போடுவதை பார்த்த அவர், பிச்சைக்காரர்களுடன் உட்கார்ந்து கொண்டார்.கோவில் வாசலில் அமர்ந்து, கையேந்தி பிச்சை கேட்டார். 'வெள்ளைக்காரன் பிச்சை கேட்கிறானே...' என, பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்; சிலர், பிச்சையும் போட்டுள்ளனர்.
வெள்ளைக்காரர் பிச்சை எடுக்கும் தகவல், சிவகாஞ்சி போலீசாருக்கு தெரிந்தது. கோவிலுக்கு வந்த போலீசார், பிச்சை எடுத்த காசை எண்ணிக் கொண்டிருந்த வாலிபரை, ஜீப்பில் ஏற்றி, ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.அங்கு நடத்திய விசாரணையில், டெபிட் கார்டை, அவர் பயன்படுத்த முடியாமல் போனதும், செலவுக்கு பணமில்லாமல், பசியில் வாடியதும் தெரிந்தது.

அந்த இளைஞருக்கு, சாப்பாடு வாங்கி கொடுத்த போலீசார், செலவுக்கு பணம் கொடுத்து, 'சென்னையில் உள்ள, ரஷ்ய துாதரகம் சென்று, பிரச்னையை சொல்லுங்கள்' எனக்கூறி, அனுப்பி வைத்தனர்.இங்கே உள்ளூர்காரர்கள் பலர், பல கோவில்களில் பிச்சை எடுத்து வரும் நிலையில், வெளிநாட்டுக்காரர் பிச்சை எடுத்தது, காஞ்சிபுரம் நகரில் பரபரப்பையும், சிரிப்பையும் வரவழைத்தது.
முன்பணம் தாமதத்தால் அதிருப்தி
பதிவு செய்த நாள்10அக்
2017
20:28

சென்னை: தீபாவளி முன்பணம் தாமதமாகி உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களது மாதச் சம்பளத்தில், 5,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு, முன்பணம் வழங்க, அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வரும், 13க்குள் முன்பணம் வழங்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்து உள்ளனர்.


DINAMALAR

ஐந்து நாள், 'பரோல்' முடிந்து, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல வேண்டி இருப்பதால், சசிகலா மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளார்; அத்துடன், கலக்கமும் அடைந்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வராத தாலும், எதிர்பார்த்த அரசியல் மாற்றங்கள் நிகழாததாலும், விரக்தியில் உள்ளார்.



சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்ரவரி மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவரை பார்ப்பதற்காக, 15 நாள், 'பரோல்' கோரி, சசிகலா விண்ணப்பித்தார். ஆனால், கர்நாடக சிறைத்துறை, ஐந்து நாள் மட்டுமே வழங்கியது. இதையடுத்து,6ம் தேதி மாலை, பெங்களூரில் இருந்து காரில் சென்னை வந்தார். அவருக்கு, அ.தி.மு.க.,வில் செல்வாக்கு உள்ளது என்பதை காட்ட, தினகரன் ஆதரவாளர்கள், ஆங்காங்கே வரவேற்பு அளிக்க, ஏற்பாடு செய்திருந்தனர்; அவர் வந்த கார் மீது, பூக்களை துாவினர்.

வரவேற்பு

மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கணவரை பார்க்க, பரோலில் வந்தவருக்கு, ஆடம்பர வரவேற்பு அளிக்கப் பட்டது, பொதுமக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.'சசிகலாவை பார்க்க, 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள்,10 பேரும், 21 எம்.எல்.ஏ.,க் களும் அணிவகுத்து வருவர்; தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்' என, தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உளவுத்துறையினர் கண்காணிப்பு காரணமாக, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. தினகரன் ஆதரவாளர்களாக உள்ள, இரண்டு எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., கருணாஸ் மட்டுமே, சசிகலாவை சந்திக்க, அவரது வீட்டிற்கு சென்றனர்.மறுநாள் சசிகலா, மருத்துவ மனையில் சிகிச்சை பெறும், கணவரை சந்திக்க சென்றார். அப்போதும், அவரை சந்திக்க யாரும் வரவில்லை.

சசிகலாவும்,சில மணி நேரம் மட்டுமே, மருத்துவமனையில் இருந்தார். மீதி நேரம்,சென்னை, தி.நகரில் உள்ளவீட்டிலேயே தங்கி இருந்தார். அவரது குடும்ப உறவினர்கள் தான், அவரை சந்தித்து பேசினர். அப்போது, சொத்து பிரச்னை எழுந்து உள்ளது; கடும் வாக்கு வாதமும் நடந்துள்ளது.கட்சியும், ஆட்சியும் கையை விட்டுபோன நிலையில், உறவினர்கள் இடையே,சொத்து பிரச்னை பெரிதாக வெடித்து உள்ளது,அவரை கவலை அடைய செய்துள்ளது.
சந்திக்க மறுப்பு

இதற்கிடையே, தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, போனில் சசிகலா தொடர்பு கொண்டுள்ளார்; பலர் போனை எடுக்கவே இல்லை. ஓரிருவர் பேசி உள்ளனர்; ஆனால், சந்திக்க வர மறுத்து விட்டனர்.சிறைக்கு சென்ற போது, தனக்கு ஆதரவாக இருந்தோர், தற்போது எதிரிகளாக இருப்பது, அவரை சோகம் அடையச் செய்து உள்ளது.கணவரை பார்ப்பதற்காக, பரோலில் வந்தவர், மருத்துவமனையில் ஒரு சில மணி நேரம் மட்டுமே இருந்ததை, சமூக வலை தளத்தினர், 'கலாய்த்து' வருகின்றனர்.

அவர், பெரும்பாலான நேரம், குடும்ப பிரச்னை, அரசியல் பிரச்னை குறித்தே, உறவினர்களிடம் பேசி உள்ளார்.அவர் எதிர்பார்த்து வந்த எதுவும் நடைபெறாத நிலையில், இன்று மாலை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி உள்ளதால், கடும் சோகத்தில் இருப்பதாக, அவரது ஆதரவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, October 10, 2017

Deepavali bonus for Tamil Nadu government employees

DECCAN CHRONICLE.

PublishedOct 10, 2017, 1:10 am IST

Festival bonus and ex gratia of Rs. 489 crore will be disbursed among staff.

Tamil Nadu CM Edappadi K. Palanisami

Chennai: Chief minister Edappadi K. Palanisami on Monday announced the Deepavali bonus for 3.69 lakh government employees.

Festival bonus and ex gratia of Rs. 489 crore will be disbursed among staff and contract labourers of various departments and cooperative workers, a statement from the secretariat said.

The Central government raised the salary ceiling from Rs. 10,000 to Rs. 21,000 under the Bonus Act 2015 but the State government has relaxed the ceiling and ensured that all class C and D category staff of government and public sector companies get festival bonus, said the chief minister in an officiaL release.

No immediate court relief for Sarathkumar on Rs 9 lakh seized by EC

DECCAN CHRONICLE.

PublishedOct 10, 2017, 6:22 am IST

The Election Commission of India had on May 7, 2016 seized Rs 9 lakh from Sarathkumar at Nallur Vilakku near Tiruchendur.

Actor Sarathkumar

Chennai: Actor Sarathkumar has failed to get any immediate relief to get back his Rs 9 lakh, seized by the Election Commission during the 2016 assembly by-election, as the Madras high court has directed him to approach the Supreme Court and get a clarification on the issue involving demonetisation.

When the appeal filed by Sarathkumar came up for hearing, a division bench comprising Justices Rajiv Shakder and N.Sathish Kumar directed him to approach the Supreme Court and get a clarification whether the high court can take up the case, since it is connected to demonetisation issue which is already seized of by the SC.

The Election Commission of India had on May 7, 2016 seized Rs 9 lakh from Sarathkumar at Nallur Vilakku near Tiruchendur. Since the cash seized comprised demonetized Rs 500 and Rs 1,000 notes, he approached the high court to direct the ECI and Thoothukudi collector and Tiruchendur returning officer to return the money either by way of cheque or demand draft.
However, a single judge dismissed it. Aggrieved, he filed the present ap-
peal.

விபத்தில் இறந்த வீரர்களின் உடல்கள் அட்டைப் பெட்டிகளில் அனுப்ப என்ன காரணம்?

நந்தினி சுப்பிரமணி




இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டால், முதலில் தாக்கப்படுவது எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை - கப்பல் படை வீரர்களும்தாம். இரவு பகல் பாராது உழைக்கும் இவர்களுக்கு எந்த நேரத்தில், என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற அபாயம் இருக்கிறது. அப்படி ஒரு சூழலில்தான் கடந்த 6 ஆம் தேதி விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இறந்துபோன வீரர்களின் உடல்கள் அட்டைப் பெட்டிகளில் (Card board boxes) வைத்து எடுத்துவரப்பட்டது நாடு முழுக்க பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசம், சுனா என்ற பகுதியில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த 'மீ -17 வி 5 ஹெலிகாப்டர்' விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானப்படை வீரர்கள் ஐந்து பேரும், ராணுவ வீரர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இந்தியா - சீனா எல்லையிலிருந்து 12 கி.மீ தொலைவில் நடந்துள்ளது. அதாவது தவாங்க் பகுதியிலிருந்து 100 கி.மீ தொலைவில் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் பலியான வீரர்களின் உடல்கள் பாராசூட் மற்றும் அட்டைப் பெட்டிகளில் சுற்றிவைக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டன.

விபத்தின்போது வீரர்களின் உடல்கள் சிதைந்துபோயிருந்ததாலும், உடல்களை விரைந்து எடுத்து வரவேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலும் அந்தச் சூழலில் கிடைத்தப் பொருள்களைக் கொண்டு உடல்களை மூடி எடுத்துவந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

லெப்டினன்ட் ஜெனரல் எச்.எஸ். பனாக் (Lt Gen H S Panag) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ' நாட்டுக்காகப் போராடச் சென்ற வீரர்கள், இந்த நிலையில்தான் வீடு திரும்பினார்கள்' என்று புகைப்படத்துடன் தனது வருத்தத்தைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ந்துபோனவர்கள், 'நாட்டுக்காகப் போராடும் மக்களுக்கு இதுதான் இந்திய ராணுவம் கொடுக்கும் மரியாதையா?' என்று கோபக் கேள்விகளைத் தொடுத்தனர். அடுத்தடுத்து இதுகுறித்த சர்ச்சைத் தகவல்களும் இணையங்களில் பரிமாறப்பட்டன.

Seven young men stepped out into the sunshine yesterday, to serve their motherland. India.
This is how they came home. pic.twitter.com/OEKKcyWj0p
— Lt Gen H S Panag(R) (@rwac48) 8 October 2017

ஆரம்பத்தில், வீரர்களின் உடலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தற்காலிகப் பாதுகாப்பைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பரப்பிவிட... அந்தப் புகைப்படம் வைரலானது. வீரர்களின் உடலுக்கு இதுபோன்றதொரு நிலையா... என மக்கள் கொதிக்கத் தொடங்கிவிட்டனர்.

"எல்லையில் இருக்கும் வீரர்களிடம், இந்தப் பொருள்கள் தவிர்த்து வேறு எதுவும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் இறந்துபோனவர்களின் உடல்களை அட்டைப் பெட்டிகளில் வைத்துக் கட்டியிருக்கிறார்கள்" என அதிகாரிகள் விவரிக்கின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை முதலில் மூட வேண்டிய கட்டாயம் இருந்ததால், அங்கு எளிதில் கிடைத்தப் பொருள்களைக் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், மக்கள் தொடர்பு துறை கூடுதல் பொது இயக்குநர் (ADG PI - Indian Army) இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார். வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை மற்றும் இறுதிச் சடங்குகள் குறித்தப் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். மேலும், "இந்திய மலைப் பகுதிகளில் இருக்கும் வீரர்களுக்கு அவரச காலத்தில், இதுபோன்று நடப்பது இயல்புதான். வீரர்கள் வசிப்பது பெரும்பாலும் தொலைதூரப் பகுதியாக இருப்பதுதான் இதற்குக் காரணம். மேலும், உடல்கள் சேதமடைந்த நிலையில் இருந்தன. குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் உடல்களை அந்த நிலையில் காண வேண்டாம் என்பதே இதன் முக்கியக் காரணம்" என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

சில நாள்கள் முன்புகூடப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "உலக தரத்துக்கு எங்களிடம் ஆயுதங்கள் உள்ளன" என பாகிஸ்தானுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். போர்க் காலங்களில், மற்ற நாடுகளை எதிர்க்கப் பலம் இருக்கும் இந்த நாட்டில்தான் வீரர்களின் உடல்களைப் பாதுகாப்பாகக் கொண்டுவர ஏற்பாடு செய்வதற்குப் போதிய வசதியும் சூழ்நிலையும் இல்லை என்பதுபோல இந்தச் செயல் நிகழ்ந்துள்ளது!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 11 பேரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு


By DIN  |   Published on : 10th October 2017 04:56 AM  
gothra

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 20 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையம் அருகே கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதியன்று சபர்மதி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் எஸ்-6 பெட்டிக்கு மர்ம கும்பல் ஒன்று தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றது. இதில் அந்த பெட்டியில் இருந்த 59 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்திக்கு யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கரசேவர்கள் ஆவர். இதையடுத்து, குஜராத் முழுவதும் மூண்ட மதக் கலவரத்தில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையத்தை அப்போதைய குஜராத் அரசு அமைத்தது. இந்த அமைப்பு நடத்திய விசாரணையில், சபர்மதி விரைவு ரயிலின் எஸ்-6 பெட்டியில் ஏற்பட்ட தீக்கு, விபத்து காரணமில்லை; யாரோ அதற்கு தீ வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம், 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. 63 பேரை விடுதலை செய்தும் எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்களில், கோத்ரா ரயில் சம்பவத்துக்கு முக்கிய காரணகர்த்தாவாக சந்தேகிக்கப்படும் மௌலானா உமர்ஜித், முகம்மது அன்சாரி, நானுமியா சௌதுரி ஆகியோரும் அடங்குவர்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எஸ்ஐடி அமைப்பும், தண்டனை விதிக்கப்பட்ட 31 பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் எஸ். தவே, ஜி.ஆர். உத்வானி ஆகியோர் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பை திங்கள்கிழமை வெளியிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
11 பேருக்கு தூக்குத் தண்டனையை கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனையாக குறைத்து உத்தரவிடுகிறோம். 20 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். 63 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து (எஸ்ஐடி சார்பில்) தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், தண்டனையை எதிர்த்து (குற்றம்சாட்டப்பட்டோர்) தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்கிறோம்.
இந்த விவகாரத்தில், மாநில அரசு சட்டம்-ஒழுங்கை காப்பதில் தோல்வியடைந்து விட்டது. அதேபோல், ரயில்வேயும் சட்டம்-ஒழுங்கை காக்கவில்லை. ஆதலால், ரயில் எரிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கும், ரயில்வேக்கும் உத்தரவிடுகிறோம்.
ரயில் எரிப்புச் சம்பவத்தில் காயமடைந்தோருக்கு, அவர்களது காயத்தின் தன்மைகளுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறோம். இந்த வழக்கில், மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை முன்கூட்டியே முடிவடைந்தபோதிலும், தீர்ப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

UGC

UGC panel suggests changing AMU, BHU names; govt says no such intention


By PTI  |   Published: 09th October 2017 11:33 AM  |  

HRD Minister Prakash Javadekar (File | PTI)
NEW DELHI: A UGC panel has recommended removal of words such as 'Hindu' and 'Muslim' from the names of Banaras Hindu University and Aligarh Muslim University even as Union HRD Minister Prakash Javadekar said the suggestion is beyond the committee's mandate.
He said the government has no intention to change the names of AMU and BHU.
The panel, which was formed to probe the alleged irregularities in 10 central universities, has made the recommendation in the audit report of AMU that these words be dropped as they don't reflect the institutions' secular character.
"AMU and BHU are very old institutions, and we do not intend to change their names. We formed a committee to look into the administrative, academic and research audits of universities.
"The mandate of the committee is to look into the administrative, academic and research audits of universities.
We will not take cognisance of what they have recommended outside of this," Javadekar told reporters in Ahmedabad.
While maintaining that he has not seen the panel's report, he clarified that "there is  neither such decision nor is there any such intention to change the names".
According to the UGC panel, the universities can be simply called Aligarh University and Banaras University or be renamed after their founders.
Centrally funded universities are secular institutions but such words related to religion in their names do not reflect that character, a panel member said on the condition of anonymity.
Besides AMU and BHU, other universities that were audited by the panel included Allahabad University, Hemwati Nandan Bahuguna Garhwal University in Uttarakhand, Central University of Jharkhand, Central University of Rajasthan, Central University of Jammu, Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya in Wardha, University of Tripura and Hari Singh Gour University in Madhya Pradesh

Railways ignores speed restriction on 252 old bridges in bad shape


By Richa Sharma  |  Express News Service  |   Published: 09th October 2017 09:54 PM  |  

NEW DELHI: In a major safety lapse, Railway has found that out of 275 railway bridges across the country that need rebuilding for they are very old, speed restrictions for trains to pass through has been put only on 23 bridges. What poses a big threat to safe train operations is that trains continue to pass with usual speed on other 252 bridges that are in bad shape.
The Railway Board had sought details of bridges and it was observed that large number of bridges needing rehabilitation existed on some zonal railways since long. The Central Railways has 61 bridges, East Central Railways 63, South Central Railways 41 and Western Railways 42 bridges pending rebuilding.
“It is also observed that in most of the cases, no speed restriction has been imposed and special inspection schedule has also not been prescribed by chief bridge engineers. On the other hand, there are many bridges where speed restrictions have been imposed on condition basis but they are not categorized under ORN-1 or 2 categories,” said the order issued by A K Singhal, Executive Director Civil Engineering.
The railway bridges are divided in three categories – overall rating number 1, 2, 3. Bridges with overall rating number (ORN-1) rating require immediate rebuilding/rehabilitation, ORN-2 ratings are required to be rebuilt on the programmed basis while ORN-3 bridges require special repairs.        
Railway Board has now pulled up zonal railways for failing to do a time bound planning for completing the rehabilitation work.     
“It seems that proper time bound planning has not been done by railways for rehabilitation of these bridges which creates a doubt whether correct condition rating appropriate to the actual condition of the bridge has been assigned or not. It is also felt that there has been lack of due diligence at Division/headquarter level while revising/confirming the rating,” said Singhal in the order issued last month.
Railway Board has said that the chief bridge engineers (CBEs) should specifically review the position in respect of all bridges assigned in their respective railways and firm up the action plan for their rehabilitation on priority.
A CAG report in 2015 had found that delays in sanctioning of bridgeworks and completion of sanctioned bridgeworks resulted in operation of train services with speed restriction.
It further said that instances of continued operation of speed restriction were noticed on 87 bridges of 13 zones ranging between four to 591 months. Audit assessed an extra expenditure of Rs 103.40 crore on account of operational cost due to continuation of speed restrictions.
“The above demonstrates the casual approach on part of Railways in sanctioning/executing and monitoring of bridgeworks. This resulted in delay in execution of bridgeworks that were identified for rehabilitation leaving the possibility of compromising passenger safety during operation of train services on these bridges. Railways need to ensure an effective monitoring system to be in place for timely execution and completion of bridgeworks,” the CAG report has added.

‘Transparency and accountability in govt depts key to abolish corruption’


By Express News Service  |   Published: 09th October 2017 02:45 AM  |  

A gathering organised by the Arappor Iyakkam to mark the 75th year of the Quit India Movement at Mylapore | D SAMPATHKUMAR
CHENNAI: Commemorating the 75th year of the Quit India Movement, the Arappor Iyakkam organised a public gathering, ‘Kollayane Veliyeru’ on Sunday. The gathering served as a stage which called for establishing Lokayukta in the State. “Transparency and accountability in government departments will be the key to abolish corruption.
“The freedom which we got from the British has been lost to these thieves,” said Jayaram Venkatesan, convener of Arappor Iyakam. “The nation stands first in corruption and Tamil Nadu leads all the States, which is not something that we should feel proud of. It is high time we let the younger generation question and come out to struggle,” said Vasanthi Devi, a former Vice-Chancellor of Manonmaniam Sundaranar University.
V Suresh, general secretary of People’s Union for Civil Liberties, described it a negative sign when authorities do not allow people to question them. “The nation’s democracy was lost long back. There is noone other than the present generation who can rectify their parents’ mistakes,” he said.
The gathering attracted more than 300 people from all walks of life as well as those from other citizen activists movements.
Facebook page begun
A Facebook page where anyone can post complaints of corruption in any department was launched on the occasion.

A day after, sanitary worker from Government Rajaji Hospital sacked, but not doctor whose order she followed


By Thinakaran Rajamani  |  Express News Service  |   Published: 09th October 2017 02:32 AM  |  

MADURAI: A day after Express reported that a sanitary worker was made to administer saline to a patient at Government Rajaji Hospital in Madurai, the hospital management has immediately removed the worker.
But the house surgeon who actually instructed the worker to do the task would face action only after “a detailed inquiry”.
On the larger question of acute shortage of nurses in the hospital, there are no clear answers yet. “Yes, I have terminated her,” Dr D Maruthupandian, Dean, (in-charge) of the government hospital told Express on Sunday. When asked what action has been taken against the house surgeon who instructed her to do the task or the nurses who were absent from duty, he said,”We will conduct a detailed enquiry and based on the findings we will take action on the house surgeons or the nurses.”
The worker, originally a staff of Padmavathi Hospitality and Facilities Management Services (PHFMS) that supplies manpower to various institutions, was found administering saline on Friday night around 11.45 pm on instructions of a house surgeon. With the hospital making her the scapegoat, she now faces loss of employment — all for following the instructions of a superior in her work place. “We will sack her from the agency if the hospital officials say,” said an official of the manpower agency when asked if she was merely transferred from the hospital.
When Express spoke to a few officials of the manpower agency, they said the sanitary worker had done the task only after the house surgeon instructed her so. “They never get involved in treating patients. But it’s the doctors who often ask the worker to do tasks even in operation theaters, which otherwise should be done only by the nurses or technical staff.”
Hospital short staffed
When queried about the shortage of nurses in the hospital, sources in the hospital said, “There are 414 fever cases admitted today alone. We are trying our best to treat them despite shortage of doctors and nurses. We had also taken up  the issue of (manpower) shortage with the government several times.”

Share rare photos of MGR with us: Tamil Nadu government asks public


By PTI  |   Published: 09th October 2017 10:47 PM  |  

Spotted in the VIP stands at the National Stadium, New Delhi, during the India-Malaysia hockey match are Tamil Nadu Chief minister M G Ramachandran and his wife Janaki Ramachandran (right). At his left is J Jayalalithaa signing an autograph book | Express
CHENNAI: Tamil Nadu government which is celebrating the birth centenary of former Chief Minister M G Ramachandran today appealed to those who have rare photographs of the late leader to share the images with it.
Those who have MGR's rare photographs may give it to the photo division of the Information and Public Relations Department in the Secretariat here.
Such photographs will be featured in a collection which will be released at the valedictory of the celebrations, the date for which is expected to be announced later.
They may also send it to the director of the I & PR department by post or via email at jdfieldpublicity@gmail.com, an official release here said.
Tamil Nadu government began the birth centenary celebrations of fomer Chief Minister M G Ramachandran on June 30 at Madurai.
The celebrations are being held in various towns of the State and valedictory of centenary is slated to be held in Chennai.
During the valedictory, it has been planned to release a souvenir, a collection of MGR's rare photographs on his political and film journey, a short film, essays and poems.

NEWS TODAY 25.12.2024