பொங்கல் பரிசு வாங்காதோருக்கு ரூ.1,000 வழங்குவதில் குழப்பம்
dinamalar 18.01.2019
ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வாங்கா தோருக்கு, 1,000 ரூபாய் வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு, 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
நிறுத்தம்
இவை, முதல் முறையாக, அரிசி, சர்க்கரை, எந்த பொருளும் வாங்காத கார்டு என, பாரபட்சம் இல்லாமல், மொத்தம் உள்ள, 2.02 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கும் பணி, 7ம் தேதி துவங்கியது.
அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க
எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பின், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, எந்த பொருளும் வாங்காத, 42 ஆயிரம் கார்டுகளுக்கு மட்டும், 1,000 ரூபாய் வழங்குவது நிறுத்தப் பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பை, 14ம் தேதி வரை வழங்க, கூட்டுறவு மற்றும் உணவு துறை அறிவுறுத்தியது. அதன்படி, அன்று வரை, 1.95 கோடி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், 'ரேஷனில், 1,000 ரூபாய் பரிசு வாங்காதோர், பொங்கலுக்கு பின் வாங்கி கொள்ள லாம்' என, உணவு துறை அமைச்சர், காமராஜ், திருவாரூரில்,தெரிவித்தார். அதன்படி, நேற்று, ரேஷன் கடைகள் திறந்ததும், பொங்கல் பரிசு வாங்காதோர், கடை களில் சென்று கேட்டனர்; ஆனால்,ரூ. 1,000 தர வில்லை.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ரேஷன் கடையிலும், 95 - 97 சதவீதம் வரை, பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தல் அறிவிப்பால், திருவாரூர் தொகுதி யில் மட்டும், 7ம்தேதியில் இருந்து, 1,000 ரொக்கம் வழங்கவில்லை. பின், தேர்தல் ரத்து செய்யப்பட்ட தும், 9ம் தேதியில் இருந்து, அந்த தொகுதியிலும், பணம் வழங்கப்பட்டது.பொங்கல் கொண்டாடவே, பரிசு வழங்கப்பட்டது. வசதியா னோர், விருப்பப்
பட்டு, ரூ.1,000வாங்கவில்லை. இந்த சூழலில், அமைச்சர், பொங்கலுக்கு பின், பரிசு தொகுப்பு வாங்கலாம் என, வாய்மொழியாக தெரிவித்து உள்ளார்.
அறிவிப்பு
இதனால், வீட்டு வேலையாட்கள், 1,000 ரூபாய் வாங்காதோரின் கார்டை எடுத்து வந்து, பணம் கேட்கின்றனர்.அமைச்சரின் அறிவிப்பிற்கு ஏற்ப, எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. இதனால், ரேஷனில், பொங்கல் பரிசு வாங்கா தோர், தற்போது, வந்து கேட்கும்போது, 1,000 ரூபாய் தரவில்லை. இது தொடர்பாக, உயர திகாரிகள், தெளிவான அறிவிப்பு வெளி யிட்டால், 1,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment