Friday, February 8, 2019


பயணிக்கு அசைவ உணவு 'ஏர் - இந்தியா'வுக்கு தண்டனை


Added : பிப் 08, 2019 03:03

சண்டிகர்:'ஏர் இந்தியா' விமானத்தில், சைவ உணவுக்கு பதில், அசைவ உணவு வழங்கியதால் பாதிக்கப்பட்ட பயணிக்கு, 1.27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, விமான நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் கடந்த, 2016ல், வழக்கறிஞர் திக்விஜய் ஜாகர், தன் மனைவி மற்றும் 5 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளுடன், பொதுத்துறை நிறுவனமான, ஏர் - இந்தியா விமானத்தில், தீவு நாடான, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றார்.பயணத்தின் போது, சைவ உணவு வழங்க கோரியிருந்தார்.
ஆனால், திக்விஜய் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு, சைவ உணவுக்கு பதில், அசைவ உணவு வழங்கப்பட்டது.இது குறித்து, விமான ஊழியர்களிடம் திக்விஜய் கேட்டபோது, தகுந்த பதில் அளிக்காததுடன், சைவ உணவும் வழங்கவில்லை. இதனால், திக்விஜய் குடும்பத்தினர், பசியுடன்ஆஸ்திரேலியா சென்று அடைந்தனர்.விமான நிறுவனத்தின் செயலில் அதிருப்தி அடைந்த திக்விஜய், நாடு திரும்பியதும், ஏர் -இந்தியா நிறுவனத்துக்கு எதிராக, பிவானி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.விமான பயணத்தின்போது, உணவு கிடைக்காத தால், பசி மற்றும் மன உளைச்சலால் அவதிப்பட்ட திக்விஜய்க்கு, ஏர் - இந்தியா நிறுவனம், 1.27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, பிவானி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024