Friday, February 8, 2019


'தேஜஸ்' ரயில் அட்டவணை அறிவிப்பு


Added : பிப் 08, 2019 05:36 | 


ஸ்ரீவில்லிபுத்துார்:சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்க உள்ள 'தேஜஸ்' ரயிலின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எப்., பில் நவீன வசதிகளுடன் கூடிய 'தேஜஸ்' ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஜன.,27 ல் மதுரை வந்த பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேஜஸ் ரயில் இயக்கப்படும் என மட்டுமே அறிவிக்கப்பட்டது.

தற்போது ரயில் இயங்கும் நேரக்கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வியாழக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் சென்னை எழும்பூரில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு திருச்சி 10:23, கொடைரோடு 11:38, மதுரைக்கு 12:30 மணிக்கு வந்தடைகிறது. மதுரையிலிருந்து மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு கொடைரோடு 3:28, திருச்சி 4:50, சென்னை எழும்பூருக்கு இரவு 9:30 மணிக்கு சென்றடைகிறது.

15 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலின் பயணநேரம் ஆறரை மணி ஆகும்.திண்டுக்கல்லுக்கு ஏமாற்றம்கொடைரோட்டில் நிற்கும் இந்த ரயில் மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லில் நிற்காது என்பது அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், விழுப்புரத்திலும் நிற்காத நிலையில் இங்கு ஸ்டாப்பிங் கொடுத்தால் புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலுார் மாவட்ட மக்கள் பயனடைவர்.

எதிர்பார்ப்பில் அந்தியோதயா பிரதமர் மோடியின் வருகையின் போது தென்மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் தாம்பரம்-செங்கோட்டை தினசரி இயங்கும் அந்தியோதயா ரயில் இயக்கபடவேண்டும் என்பது 10 மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது நிறைவேறுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024