தாசில்தார் பாலியல் தொல்லை : மாற்றுத்திறன் பெண் போராட்டம்
Added : பிப் 12, 2019 21:49 |
திருநெல்வேலி: பாலியல் தொந்தரவு அளித்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்து, தனக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி பெண் கூறினார்.திருநெல்வேலி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, பேரிடர் மேலாண்மை பிரிவில், தற்காலிக ஊழியராக இருந்தவர் சரண்யா, 32. மாற்றுத்திறனாளியான இவருக்கு, அங்கு தாசில்தாராக உள்ள திருப்பதி, 57, என்பவர், பாலியல் தொந்தரவு அளித்ததாக சர்ச்சை எழுந்தது.விசாரித்த மாவட்ட நிர்வாகம், தாசில்தார் மீது புகார் கூறிய சரண்யாவை, நான்கு மாதங்களுக்கு முன், பணிநீக்கம் செய்தது. தொடர்ந்து, சரண்யா, தாசில்தார் குறித்து, கலெக்டர் ஷில்பாவிடம் புகார் தெரிவித்தார். அதன்பின்னும், தாசில்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து சரண்யா, நேற்று, நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க நிர்வாகிகள் ஆதரவுடன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.சரண்யா கூறுகையில், ''பாலியல் தொந்தரவு தந்த தாசில்தார், திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.''கலெக்டர் அறிவுரைப்படி, போலீசில் புகார் அளித்தேன். ஆனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். அதுவரை என் போராட்டம் தொடரும்,'' என்றார்.
No comments:
Post a Comment