தனியார் பல்கலைக்கு அனுமதி தர புதிய சட்டம்
Added : பிப் 13, 2019 23:37
சென்னை: தனியார் அமைப்புகள், பல்கலை துவங்குவதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில், ஏற்கனவே இரண்டு தனியார் பல்கலைகள் நிறுவ, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்க, தனியார் பல்கலைகளை நிறுவ முன்வரும் அமைப்புகளுக்கு, அனுமதி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.அதற்காக, புதிய சட்ட மசோதாவை, நேற்று உயர் கல்வித் துறை அமைச்சர், அன்பழகன், சட்டசபையில் தாக்கல் செய்தார். இதை, ஆரம்பத்திலேயே எதிர்ப்பதாக, தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., ரகுபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment