Thursday, February 14, 2019

பிளஸ் 2 'டாக்டர்' கைது

Added : பிப் 14, 2019 00:37


திருவண்ணாமலை: பிளஸ் 2 படித்து, 'கிளினிக்' நடத்திய, போலி டாக்டர் கைது செய்யப்பட்டான்.திருவண்ணாமலை மாவட்டம், கோவூரில், பிளஸ் 2 படித்த ஒருவன், கிளினிக் நடத்தி வருவதாக, கலெக்டர் கந்தசாமிக்கு புகார் வந்தது. மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர், பாண்டியன் தலைமையில், நேற்று முன்தினம் மாலை, அந்த கிளினிக்கில், அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதில், விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை ஷாஜகான், 47, என்பவன், பிளஸ் 2 படித்து, அலோபதி மருத்துவம் பார்த்தது தெரிந்தது. மேலும், சட்டவிரோத கருக்கலைப்புக்கு இங்கு வரும் பெண்களை, வெளியூரில் உள்ள போலி டாக்டர்களிடம் பரிந்துரை செய்து, அனுப்புவதும் தெரிந்தது.அங்கிருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கலசப்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, ஷாஜகானை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024