ஆசிரியருக்கு மரண தண்டனை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் தடை
Added : பிப் 16, 2019 02:00
புதுடில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில், நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.ம.பி.,யில் கடந்த ஆண்டு, ஜூலை, 1ல், அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிய நான்கு வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக, மஹேந்திர சிங் கோண்ட், 28, என்ற பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.வழக்கை விசாரித்த சத்னா மாவட்ட நீதிமன்றம், மஹேந்திர சிங்குக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த தண்டனையை, ம.பி., உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.மரண தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மஹேந்திர சிங் மேல் முறையீடு செய்தான். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மரண தண்டனை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment