மணப்பெண்ணின் உடலைக் கிண்டல் செய்து வதந்திகள்: வேதனையில் புதுமணத் தம்பதி புகார்
Published : 14 Feb 2019 18:09 IST
புகைப்படங்கள் என்பவை பொதுவாக மறக்கமுடியாத நாட்களின் இனிய நினைவுகளாக இருக்கும். ஆனால் கேரளாவைச் சேர்ந்த தம்பதிக்கு மாறாத வடுவாகி இருக்கிறது.
கன்னூரைச் சேர்ந்த அனூப் செபாஸ்டின் (29), ஜூபி ஜோசப் (27) என்ற இருவருக்கும் கடந்த பிப். 4-ம் தேதி திருமணம் நடந்தது. அவர்களின் திருமணப் புகைப்படம் அங்கிருந்த செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.
சற்றே உடல் பருமனாக இருக்கும் ஜூபி புகைப்படத்தில் அனூப்பை விட வயதானவராக இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அவர்களின் புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ''பெண்ணின் வயது 48. ஆணின் வயது 25. பெண்ணின் சொத்து மதிப்பு ரூ.25 கோடி, 101 சவரன் தங்கம், 50 லட்ச ரூபாய் ரொக்கம்.. இன்னும் இருக்கிறது.. நம்முடைய செருபுழாவில் நடைபெற்ற கல்யாணம்'' என்று வாட்ஸ் அப்பில் செய்தி தீயாகப் பரவியது.
ஏராளமானோர் இதைப் பகிர, ஜூபியும் அனூப்பும் அதைப் படித்து அதிர்ந்தனர். ஃபார்வர்ட் செய்திகள் தொடர, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் உடலமைப்பை குறிப்பாகப் பெண்களைக் கேலியும் கிண்டமும் செய்யும்போக்கு அதிகரித்துக் கொண்டே உள்ளது. இது ஆபத்தான போக்கு என்றும் கட்டுப்பாடற்ற இணைய சூழலில் வன்முறைகள் கட்டவிழும் அபாயம் உள்ளது எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments:
Post a Comment