Sunday, February 17, 2019

மொபைலில் ஏன் பிலைட் மூட் ஆப்ஷன் உள்ளது என்று தெரியுமா தெரிந்தால் வியப்படைவீர்கள்



மொபைலில் ஏன் பிலைட் மூட் ஆப்ஷன் உள்ளது என்று தெரியுமா தெரிந்தால் வியப்படைவீர்கள்

உங்களின் மொபைல் போனில் பிலைட் மூட் ஆப்ஷன் ஏன் உள்ளது என்று பல முறை யோசித்திருக்கலாம், பிலைட் மூட் ஆப்ஷன் என்பது கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினி மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களில் உள்ளது. நீங்கள் அதை செயற்படுத்தும்போது, உங்கள் சாதனத்தில் இருந்து அனைத்து சிக்னல் பரிமாற்றத்தையும் பிலைட் மூட் நிறுத்தும். பிலைட் மூட் ஆன் செய்யும்போது போனின் நோடிபிகேஷன் பகுதியில் உங்களால் பார்க்கமுடியும்.

பல விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் வயர்லெஸ் சாதனங்களை தடை செய்கின்றன. ஏன் என்றால் விமானங்களில் விமானி பயன்படுத்தும் ரேடியோ தொலைபேசிகளை போன்களில் உள்ள காந்தவிசையால் ஈர்ப்பு ஏற்பட்டு போன்களால் கேட்க முடியும் என்பதால் தான் பிலைட் மூட் ஆன் செய்யச் சொல்கிறார்கள்.

பிலைட் மூட் என்ன செய்கிறது?

இணையதளம் மற்றும் தொலைத்தொடர்பு (internet connection & Telecom) : நீங்கள் அழைப்புகள் செய்யவோ, உரை செய்திகளை அனுப்பவோ அல்லது இணையத்தை அணுகி மொபைல் தரவுகளைப் பயன்படுத்தவோ முடியாது.

வைஃபை (Wi-Fi): எந்த ஒரு புதிய வைஃபை இணைப்பையும் பிலைட் மூட் இணைக்க விடாது.

ப்ளூடூத்: தொலைபேசியில் உள்ள ப்ளூடூத் உங்கள் ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பலவற்றை இணைக்க உதவுகிறது, அனால் பிலைட் மூட் பயன்படுத்தும் போது ப்ளூடூத் பயன்பாட்டை முடக்குகிறது.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024