ஜப்பானில் களைகட்டிய பனித் திருவிழா
ஜப்பானில் ‘சப்போரோ பனித் திருவிழா’ பல லட்சம் மக்களைக் கவர்ந்தது.
பதிவு: பிப்ரவரி 16, 2019 16:10 PM
ஜப்பானின் வடக்குப் பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர் காலத் திருவிழா ஆகும். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 20 லட்சம் மக்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த ஆண்டு சப்போரோ திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாண்டு பனித் திருவிழா கடந்த திங்கட்கிழமை நிறைவுபெற்றது.
இத்திருவிழாவை ஒட்டி, சப்போரோ நகரத்தின் மூன்று பகுதிகளிலும் பனிச்சிற்பங்கள் பரவலாக அமைக்கப்பட்டன. புகழ்பெற்ற கார்ட்டூன்கள், மலைகள், கட்டிடங்களின் வடிவமைப்பு, பனிக் குகைகள், விளையாடும் சிறுவர்கள், குதிரைப் பந்தயம் போன்ற அமைப்புகளில் அந்த பனிச்சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சிற்பங்களில் 5 சிற்பங்கள், 33 அடிக்கு மேல் உள்ளவை. அனைத்து பனிச் சிற்பங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரையும் வெகுவாகக் கவர்ந்தன.
ஒவ்வோர் ஆண்டும் இத்திருவிழாவுக்கு வருவோரின் எண்ணிக்கையும், இங்கு அமைக்கப்படும் சிற்பங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கின்றன.

No comments:
Post a Comment