Tuesday, February 19, 2019

Train info

மிகக் காஸ்ட்லியான சென்னை மெட்ரோ ரயில் பயணம்: கட்டுபடியாகாமல் தவிக்கும் பயணிகள்

By ENS  |   Published on : 18th February 2019 05:46 PM  

இந்தியாவில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகளில் சென்னை மெட்ரோ ரயில் சேவை தான் அதிகக் கட்டணம் வசூலிப்பதில் முதலிடத்தில் உள்ளது.

பிப்ரவரி 12ம் தேதி ஏஜி -  டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டது. அன்றில் இருந்து 2 நாட்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டது.

அந்த இரண்டு நாட்களில் இந்த சேவையைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சம். சென்னை சென்டிரல் - விமான நிலையம் இடையேயான பாதையில் மெட்ரோ ரயில் இலவச பயணத்தின் போதும் இதே அளவுக்குப் பயணிகள் பயணித்தனர். ஆனால், 9 மாதத்துக்குப் பிறகு ஒரு நாளில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் சராசரி 50 ஆயிரம் முதல் 55 ஆயிரமாக உள்ளது.

நேரடியாக விஷயத்துக்கு வருவோம். மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் பலரும், தங்களது பயணத்தை நினைத்து மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக வருத்தப்படுகிறார்கள். 

காரணம், 

உதாரணத்துக்கு ஒருவர் சென்னை மெட்ரோ ரயிலில் கோயம்பேடு - ஆலந்தூர் (10 கி.மீ.) வரை தினமும் பயணிக்கிறார் என்றால், அவர் ஒரு பயணத்துக்கு ரூ.40ஐக் கட்டணமாக செலுத்த வேண்டியது வரும். ஒரு வாரத்தில் 5 நாட்கள் பணிநாட்கள் என்றால் கூட ஒரு வாரத்துக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க அவர் ரூ.400ம், இதுவே ஒரு மாதத்துக்கு என்றால் ரூ.1,600ம் செலவாகும். ஒருவேளை அவர் இரு சக்கர வாகனத்தை மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் செய்வதாக இருந்தால் அதற்கு தினமும் ரூ.10 என்றால் அதற்கு கூடுதலாக ஒரு 250 ரூபாய் அளவுக்கு செலவிட வேண்டும்.

ஒரு வேளை அதே நபர், மெட்ரோ ரயில் சேவையில் இருந்து வேறு பேருந்து அல்லது ரயில் அல்லது ஷேர் ஆட்டோவை பயன்படுத்தினால், ஒரு மாதத்துக்கான அவரது போக்குவரத்து செலவு மட்டும் சில ஆயிரங்களைத் தொடும். ஆனால் அது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் லாபம் என்ற அர்த்தத்தையே மாற்றி விடுகிறது என்பதே பயணிகளின் புலம்பல்.

பயணம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், பயணக் கட்டணம் எளிய மக்களால் செலுத்த முடியாத அளவிலேயே இருக்கிறது. சிறிது காலத்தில் கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்கிறார்கள் சில பயணிகள்.

ஆனால், மெட்ரோ ரயில் சேவையை உருவாக்க சிஎம்ஆர்எல் நிறுவனம் இதுவரை ரூ.19 ஆயிரம் கோடியை செலவிட்டிருப்பதாகவும், அதனை திரும்ப பெறுவதற்கான வருவாய் இனங்கள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்றும் பதிலாகக் கிடைக்கிறது.

மேலும், மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்த விரிவுபடுத்த கட்டணத்தை அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால், மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையிலும், கட்டணம் ஒரே நிலையில் இருக்கிறது. எனவே, இதையே விலைக் குறைப்புக்கு நிகரானதாக பார்க்க வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள்.
 

No comments:

Post a Comment

US opens 2.5L visa interviews in India amid surging demand

US opens 2.5L visa interviews in India amid surging demand Saurabh.Sinha@timesofindia.com 01.10.2024 New Delhi : The US embassy has opened a...