அரசு மருத்துவமனைகளில் 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு: உயர்நீதிமன்றம் அவகாசம்
Added : ஆக 12, 2019 04:27
மதுரை:அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவை அமல்படுத்துவது தொடர்பானஅவமதிப்பு வழக்கில், அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை6 மாதங்கள் அவகாசம் அளித்தது.ம
துரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனு:அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'பயோ மெட்ரிக்' (கைரேகை) வருகைப் பதிவு முறையை அமல்படுத்த தமிழக அரசு 2012 செப்.,20 உத்தரவிட்டது. அதை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. டாக்டர்கள், ஊழியர்கள் தாமதமாக வருவது தொடர்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.2017 ஜன.,25 நீதிபதிகள், 'அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை 4 மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்,' என்றனர்.

இதை நிறைவேற்றாததால் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக இருந்தராதாகிருஷ்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஆனந்தராஜ் மனு செய்தார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்திஅமர்வு விசாரித்தது.அரசுத்தரப்பில், 'படிப்படியாக பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையைஅமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.100 சதவீதம் நடைமுறைப்படுத்த 6 மாதங்கள் அவகாசம் தேவை,' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், '2020 ஜன.,21வரை அவகாசம் அளிக்கப்படுகிறது,' என்றனர்.
No comments:
Post a Comment