Thursday, October 3, 2019

நீட் தேர்வு முறைகேட்டில் சிக்கிய மாணவர் இர்பானின் தந்தை போலி மருத்துவர்: சிபிசிஐடி விசாரணையில் தகவல்; மேலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்குகிறார்கள்

தேனி/தருமபுரி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி போலி மருத் துவர் என தெரியவந்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண் டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த சிபிசிஐடி விசாரணையில் உதித் சூர்யாவுடன், பிரவீன், ராகுல் ஆகியோரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் கள் அனைவரும் அவர்களது தந்தையருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தமிழகம் முழுக்க உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டில் பயிலும் மாணவர் களின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவ ணங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இதில், தருமபுரி மருத்து வக் கல்லூரி முதலாமாண்டு மாண வர் முகமது இர்பான் மீது சிபிசிஐடி போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட் டது. அவரது தந்தையான வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது ஷபியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இர்பான் கடந்த 1-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரண டைந்தார்.

முகமது ஷபியிடம் தேனி சிபிசிஐடி போலீஸார் 3 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில் முக மது ஷபி கர்நாடகாவில் உள்ள விஜய்புரி என்ற ஊரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சில ஆண்டுகள் மட்டுமே படித்துள் ளார். படிப்பைப் பாதியிலே நிறுத்தி விட்டு ஊர் திரும்பிய இவர், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் பிற டாக்டர்களை வைத்து கிளினிக் நடத்தி வந்துள்ளார். பின்னர் இவரே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளார்.

முதற்கட்ட விசாரணை முடி வடைந்த நிலையில் நேற்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முகமது ஷபி ஆஜர்படுத்தப்பட் டார். நீதிபதி பன்னீர்செல்வம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், முகமது ஷபி வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் வேலூர் மாவட் டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுந ராக பணிபுரியும் அவர், "நீட் தேர்வு ஆள்மாறாட்டத்துக்கு உதவிய தர கர்கள் ரஷீத், வேதாசலத்தை நான் யாருக்கும் அறிமுகப்படுத்த வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூரில் உள்ள ஜெயராமன் என்பவரிடம் தரகர் குறித்த தகவல்களைத் தெரிவித் தேன்" என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் கோவிந்தராஜ் நேற்று விடுவிக்கப்பட்டார். விசாரணையில் ஜெயராமன் ஓய்வு பெற்ற மருத் துவ அலுவலர் என்பது தெரியவந்து உள்ளது. அவரை பிடிப்பதற்கான முயற்சியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

2 விதங்களில் நடந்த தவறு

இதுகுறித்து சிபிசிஐடி போலீ ஸார் கூறியதாவது: கர்நாடகாவைச் சேர்ந்த தரகர் ரஷீத் என்பவர்தான் இதில் முக்கிய குற்றவாளி. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் 2 விதங்களில் நடந்துள்ளது. ஒருவருக்குப் பதி லாக இன்னொருவர் நீட் தேர்வை எழுதுவது அல்லது உண்மையான மாணவரும், போலியான நபரும் ஒரே பெயரில் எழுதி அதில் அதிக மதிப்பெண் அடிப்படையில் கல் லூரியில் சேர்வது என்று இந்தத் தவறுகள் நடந்துள்ளன.

மாணவர்களை நேரில் வர வழைத்து அவர்கள் முன்னிலையில் கல்வி, நீட் தேர்வு சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். இதனால், 20-க் கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்க லாம். இவ்வாறு சிபிசிஐடி போலீஸார் கூறினர்.

இதற்கிடையே மாணவர் இர்பான் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024