Thursday, October 10, 2019

இன்று முதல் டிச.7 வரை 60 நாட்களுக்கு நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 



சென்னை

சென்னை எழும்பூர் ரயில் நிலைய யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் இன்று முதல் அடுத்த 60 நாட்களுக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் யார்டில் இன்று முதல் டிசம்பர் 8-ம் தேதி வரையில் தரம் உயர்த்தும் பணி நடப்பதால், சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளன. அதுபோல் விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயில் (56060) இன்று முதல் டிசம்பர் 8-ம் தேதி வரையில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் (12631), சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12261) இன்று முதல் வரும் டிசம்பர் 7-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

கூடுதல் மின்சார ரயில்

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இயக்கப்படுகிறது.

தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே போதிய அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின் றன.

மேற்கண்ட 2 விரைவு ரயில்களில் முன்பதிவு செய்துள்ளவர்கள், அதே டிக்கெட்டில் எழும்பூரில் இருந்து தாம்பரத்துக்கு மின்சார ரயில்களில் பயணிக்கலாம். தேவை ஏற்பட்டால் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024