Friday, October 25, 2019

Doctors strike proposed

அரசு டாக்டர்கள் அக்.30,31ல் ஸ்டிரைக்

பதிவு செய்த நாள்: அக் 25,2019 00:09

சிவகங்கை, ''மத்திய அரசுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து அக்.,30,31ல் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளோம்,'' என சிவகங்கையில் அரசு டாக்டர்கள் சங்க மாநில பொருளாளர் ராமு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:டாக்டர்களாக பணியில் சேர்ந்து 14 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு பணியில் சேர்ந்து 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்கவில்லை. கிராமங்களில் பணிபுரிந்த அரசு டாக்டர்களுக்கு உயர்கல்வியில் 50 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை துவக்கியுள்ளோம்.முதற்கட்டமாக அக்.,24 முதல் 29 வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி மட்டுமே செய்வது. நிர்வாக ரீதியாக கூட்டங்களை புறக்கணிப்பது, நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை என முடிவு செய்துள்ளோம். அக்.,30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் அவசர சிகிச்சை, தீவிர காய்ச்சல் பிரிவுகளில் பணிபுரிவதை தவிர்த்து, மற்ற அனைத்து சிகிச்சை பணிகளையும் புறக்கணித்து 'ஸ்டிரைக்கில்' ஈடுபட முடிவு செய்துஉள்ளோம், என்றார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024