பட்டம் பெறும் மாணவ - மாணவியர் கைத்தறி அங்கி அணிய உத்தரவு
பதிவு செய்த நாள்: அக் 24,2019 22:53
சென்னை,: 'பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி அங்கிகளை அணிய வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ரஜ்னீஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கை:காதி மற்றும் கைத்தறி துணிகளை அணிவதை அதிகப்படுத்த வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையிலும், நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெருகவும், கைத்தறி ஆடைகள் அணிவதை, கல்லுாரிகள், பல்கலைகளில் அதிகரிக்க வேண்டும்.பல்கலைகள் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளின் மாணவர்கள், தங்களின் பட்டமளிப்பு விழாக்கள் உள்ளிட்ட சிறப்பு விழாக்களின்போது, கைத்தறி துணியால் நெய்யப்பட்ட அங்கிகளை அணிய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment