'மிட் நைட்'... 'மிடில் பெர்த்'...'டமார்' 'பரிதாப' ரயில் பயணி காயம்
Added : ஜன 22, 2020 00:10
மதுரை, சென்னை தாம்பரம்- நாகர்கோவில் விரைவு ரயிலில் இரவில் மிடில் பெர்த் கழன்று விழுந்து பயணி ஒருவர் காயம் அடைந்தார்.
Added : ஜன 22, 2020 00:10
மதுரை, சென்னை தாம்பரம்- நாகர்கோவில் விரைவு ரயிலில் இரவில் மிடில் பெர்த் கழன்று விழுந்து பயணி ஒருவர் காயம் அடைந்தார்.
ஜன. 20 இரவு 7:20 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்ட விரைவு ரயில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. 'எஸ் 10' பெட்டியில் பயணிகள் துாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது 'மிடில் பெர்த்' ஒன்று கழன்று விழுந்தது. இதில் இருந்த பயணி கீழே விழுந்ததில் 'லோயர் பெர்த்'தில் துாங்கிய பயணி கடம்பூர் தர்மராஜ் தலையில் காயம் ஏற்பட்டது. சக பயணிகள் அவரை மீட்டனர்.
ரயில் மதுரை வந்ததும் 'பெர்த்'தை பயணிகள் சரி செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை. தர்மராஜுக்கு முதலுதவி அளிக்கவும் யாரும் வரவில்லை. இதனால் அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு அந்த ரயில் நாகர்கோவில் சென்றது.'இச்சம்பவம் குறித்து எந்த தகவலும் இல்லை' என ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வேயில் இயங்கும் சில ரயில்களில் பராமரிப்பு இல்லாத பழைய பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அந்த பெட்டிகளில் கொக்கியை இணைத்து 'மிடில் பெர்த்'தை தொங்கவிடுவது சிரமமாக உள்ளது. இரண்டு கொக்கிகளில் ஒன்றைத்தான் இணைக்க முடியும். அந்த பகுதியில் 'சீட்' கிழிந்தும் இருக்கும்.பயணிகள் கூறுகையில், 'ஓரிரு நாட்களுக்கு முன் சிதம்பரம் அருகே ஒரு ரயிலில் ஜன்னல் தானாக கீழே இறங்கி பயணியின் கைவிரல் துண்டானது. மயிலாடுதுறையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பராமரிப்பு இல்லாத பழைய பெட்டிகளை அகற்ற வேண்டும்' என்றனர்.
'அவரே முட்டிக்கிட்டார்''மிடில் பெர்த்' விழுந்தது குறித்து ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட விளக்கம்:'மிடில் பெர்த்' உடையவில்லை; அது அப்படியே உள்ளது. அந்த பயணி கவனக்குறைவாக 'பெர்த்'தில் உள்ள குமிழில் மோதிக்கொண்டார். இதுகுறித்து அறிந்தவுடன் தனியார் மருத்துவமனை ஊழியர் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது. பயணிக்கு வெளிக்காயம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment