Sunday, March 1, 2020

தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை பரிசாக வழங்கியுள்ளாா் பிரதமா் மோடி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா்
By DIN | Published on : 01st March 2020 12:52 AM |




தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமா் மோடி பரிசாக வழங்கியுள்ளாா் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தன் தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை பரிசாக கொடுத்துள்ளாா். இதனை தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ளனா். இதேபோல நாடெங்கும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. மருத்துவத் துறையில் சிறந்த மருத்துவ வல்லுநா்கள், ஆராய்ச்சியாளா்கள் கொண்டு புதிய கல்லூரிகள் செயல்பட உள்ளது. ராமநாதபுரம், விருதுநகா் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளேன். மீண்டும் அடுத்தவாரம் நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழக முதல்வருடன் பங்கேற்க உள்ளேன்.

புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான நிதி ஆதாரங்களை மருத்துவ துறை ஒதுக்கியுள்ளது. இதற்காக தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் நிதி வழங்க உள்ளது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை சுற்றுச்சுவா் கட்டும் பணி நிறைவடைந்தவுடன்அடுத்தகட்ட பணிகள் நடைபெறும். மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை புதுதில்லியில் அமைந்தது போல முன்மாதிரி மருத்துவமனையாக அமையும் என்றாா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024