Saturday, March 28, 2020

இவர்களின் கதையை கேட்டால்... கொரோனா மனமும் கரைந்து விடும்

Added : மார் 28, 2020 01:06

'பைத்தியங்களா... அப்ப தள்ளி நின்னே பேசுங்க. எப்ப என்ன பண்ணுவாங்கன்னே தெரியாது. திடீர்னு கத்துவாங்க, சிரிப்பாங்க, அழுவாங்க, கையில கிடைக்கறத துாக்கி வீசுவாங்க...'

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், பலரின் மன ஓட்டம் இப்படிதான் இருக்கிறது. யார் இவர்கள், எப்படி இந்த நிலைமைக்கு ஆளானார்கள், அவர்களுக்கான தேவை என்ன என்பதை பற்றி சிந்திக்க கூட யாரும் தயாராக இல்லை.

ஆனால், இப்படிப்பட்ட பல எண்ணங்களுக்கும், தவறான புரிதல்களுக்கும், சவுரிபாளையத்தில் உள்ள செஷயர் மன நல காப்பகம் விடை கொடுக்கிறது.ஆண்கள் 25 பெண்கள் 20 பேர் என மொத்தம், 45 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருடைய கதையையும் கேட்டால், கொரோனா வைரசும் கரைந்து விடும்.

விமானப்படை பைலட் கதை!

ஒரு காலத்தில், இந்திய விமான படையில், விமானியாக இருந்தவர், இங்கு இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா... ஆம்! டேராடூனில் பணியாற்றி, பல மணி நேரம் வானில் பறந்து, பல உயிர்களை காப்பாற்றியவர் இவர். பைக் பிரியரான இவர், மிலிட்டரி புல்லட்டில் அதிவேகமாக பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி, மூளை நரம்பில் அடிபட்டதன் விளைவாக, 23 ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

ராணுவ வீரரும் இருக்கிறார்!

குஜராத், போர்பந்தலில் ராணுவ வீரராக பணியாற்றிய ஒருவரும், இங்கு இருக்கிறார். பணியில் இருந்தபோது, சக வீரர்களால் 'ராகிங்' செய்யப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளானதால் இப்படிப்பட்ட நிலைமை அவருக்கு.

காதலரும் உண்டு!

அதேபோல், பி.எஸ்.சி.,கணிதம் படித்து, சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்த ஒருவர், காதல் தோல்வியால் இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.இங்குள்ள பெண்களோ...பெரும்பாலும் குடும்ப பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இங்கு வந்தவர்கள்.இப்படி, பல பிரச்னைகளால் மனம் இறுகிபோய் காணப்பட்ட இவர்கள், செஷையர் மன நல காப்பகத்தில் கொடுக்கப்பட்ட முறையான பராமரிப்பு மற்றும் பயிற்சியினால் புத்துயிர் பெற்றுள்ளனர்.

ஆம், ஆரோக்கியத்திற்கான பயிற்சி மட்டுமல்லாது, விவசாயம் செய்வதற்கான பயிற்சியும் இவர்களுக்குஅளிக்கப்பட்டு வருகிறது.இதன் விளைவால், இவர்களில் பலர் விவசாயமே செய்கின்றனர். அதுமட்டுமல்லாது, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி பழங்களை, காப்பகத்துக்கு வெளியே சிறிய கடை ஒன்று அமைத்து, விற்பனையும் செய்து வருகின்றனர்.
நம்பிக்கை தானே வாழ்க்கை

No comments:

Post a Comment

NEWS TODAY 15.01.2025