வீட்டில் இருந்து வேலை செய்யவது கடினமாக உள்ளதா? இதை கடைபிடியுங்கள்.
Updated : மார் 28, 2020 00:30 | Added : மார் 28, 2020 00:13 |
கொரோனா அச்சம் காரணமாக அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 21 நாள் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது அலுவலக பணிகளைக் காலம் தாழ்த்தாமல் முடிப்பது முக்கிய கடமையாக உள்ளது.
அலுவலகத்தில் ஒரு சிலருடன் நீங்கள் பழகாதபோது வேலை செய்வது ஒரு சவால் என்று நீங்கள் நினைத்தால், தற்போது நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு உண்மையான சவாலாக இருக்கும். ஏனென்றால், வீட்டில் வேலை செய்வது வசதியாக இருந்தாலும், நாம் உண்மையில் கவனம் செலுத்த முடியாத இடமாக வீடு உள்ளது. சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியாது. அப்படியே வேலையில் கவனம் செலுத்தினால் வீட்டின் நடவடிக்கைகளை கவனிக்க முடியாது. இது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தத்தை வெல்வது எப்படி?
நீங்கள் ஒரு கால அட்டவணையை பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி கால அட்டவணையை பராமரிக்காவிட்டால் வீட்டிலிருந்து வேலை செய்வது மிகுதியான குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிடுங்கள். ஒவ்வொரு பணிக்கும் நேரங்களை ஒதுக்குங்கள், அப்படியாக எந்த ஒரு பணிக்கு அதற்கான நேரத்தை செலவழித்தால் உங்கள் பணியை சுலபமாக முடிக்க உதவுகிறது?
வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, உங்கள் வீட்டிலுள்ள மற்ற வேலையையும் செய்யும் கடமை உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவில் நீங்கள் உங்கள் உணவைத் தவிர்ப்பது சாத்தியமாகக்கூடும். எனவே நீங்கள் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் சரியான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட நேரம் உங்களை சோர்விலிருந்து விடுபடவும் உதவும்.
உங்கள் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து வேலை செய்வது சாத்தியமல்லாதது. உங்களுக்கு ஒரு மேசை அல்லது பணியிடத்தை அமைக்க வேண்டும். உங்கள் அலுவலகத்தில் உங்கள் மேசை எவ்வாறு இருக்குமோ அதேபோல பராமரிப்பது மனதிற்குப் புத்துணர்ச்சி தரும். மேலும் விளக்குகள் இருக்கும் இடத்திலிருந்து பணி செய்ய வேண்டும். முடிந்தால் இசை கேட்டபடி நீங்கள் உங்கள் வேலையை செய்யலாம்.
தினமும் உங்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு குளித்துவிட்டு ஆரம்பிப்பது ஒரு நல்ல செயல். நல்ல ஆடைகளை அணிவது, வழக்கமாக நீங்கள் அலுவலகம் செல்லும்போது செய்யும் சிறிய மேக்-அப் போன்றவற்றை செய்வதில் தவறேதுமில்லை. இது உங்களை மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும். மேலும் சிறப்பாகச் செயல்பட உதவும்.
No comments:
Post a Comment