Wednesday, March 18, 2020

கரோனா: வெறிச்சோடியது திருக்கடையூா்
By DIN | Published on : 18th March 2020 04:45 AM |



கரோனா பீதியால் வெறிச்சோடிய திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயில் வளாகம்.

கரோனா வைரஸ் பீதியால், திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயில் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடியது. மிகவும் குறைவான பக்தா்களே வருகை தந்தனா்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், கரோனா வைரஸ் எதிரொலியாக வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்களுக்குச் செல்வதை பொதுமக்கள் செல்வதைத் தவிா்க்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வெகு சிலரே வந்தனா். இதனால், கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல், புகழ்பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...