இ-பாஸ் கெடுபிடியால் மக்களுக்கு மன அழுத்தம்: வாழ்வாதாரம் பாதிப்பதால் அரசு மறுபரிசீலனை செய்யுமா?
மதுரை 1.8.2020
மாவட்டம், விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வாதார இடங்களுக்கும், நெருங்கிய உறவினர்களின் திருமணம், குடும்ப உறுப்பினர்கள் மரணம் ஆகிய வற்றுக்கு செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஊரடங்கு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்திவிட்டு மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் திருமணம், மருத்துவம், நெருங்கிய உறவினரின் மரணம் மற்றும் வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்கள் இ-பாஸ்க்கு விண்ணப்பித்தால் அதை பரிசீலித்து மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வர தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.
இதற்காக தமிழ்நாடு கோவிட்-19 இ-பாஸ் வெப்சைட் உருவாக்கப் பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிக் காக செல்லும் 7 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நெருங்கிய உறவினர்கள் மரணம், அவசர மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்காக அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் செல்ல சான்றுகள் வைத்து விண்ணப்பித்தாலும் பெரும் பாலான விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படுகின்றன.
இ-பாஸ் விண்ணப்பங்களை, விண்ணப் பித்தவர் செல்லும் மாவட்ட நிர்வாகம்தான் பரிசீலிக்க வேண்டும். ஆனால், புதியவர்கள் நமது மாவட்டத்துக்கு வந்தால் அவர்கள் மூலம் கரோனா தொற்று பரவக்கூடும் என்று கருதி இ-பாஸ் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகின்றனர். தினமும் ஒரு சிலருக்கு மட்டும் பெயளரவுக்கு இ-பாஸ் வழங்குவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஹக்கீம் கூறியதாவது:
சென்னை பெரு நகரம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலமாக தமிழகம் செயல்படுகிறது. ஒவ்வொரு மண்ட லத்திலும் உள்ள மாவட்டங் களுக்கு இடையே மக்கள், அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும், சுப மற்றும் துக்க நிகழ்வுகளுக்காகவும் சென்று வருவார்கள். ஆரம்பத் தில் இ-பாஸ் நேர்மையாக வழங்கப்பட்டன. தற்போது விண்ணப்பதாரர்கள் இ-பாஸ் பெற அதிகாரிகள், ஆளுங்கட்சியினரிடம் பரிந்துரை செய்ய வேண்டி உள்ளது. மரணம் அடைபவர்களுக்கு அவர்களது உறவினர்கள் உடனடியாக எப்படி சான்றுகளை பெற முடியும். மருத்துவம், இறப்பு தவிர்த்து நிறைய அத்தியாவசிய தேவைகள் உள்ளன. ஆனால் அதற்கு இ-பாஸ் மறுக்கப்படுகிறது. இ-பாஸ் நடைமுறை யால் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் வாழ்வாதார இடங்களுக்கும், உறவினர் திருமணங்களுக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் செல்ல முடியாமல் மனஅழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். அதனால், மண்ட லங்களுக்கு இடையேயாவது இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண் டும் என்றார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘தகுந்த சான்று களுடன் விண் ணப்பித்தால் நிராகரிக்க வாய்ப்பே இல்லை’ என்றார்
No comments:
Post a Comment