26.08.2020
இந்தியா முழுவதுமுள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு, செப்டம்பர் மாதம் 18, 19, 20 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 14 மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 4 மாநிலப் பல்கலைக்கழகங்களில், புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 18, 19, 20 தேதிகளில், இந்தியா முழுவதுமுள்ள தேர்வு மையங்களில் நடைபெறுமென, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக ராஜஸ்தான் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும், அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம், குஜராத், ஹரியானா, ஜம்மு, காஷ்மீர், ஜார்கண்ட் ,கர்நாடகா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெற்கு பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த மத்தியப் பல்கலைகழகங்களுக்கும், மேலும் 4 மாநில பல்கலைக்கழகங்களான, ராஜுரிலுள்ள பாபா குலாம் ஷா பல்கலைக்கழகம், பெங்களூருவில் உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கார் பொருளியல் பல்கலைக்கழகம், பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம், ஜோத்பூரில் உள்ள சர்தார் பட்டேல் பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களிலும் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு செப்டம்பர் மாதம் 18, 19, 20 தேதிகளில் நடைபெறுமென அனைத்து பல்கலைக்கழகங்களின், ஒருங்கிணைப்புப் பல்கலைக்கழகமான ராஜஸ்தான் பல்கலைக்கழகம் சார்பாக செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment