Wednesday, August 19, 2020

ஆர்டர் செய்தது ஒன்று.., வந்தது வேறு !! இளைஞரின் நேர்மையை கௌரவித்த அமேசான் நிறுவனம்

ஆர்டர் செய்தது ஒன்று.., வந்தது வேறு !! இளைஞரின் நேர்மையை கௌரவித்த அமேசான் நிறுவனம்

Wednesday, 19 Aug, 7.34 amTamil Express News
இந்த காலத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் ஆன்லைன் ஷாப்பிங்கிங்கு மாறிவிட்டனர். சாப்பாடு உடை என அனைத்தும் ஆன்லைனில் வந்துவிடுகிறது. பலருக்கு பொருட்கள் பொருள் டெலிவரியில் பிரச்சனை அவ்வப்போது வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர் நபில் நஷீத். இவர் ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று அமேசான் மூலம் ரூ.1400 மதிப்புள்ள பவர் பேங்க்கை ஆர்டர் செய்துள்ளார்.

நபில் நஷீத்திற்கு ஆர்டர் செய்த பொருள் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுகந்திர தினம் அன்று அமேசான் டெலிவரி செய்த பார்சலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ரூ.1400 மதிப்புள்ள பவர் பேங்க்கிற்கு பதில் நபில் நஷீத்திற்கு ரூ.8000 மதிப்புள்ள ரெட்மி டியோ மொபைல் தவறுதலாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வந்தவரை லாபம் என்று நினைக்காத அந்த இளைஞர் தனது ட்விட்டரில் அமேசான் நிறுவனத்தை டேக் செய்து, 'சுகந்திர தினத்தன்று எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி, நான் பவர் பேங்க் தான் ஆர்டர் செய்தேன், எனக்கு ரெட்மி மொபைல் வந்துள்ளது, இதை நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்?' என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அமேசான் நிறுவனம் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ரிப்ளை ஒன்றை செய்துள்ளது.

அதில் 'வந்த போனை நீங்களே அதை உபயோகப்படுத்துங்கள் அல்லாது சுதந்திர தினத்திற்கு யாருக்காவது தானம் செய்யுங்கள்' என அவரது நேர்மையை பாராட்டி இப்படி பதில் கொடுத்துள்ளனர்.
Dailyhunt

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...