Wednesday, August 26, 2020

பே.டி.எம்., அமேசானில் வீட்டு சிலிண்டர் முன்பதிவு

பே.டி.எம்., அமேசானில் வீட்டு சிலிண்டர் முன்பதிவு

Added : ஆக 26, 2020 00:24

சென்னை; வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'அமேசான், பே.டி.எம்.,' செயலிகளில் பதிவு செய்யும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன.

பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 2.38 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அந்நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், குரல் வழி தேர்வு, எஸ்.எம்.எஸ்., - இணையதளம், மொபைல் செயலி, வாட்ஸ்ஆப் எண் ஆகியவற்றில், சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.தற்போது, கூடுதல் சேவையாக, 'பே.டி.எம்., அமேசான்' ஆகிய நிறுவனங்களின் செயலி வாயிலாகவும், சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன. அவற்றின் வழியே, சிலிண்டருக்கான கட்டணத்தையும் செலுத்தலாம்.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:அமேசான், பே.டி.எம்., செயலியில் சிலிண்டர் பதிவு செய்ய, அவற்றில் உள்ள, 'பே பில்' என்ற பகுதிக்கு சென்று, காஸ் சிலிண்டர் பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.பின், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தை தேர்வு செய்து, பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவிட்டு, சிலிண்டர் பதியலாம்; காஸ் ஏஜென்சி வாயிலாகவே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024