Friday, August 28, 2020

நீலகிரிக்கு 'இ - பாஸ்' எளிதில் கிடைக்காது

நீலகிரிக்கு 'இ - பாஸ்' எளிதில் கிடைக்காது

Added : ஆக 27, 2020 23:11

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு, சுற்றுலா பயணியர் அதிகம் வருவதால், 'இ -- பாஸ்' விண்ணப்ப பரிசீலனை கடுமையாக்கப்பட்டுள்ளது.தற்போது உள்ள ஊரடங்கு தளர்வின் அடிப்படையில், விண்ணப்பித்த அனைவருக்கும், அரசு இ -- பாஸ் வழங்குகிறது.

இதனால், நீலகிரி மாவட்டத்துக்கு, ஒரு வாரத்தில் மட்டும், 5,000க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர். காட்டேஜ், சொகுசு விடுதிகளில் பலர் தங்கியுள்ளனர்.இங்குள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டாலும், சீதோஷ்ண நிலையை அனுபவிக்க, இ- - பாஸ் தளர்வை சாதகமாக்கி, ஏராளமானோர் நுழைய வாய்ப்புள்ளது

. இரண்டு வாரங்களாக, மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதால், இ -- பாஸ் நடைமுறையை கடுமையாக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''காரணமின்றி மக்கள் வருவதை தடுக்கும் வகையில், உண்மை தன்மையை ஆராய்ந்தபின் தான், இ - பாஸ் அனுமதி வழங்கப்படும். சுற்றுலா பயணிரை தங்க வைக்கும், காட்டேஜ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024