வந்தே பாரத் திட்டத்துக்கு 2 வாரங்கள் தடை விதித்தது ஹாங்காங்
புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக, இந்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்துக்கு, ஹாங்காங் அரசு இரண்டு வாரங்கள் தடை விதித்துள்ளது.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரங்கு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. உலகில் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனால் அந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு கடந்த மே 7-ம் தேதி வந்தே பாரத் திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இந்தியா திரும்பி உள்ளனர். ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கு ஆக., 18 மற்றும் 21 தேதியில், இரண்டு வந்தே பாரத் திட்டங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக 'வந்தே பாரத்' திட்டத்துக்கு 2 வாரங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. விமான பயணங்களுக்கு முன்பாக, பயணிகளுக்கு முறையான கொரோனா பரிசோதனை செய்யவில்லை என தெரிவித்துள்ள ஹாங்காங் அரசு, இன்று (ஆக.,18) முதல் ஆக.,31ம் தேதி வரை தடை விதித்துள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment