வீட்டு கடன் வாங்கியவர் வங்கி முன் தீக்குளிப்பு
Added : ஆக 27, 2020 23:24
தஞ்சாவூர்: வீட்டுக் கடன் வாங்கியவர், வங்கி முன் தீக்குளித்தார்.தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தைச் சேர்ந்தவர், ஆனந்த், 40; வெல்டர். வல்லம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் வங்கியில், 2015ம் ஆண்டு, வீடு கட்டுவதற்காக, 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அதில், வட்டியுடன் சேர்த்து, கடன் தொகை, 13 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடன் தொகையில், 6 லட்சம் ரூபாய் நிலுவை இருப்பதாக, வங்கி நிர்வாகம், ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.நேற்று மதியம், வங்கிக்கு சென்ற ஆனந்த், ''ஏற்கனவே, 13 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளேன்.
மேலும், 6 லட்சம் ரூபாய் நிலுவை இருப்பதாக கூறுவதால், அவகாசம் வேண்டும்,'' என வங்கிப் பணியாளர்களிடம் கேட்டுள்ளார். வங்கி பணியாளர்கள், அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால், வேதனையடைந்த ஆனந்த், வங்கி முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.வல்லம் போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment