Added : ஆக 25, 2020 23:32
சேலம்; கொரோனா பரிசோதனைக்கு பயந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், மலை உச்சிக்கு ஓடிவிட்டனர்.
சேலம் மாவட்டம், கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி, தானமூர்த்திகாட்டைச் சேர்ந்த, 53 வயது விவசாயிக்கு, கொரோனா இருப்பது தெரிந்தது.அவரை, கொளத்துார் சுகாதாரத் துறையினர், மேச்சேரி காவிரி பாலிடெக்னிக்கில் தனிமைப்படுத்தினர்.விவசாயி வீடு அருகே வசிக்கும் மக்களுக்கு, சுகாதாரத் துறையினர், நேற்று காலை, தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொண்டனர்.
இதற்கு அச்சப்பட்டு, அப்பகுதியில் வசித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரு மகன்கள், அருகிலுள்ள கருங்கரடு மலை உச்சிக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.அவர்களை பரிசோதனைக்கு அழைத்தும் வர மறுத்து விட்டனர்.
இதனால், அப்பகுதியைச் சேர்ந்த, 17 பேருக்கு பரிசோதனை செய்த சுகாதாரத் துறையினர், முடிவு வெளியான பின், மலைக்கு சென்று, அங்கு பதுங்கியவர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment