Sunday, August 16, 2020

எம்.பி.பி.எஸ்., தேர்வு எங்கும் எழுதலாம்

எம்.பி.பி.எஸ்., தேர்வு எங்கும் எழுதலாம்

Added : ஆக 16, 2020 00:03

சென்னை; எம்.பி.பி.எஸ்., முதலாம் மற்றும் இறுதியாண்டு அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள், அருகில் உள்ள தேர்வு மையங்களில் எழுதிக் கொள்ள, பல்கலை அனுமதி வழங்கி உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:முதலாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு, எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான, அரியர் தேர்வு நாளை நடைபெற உள்ளது. தேர்வு எழுத தகுதியான மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு செல்ல முடியாத சூழல் எழுந்துள்ளது.அவ்வாறு இருக்கும் மாணவர்கள், பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட, அரசு மருத்துவக் கல்லுாரி மையங்களில் தேர்வு எழுதலாம்.

அப்போது, தேர்வுக்கான நுழைவு சீட்டு அல்லது கல்லுாரி அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் விபரங்களுக்கு, பல்கலையில், www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில், தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024