Friday, December 4, 2020

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெற்றோர் பெயர் பிரச்னை


10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெற்றோர் பெயர் பிரச்னை

Added : டிச 04, 2020 01:20

மதுரை:தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பெற்றோர் பெயர் பிரச்னையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேர்வுத்துறை சார்பில் இந்தாண்டு வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிய முயற்சியாக மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் எழுத்துப் பிழைகள் மற்றும் பிற ஆவணங்களில் இடம் பெற்றுள்ள பெயரில் இருந்து எழுத்துக்கள் மாறி உள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோர் கூறியதாவது:மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்றுள்ள பெயரும், ரேஷன் கார்டு, ஆதார் எண், பான் கார்டு போன்ற பிற ஆவணங்களில் இடம் பெற்ற பெயரும் ஒரே மாதிரியாக இல்லை. பலருக்கு 'வீட்டில் அழைக்கப்படும்' பெயர் சான்றிதழில் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்து பிழைகள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. வரும் ஆண்டுகளில் இதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024