Friday, December 4, 2020

ரஜினி அரசியல் பாதை...


ரஜினி அரசியல் பாதை...

Added : டிச 03, 2020 23:09

* 1995: முத்து படத்தில், 'நான் எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்தில் வருவேன்' என, பஞ்ச் டயலாக் பேசி, முதன்முதலாக தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார் ரஜினி.

* 2017 மே: சென்னையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

* டிச., 31: அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு.

* 2019: லோக்சபா தேர்தலின் போது, 'சொன்னதை செய்வேன். எங்களின் இலக்கு சட்டசபை தேர்தல் தான்' என்றார்.

* 2020 மார்ச், 5: மாவட்ட செயலர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு பின் பேசிய இவர், 'என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்' என்றார்.

* மார்ச், 12: 'கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை' என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்தார்.

* அக்., 29: தன் உடல்நிலை குறித்து வெளியானதகவலுக்கு பதிலளித்த ரஜினி, அது, என்னுடைய அறிக்கை அல்ல; ஆனால், அதிலுள்ள தகவல் உண்மை என்றார்.

* நவ., 30: மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை.

* டிச., 3: ஜனவரியில் கட்சி துவங்குவதாகவும், டிச., 31ல் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

பா.ஜ.,வில் இருந்து அர்ஜுன மூர்த்தி விடுவிப்பு!

நடிகர் ரஜினி துவக்க உள்ள கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, பா.ஜ., பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழக பா.ஜ., அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர், அர்ஜுன மூர்த்தி. தற்போது, ரஜினி துவங்க உள்ள கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக, கட்சி தலைமைக்கு கடிதம் கொடுத்திருந்தார்.அதை, பா.ஜ., தலைமை ஏற்றது. 'கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அவர் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்' என, பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024