Wednesday, December 2, 2020

ராமேஸ்வரம், குருவாயூர் உட்பட முக்கிய நகரங்களுக்கு 17 சிறப்பு ரயில்

ராமேஸ்வரம், குருவாயூர் உட்பட முக்கிய நகரங்களுக்கு 17 சிறப்பு ரயில்

Added : டிச 01, 2020 23:48

சென்னை:சென்னை எழும்பூரில் இருந்து, மன்னை, குருவாயூர், ராமேஸ்வரம் உட்பட, முக்கிய நகரங்கள் இடையே, 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* சென்னை எழும்பூரில் இருந்து, தினமும் இரவு, 10:15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள்அதிகாலை, 5:25 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்

* மன்னார்குடியில் இருந்து, தினமும் இரவு, 10:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 5:55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, வரும், 8ம் தேதி முதலும், மன்னார்குடியில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

* சென்னை எழும்பூரில் இருந்து, தினமும் காலை, 8:25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், கேரளா மாநிலம், குருவாயூருக்கு மறுநாள் காலை, 6:40 மணிக்கு சென்றடையும்

* குருவாயூரில் இருந்து, தினமும் இரவு, 9:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு, 8:35 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, வரும், 8ம் தேதி முதலும், குருவாயூரில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

* சென்னை எழும்பூரில் இருந்து, தினமும் இரவு, 7:15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 8:30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்

* ராமேஸ்வரத்தில் இருந்து, தினமும் மாலை, 5:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, வரும், 8ம் தேதி முதலும், குருவாயூரில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

* சென்னை எழும்பூரில் இருந்து, வாரத்தில் வியாழக்கிழமை மாலை, 6:55 மணிக்கு இயக்கப் படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்

* நாகர்கோவிலில் இருந்து, வெள்ளிக்கிழமைகளில் மாலை, 4:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:45 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, வரும், 10ம் தேதி முதலும், நாகர்கோவிலில் இருந்து, 11ம் தேதி முதலும் இயக்கப்படும்

* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, தினமும் மாலை, 3:20 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:50 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்

* திருவனந்தபுரத்தில் இருந்து, தினமும் மாலை, 5:15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 10:00 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்.,சென்ட்ரல் சென்றடையும். சென்ட்ரலில் இருந்து, வரும், 8 ம் தேதி முதலும், திருவனந்தபுரத்தில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, தினமும் மாலை, 5:00 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 9:00 மணிக்கு கர்நாடகா மாநிலம், மங்களூரு சென்ட்ரல் நிலையம் சென்றடையும்

* மங்களூரு சென்ட்ரலில் இருந்து, தினமும் மாலை, 4:35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 8:00 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில்கள், சென்ட்ரலில் இருந்து, வரும், 8 ம் தேதி முதலும், மங்களூரில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, தினமும் இரவு, 9:40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 10:10 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.

* பாலக்காட்டில் இருந்து, தினமும் மாலை, 3:35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 4:05 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும்

* சென்ட்ரலில் இருந்து, வரும், 8ம் தேதியில் இருந்தும், பாலக்காட்டில் இருந்து, வரும், 9ம் தேதி முதல் இயக்கப்படும்

* கோவையில் இருந்து, தினமும் இரவு, 7:30 மணிக்கு, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக, இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 5:05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்

* நாகர்கோவிலில் இருந்து, தினமும், இரவு, 9:45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:15 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து, வரும், 8ம் தேதியில் முதலும், நாகர்கோவிலில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்.

மங்களூர் சென்ட்ரல் -- திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே, வரும், 10ம் தேதியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் உட்பட, மொத்தம், 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024