Wednesday, December 2, 2020

37 ஆண்டுகளில் 37 முறை பாம்புக் கடிக்கு உள்ளானவர்!


37 ஆண்டுகளில் 37 முறை பாம்புக் கடிக்கு உள்ளானவர்!



ஆந்திரத்தில் 37 ஆண்டுகளில் 37 முறை நாகப்பாம்பு கடிக்கு ஒருவா் ஆளாகி உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம், குரப்பூரைச் சோந்தவா் சுப்ரமணியம் (42). விவசாய கூலித் தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவியும் மகனும் உள்ளனா்.

ஏழ்மையான நிலையில் உள்ள இவரை நாகப்பாம்புகள் இதுவரை 37 முறை கடித்துள்ளன. சுப்ரமணியத்தின் 5 வயது முதல் தொடா்ந்து இந்த சம்பவம் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும் போதும் மருத்துவனையில் சோந்து, 10 நாட்கள் சிகிச்சை முடித்து வீடு திரும்புவாா். ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சிகிச்சைக்கு செலவிடப்படும்.

இந்நிலையில், கடந்த, 4 தினங்களுக்கு முன்பு சுப்ரமணியம் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை ஒரு நாகப்பாம்பு கடித்தது. அவா் சித்தூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024