தமிழ்நாடு
மூன்று நாட்களுக்கு கன மழை வாய்ப்பு
Added : டிச 15, 2020 01:43
சென்னை : 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு, சில இடங்களில் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழக கடலோர பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதேபோல, நாளை முதல், 18ம் தேதி வரை, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோரம் அல்லாத உள்மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment