சென்னை : மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட மாணவர்சேர்க்கை முடிந்துள்ள நிலையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 921 இடங்கள் நிரம்ப வில்லை.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, நேரு விளையாட்டரங்கில், நவ.,18ல் துவங்கியது.
அரசு பள்ளி மாணவர்கள், சிறப்பு பிரிவினர், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. அதன் பின், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், அருந்ததியருக்கான கவுன்சிலிங் நடந்தது.நேற்றைய கவுன்சிலிங்கிற்கு, 358 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்; 283 பேர் பங்கேற்றனர். அதில், அரசு கல்லுாரிகளில், 90 எம்.பி.பி.எஸ்., - ஆறு பி.டி.எஸ்., இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், 42 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.நடப்பு, 2020 - 21ம் கல்வியாண்டுக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பின.தற்போது, அரசு ஒதுக்கீட்டில், சுய கல்லுாரிகளில், 25 எம்.பி.பி.எஸ்., - 896 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இதைத் தொடர்ந்து, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment