Monday, December 21, 2020

அரிசி கார்டுக்கு மாற மீண்டும் அவகாசம்?


அரிசி கார்டுக்கு மாற மீண்டும் அவகாசம்?

Added : டிச 21, 2020 05:03

சென்னை: சர்க்கரை கார்டுதாரர்கள், தங்களின் கார்டை அரிசி வகைக்கு மாற்றுவதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்த நிலையில், அதை மேலும் நீட்டிக்கும்படி, தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், 5.80 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், தங்களின் கார்டை, அரிசி வகைக்கு மாற்ற, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதற்கு, பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது சென்னையில் உணவு வழங்கல் துறையின் உதவி ஆணையர்கள்; மற்ற மாவட்டங்களில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பிக்க, இம்மாதம், 5ம் தேதி முதல் நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.

பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால், பல சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி வகைக்கு மாறாமல் இருந்தனர். இதனால், மொத்த சர்க்கரை கார்டுதாரர்களில், பாதி பேர் கூட மாறவில்லை. இந்நிலையில், முதல்வர்இ.பி.எஸ்., அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட இருப்பதாக, நேற்று முன்தினம் மதியம் அறிவித்தார்.இதனால், பெரும்பாலான சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுக்குமாறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கார்டு மாற்றுவதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. இந்த அவகாசத்தை நீட்டிக்குமாறு, அரிசி வகைக்கு மாறாத சர்க்கரை கார்டுதாரர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024